ட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...? வாய்ப்பே இல்ல ராஜா

எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அமெரிக்க உறவு இரு நாடுகளுக்கு ஒரு பக்கம் மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம், தேய்ந்து கொண்டும் இருக்கிறது. உறவு விரிசல் பெற தற்போது இரு பெரு காரணங்கள் அமெரிக்காவுக்கு பலமாக கிடைத்திருக்கிறது. இந்த இரண்டும் நடக்காமல் இருக்க அமெரிகா என்ன எல்லாம் செய்திருக்கிறது என்று பாருங்களேன்.

Advertisement

அமெரிக்க வியாபாரம்

இந்தியா முழுவதும் தன் வர்த்தக கொடி நாட்ட துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா ட்ரம்ப் பொறுப்பேற்ற பின் இதில் அதிக மும்முரம் காட்டத் தொடங்கியது. இந்தியா தான் தற்போது அமெரிக்காவின் மிகப் பெரிய சந்தை. சீனாவோடு சண்ட போட்டாச்சு, சீனாவின் 135 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு பெரிய சந்தையை இழந்ததால், இனி சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்கள் எல்லாம் தேங்கும். இப்போது இந்த தேங்கிய பொருட்களை விற்பதற்கு ஒரு நாட்டைப் பிடிக்க வேண்டும். அது தான் இந்தியா. சீனாவுக்கு நிகரான மக்கள் தொகை, இந்தியர்களின் வாங்கும் திறனும் சீனாவுக்கு நிகரே. ஆக இந்தியா தான் அமெரிக்காவின் மிகப் பெரிய உலக சந்தை. இந்தியாவை விட்டால் இவ்வளவு பெரிய சந்தை இனி உலகில் கிடையாது என்பது ட்ரம்புக்கு நிச்சயம் தெரியும்.

Advertisement
இந்தியாவைக் கொஞ்சிய அமெரிக்கா

"இந்தியா தான் அமெரிக்காவின் சரியான பார்ட்னர்" "இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருந்து கொண்டு இப்படி ஒரு பொருளாதார வளர்ச்சியைப் பெற்றிருப்பது மிகப் பெரிய சாதனை" "பாருங்க இந்தியா தன் பொருளாதாரத்தை, உலகமயமாக்கள் மூலமா, உலகத்துக்கு திறந்துவிட்டதால இன்னக்கி மிகப் பெரிய வளர்ச்சி அடஞ்சிருக்கு, மோடி இதுக்கு பயங்கரமா உழைச்சிக்கிட்டு இருக்காரு" என்று சந்து கிடைக்கும் போது எல்லாம் வந்து நம் கண்ணத்தைக் கிள்ளி கொஞ்சி விட்டுத் தான் போகிறது அமெரிக்கா. குறிப்பாக ட்ரம்ப் வந்த பிறகு. காரணம் சந்தையை தக்க வைப்பது. ஆனால் அந்த கொஞ்சலைக் கெடுக்கும் விதமாக இந்தியா செய்யும் ராஜ தந்திர வேலைகள் அமெரிக்காவுக்கு அத்தனை கடுப்பு ஏத்துகின்றன.

அமெரிக்க எச்சரிக்கை

"இப்படி நான் உன்னைக் கொஞ்சி கொஞ்சி வளர்க்கும் போது, போயும் போயும் என் எதிரியான ரஷ்யா கிட்டயா ஆயுதம் வாங்குவ" என்று கடுப்பும் காட்டி இருக்கிறது. அதோடு இந்தியாவும் சில ராஜ தந்திர வேலைகளையும் நன்றாகவே செய்திருக்கிறது. ரஷ்யா உடனான தன் உறவை வலுப்படுத்து வதையும், ரஷ்யாவைக் கூப்பிட்டே உறுதிப்படுத்தி இருக்கிறது. டீல் வைத்துக் கொண்டதையே சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்காவால், இந்த நல் உறவு மேம்படுத்தல் பணிகளை ஜீரணிக்க முடியுமா என்ன?

இந்திய ஆயுத வியாபாரம்

இந்திய ரஷ்ய உறவு மேம்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்திய ஆயுத வியாபாரம் அமெரிக்காவின் மறு பக்கம். இந்தியா தானாகவே முடிவு செய்து, தானாகவே ஆயுதங்களை வாங்கி, தானாகவே சீனாவைப் போல ஒரு ஆசியாவின் பாதுகாப்பு சக்தி ஆகிவிட்டால்... அமெரிக்க ஆயுதங்களை யாரிடம் விற்பது. இந்த ஆயுதம் விற்கும் காசு கூட மற்றவர்களுக்குக் கிடைக்கக் கூடாதாம். அந்த அளவுக்கு லாப வெறி அமெரிக்க கண்களை மறைக்கிறது. ரஷ்யத் துவேசம் ஒரு பக்கம் இருந்தாலும் அந்த 5 பில்லியன் டாலர் S-400 டீல் நம்மிடம் இந்தியா கேட்கவில்லையே என்று வருத்தம் வேறு.

இந்திய அமைச்சர்களிடம் அமெரிக்க மிரட்டல்

ஜேம்ஸ் மேட்டிஸ் மற்றும் மைக் பாம்பியோ இருவரும் இந்தியாவின் சுஷ்மா சுவராஜ் மற்றும் நிர்மலா சீதாராமன் உடன் பேசி முடித்துவிட்டு சென்றது நினைவிருக்கலாம். அந்த கூட்டத்திலும் "இந்த பாருங்க. எங்களுக்கு நீங்க ரெண்டு விஹ்ச்யத்துக்கு ஓகே சொல்லணும். 1. நீங்க ரஷ்யா கிட்ட S400 வாங்குனா நாங்க தடை விதிப்போம். 2. இந்த ஈரான் காரணுங்க கிட்ட கச்சா எண்ணெய் வாங்காதீங்க. அவங்க கிட்ட எண்ணெய் வாங்குனாலும் நாங்க தடை விதிப்போம்"-ன்னு நேரடியாகச் சொல்லிட்டுத் தான் போனார்கள்.

அஜீத் தோவலிடம் அமெரிக்க மிரட்டல்

இந்த பொருளாதார தடை சம்பந்தமா இரண்டு அமைச்சர்களை பார்த்துப் பேசியது போராமல் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பிரச்னையின் வீரியத்தையும், அதையும் தாண்டி டீல் வைத்துக் கொண்டால் என்ன மாதிரியான பிரச்னைகளை இந்தியா சந்திக்க வேண்டி இருக்கும், என்றும் விளக்கி பயமுறுத்தி விட்டே சென்றார்கள்.

ரஷ்யா ஈரான் டீல் ஓகே

இப்போது... இன்று... இந்தியா அமெரிக்கா சொன்ன இரண்டு மிரட்டல்களையும் அசால்டாக டீல் செய்திருக்கிறது.

அமெரிக்கா: S400 வாங்காதப்பா.
இந்தியா: அதெல்லாம் முடியாதுங்க. எனக்கு இது அவசியம். நாம அப்புறம் பேசிப்போம், என்று ரஷ்யா உடன் 5 பில்லியன் டாலருக்கு டீலை ஓகே செய்தது.

அமெரிக்கா: ஈரான் கிட்ட கச்சா எண்ணெய் வாங்காத.
இந்தியா: வேறு வழி இல்ல, எங்களுக்கு கச்சா எண்ணெய் கட்டாயமா வேணும், எங்களுக்கு ஈரான் தான் பெஸ்ட் சாயிஸ். ஸோ மத்தத அப்புறம் பேசிப்போம் என்று 1.2 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை அனுப்ப பர்சேஸ் ஆர்டரை ஈரானிடம் கொடுத்திருக்கிறது இந்தியா.

எல்லாம் முடித்த பின் அமெரிக்காவிடமே "அப்புறம் என்ன மாப்ள நல்ல இருக்கியா" என்கிற ரீதியில் பேசவும் செய்திருக்கிறது இந்தியா.

 

ட்ரம்பின் கடுப்பு

இந்த இரண்டு விஷயத்தை பல முறை இந்தியாவுக்கு தனியாக ஆள் அனுப்பி வலியுறுத்தியும், கேட்கவில்லை என்கிற கடுப்பு டிரம்புக்கு நிறையவே இருக்கிறது. அந்த கடுப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் "என் முடிவ, இந்தியா ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சிக்கும்"-ன்னு வெளிப்படுத்தி இருக்கார் அமெரிக்க அதிபர் டிரம்ப். குறிப்பு: ட்ரம்ப் நினைச்சா, இந்தியாவோட இந்த ரெண்டு டீலையும் Countering America's Adversaries Through Sanctions Act or CAATSA சட்டத்துக்கு கீழ் கொண்டு வராமா, இந்தியாவோட நட்பா இருக்கலாம். அதாவது ஈரான் கிட்ட எண்ணெய் வாங்குறதையோ, ரஷ்யாகிட்ட S400 வாங்குனதையோ பொருட்படுத்தாம, இந்தியா மேல பொருளாதார தடை விதிக்காம இருக்கலாம். இருக்குமா அமெரிக்கா...?

English Summary

Indian will know my stand very soon, trump is in anger with modi
Advertisement