அமெரிக்கா இல்லனா என்ன? இந்தியர்களுக்கு விசாவை வாரி வழங்கும் இங்கிலாந்து..!

திறன் படைத்த ஊழியர்களில் இந்தியர்களுக்கும் உலகம் முழுவதிலும் இருந்தும் வரவேற்பு உண்டு. ஆனால் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் அங்குள்ளவர்களின் வேலை வாய்ப்பு வெளிநாட்டு ஊழியர்களினால் பாதிப்படைந்து வருவதாகக் குற்றம்சாட்டி விசா வழங்கும் விதிமுறைகளை நெறுக்கி வரும் நிலையில் இங்கிலாந்து அரசு கடந்த சில மாதங்களது வெளிநாட்டவர்களை வேலை செய்ய அனுமதி வழங்கும் விசா முறையினை அதிகப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.

Advertisement

பிரிக்ஸிட்

பிரிக்ஸிட் பிரச்சனைகள் தொடங்கியதில் இருந்து ஐரோப்பிய யூனியம் மற்றும் ஐரோப்பிய இல்லாத நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்குள் வேலைக்கு ஆட்களை எடுப்பதில் சிக்க நீட்டித்து வந்தது. தற்போது அதில் இருந்த சிக்கல்கள் எல்லாம் முடிவுக்கு வந்த நிலையில் விசா வழங்குவது அதிகமாகியுள்ளது.

Advertisement
இந்திய ஊழியர்கள்

கடந்த சில மாதங்களில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த திறன் படைத்த ஊழியர்களுக்கு டையர் 2 விசாவினை அதிகளவில் அளித்துள்ளனர். 2,266 விசக்கள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இது மொத்த விசா எண்ணிக்கையில் 55 சதவீதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய மாணவர்கள்

ஊழியர்களுக்கு விசா வழங்குவது மட்டும் இல்லாமல் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதும் 33 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 18,735 மாணவர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா

இங்கிலாந்திற்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த அண்டில் இங்கிலாந்து சென்ற 4,68,923 வெளிநாட்டவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 41,224 ஆகும்.

சீனர்கள்

இந்தியர்களை அடுத்துச் சீனர்கள் இங்கிலாந்தினை நோக்கிப் படை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எல்லாம் முக்கியக் காரணம் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எதிராக அரசியல் கலம் இயங்கத் தொடங்கி இருப்பதே ஆகும்.

English Summary

Indian IT professionals get more UK work visas
Advertisement