டாலருக்கு நிகரான ஈரானிய ரியால் 1,28,000 ஆகச் சரிவு.. என்ன காரனம்?

அணு ஆயுத பரவல் சட்டத்தில் இருந்து விலகிய அமெரிக்கா, அடுத்தடுத்து விதித்த பொருளாதாரத் தடைகளால் ஈரானின் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளது.

ஈரானிடம் இருந்து நேச நாடுகளும் சமதூரத்தில் விலகி இருக்க வேண்டும் அமெரிக்க வெளியுறவுத்துறை நிர்ப்பந்தித்துள்ளதால், உலக நாடுகளின் உறவுகளில் இருந்து ஈரான் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

வீழ்ச்சி தொடக்கம்

கடந்த ஏப்ரல் மாதம் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, ஈரானின் நாணய மதிப்பு வீழ்ச்சி காணத் தொடங்கியது. கடந்த மே மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக 42000 ஆயிரமாக இருந்த ரியாலின் மதிப்பு, படிப்படியாக உயர்ந்து மாத இறுதியில் 57,500 ஆக உயர்ந்தது. மே மாதம் 80000 ஆயிரமாகச் சரிந்து பயங்கர வீழ்ச்சியடைந்தது.

பதவிநீக்கம்

பொருளாதாரம் மோசமான நிலைக்குச் சென்றதைத் தொடர்ந்து நிதி அமைச்சர் மசவுத் காபர்சியானை ஈரான் நாட்டு நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்தது. ஊழல் காரணமாக எழுந்த குற்றச்சாட்டால் மத்திய வங்கி தலைவர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

அதிபருக்கும் எதிர்ப்பு

விலைவாசி உயர்வையும், பொருளாதார வீழ்ச்சியையும் கட்டுப்படுத்த தவறிய அதிபர் ரவுகானி மீது, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.

சரிவோ சரிவு

இந்தத் தர்மசங்கடமான நிலையில், டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.இன்றைய நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு 1 லட்சத்து 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 50 சதவீத சரிவைச் சந்தித்துள்ளதால் அதிகப் பட்சம் உச்சம் என்று கூறப்படுகிறது.

திகைப்பு

இதே நிலைமை ஆண்டு இறுதி வரை நீடிக்கும் பட்சத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு 2 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எண்ணெய் ஏற்றுமதி மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈரான் செய்வதறியாமல் திகைக்கிறது.

Have a great day!
Read more...

English Summary

Iran currency hits all time low against dollar. Why?