இந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America

அமெரிக்கா தன் வர்த்தக போரை கிட்ட தட்ட இந்தியா மீது தொடங்கி விட்டது. அமெரிக்காவின் சொல் பேச்சை சமீபத்தில் எந்த இடத்திலும் காதில் போட்டுக் கொள்ளவில்லை இந்தியா. எனக்கு இது தேவை. நான் செய்கிறேன் என்று நடை கட்டியது இந்தியா. பொருத்துப் பார்த்த அமெரிக்க செயலில் இறங்கி இருக்கிறது. இதில் அழகு என்ன என்றால் அமெரிக்கா தான் செய்கிறது என தெரியும், ஆனால் ஆதாரம் இல்லை.

Advertisement

ஏன் கோவம்

கடந்த அக்டோபர் 05 மற்றும் 06 தேதிகளில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து S400 ரக ஏவுகணைகளை 5.4 பில்லியன் டாலருக்கு வாங்க, விற்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அக்டோபர் 08-ம் தேதி இந்தியா, ஈரானிடம் 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணெய்க்கு ஆர்டரும் கொடுத்துவிட்டது. இந்த சரக்குக்கான பணத்தை எப்படிக் கொடுப்பது என்பது வரை முழுமையாக ஆராய்ந்து ஒரு முடிவில் வந்து நிற்கிறது இந்தியா.

Advertisement
டிரம்பின் கோவம்

"நான் எவ்வளவு சொல்லியும் நீ ரஷ்யா கிட்ட ஆயுதம் வாங்குன, சரி-ன்னு விட்டுட்டேன். ஆனா இப்போ நான் கடுமையான தடை விதிச்சிருந்தும், ஈரான் கிட்ட ஏற்றுமதி இறக்குமதி தொடர்பு வெச்சுக்குற. தில்லா 1.2 மில்லியன் டன் எண்ணெய் வேற ஆர்டர் பண்ணி இருக்க. இரு நான் யாரு, என்னோட முடிவு என்னனு நீ ரொம்ப சீக்கிரம் தெரிஞ்சுக்குவே" என்று டிரம்ப் சூசகமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே சொல்லி இருந்தார்.

அமெரிக்க நிலை

அமெரிக்கா என்றால் வியாபாரம். தங்களின் இன்றைய மற்றும் வருங்கால வர்த்தகச் சந்தையாகத் தான் இந்தியாவைப் பார்க்கிறது அமெரிக்கா. அதனால் தான் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு மாலை மரியாதைகள் எல்லாம் கிடைக்கின்றன. இந்தியா உடன் தற்போது நேரடியாக வர்த்தகப் போரை அறிவித்தால் சந்தை காலி. அதே நேரம் இந்தியாவை ஒரு பொருளாதார பலவீனமான நாடாகவும் மாற்றி விடக் கூடாது. இதை எல்லாம் லீகலாக எதுவும் செய்ய முடியாது. எந்த அளவுக்கு இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியமோ அந்த அளவுக்கு அமெரிக்காவுக்கும், இந்த இந்திய சந்தைகள் முக்கியம். அதுக்கு மேல் இந்தியர்களின் வாங்கும் திறன் முக்கியம், என்று மனக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள். எனவே பொருளாதார தடை போட முடியாது. போட்டால் இந்திய சந்தை இல்லாமல் போய்விடும், இந்தியர்களின் வாங்கும் திறனும் குறைந்துவிடும். ஆக சண்டை போடாமல் சமர்த்தாக சந்தையைப் பிடிக்க ஒரு நூல் பிடித்திருக்கிறது.

பின் வாசல்

இந்த முறையை அமெரிக்கா பெரும்பாலும் எல்லா வளமான நாட்டின் மீதும் பிரயோகித்திருக்கிறது. "நான் சொல்வதைக் கேள், இல்லை என்றால் நான் உன்னைக் கேட்க வைப்பேன்" என்பது தான் அமெரிக்கன் ஸ்டைல். அது என்ன ஸ்டைல்... தீவிரவாதம். "ஒருத்தன் செஞ்சா கொலை, அதே 100 பேர் செஞ்சா கலவரம்". இந்த டயலாக்கை அப்படியே அமெரிக்க வெர்சனில் "நான் தாக்குனா அது போர், அதையே பெயர் தெரியாதவங்க செஞ்சா தீவிரவாதம்". அந்த பெயர் தெரியாதவங்கள நான் ஏன் அமெரிக்காவுல இருந்து காசு செலவு பண்ணி அனுப்பணும். பக்கத்துல இருக்குற பாகிஸ்தான்-ல இருந்து கூப்டுக்கிறேன். இந்தியாவைத் தாக்கிய சந்தோஷமும், சர்வதேச தீவிரவாதப் பழியும் பாகிஸ்தானுக்கு போகட்டும். இனி வரும் இந்திய வியாபார லாபமும், இந்தியாவை வழிக்கு கொண்டு வரும் திருப்தியும் அமெரிக்காவுக்கு கிடைக்கட்டும். செம இல்ல.

இதென்ன முதல் முறையா...?

இப்படி அமெரிக்கா நாட்டாமை செய்து சந்தைகளை பிடிப்பது இது என்ன முறையா... நிச்சயமாக இல்லை. இதற்கு சமீபத்தைய உதாரணம் ஈராக் போர். ஜார்ஜ் புஷ் தன் எண்ணெய் பிசினஸுக்காகவும், அமெரிக்க அரசியலில் நல்ல பெயருக்காகவும் சதாம் உசேனை காலி செய்தது, தெற்கு ஆசிய அரபு தேசங்களில் கால் ஊன்ற இஸ்ரேல் மொசாட்களை இன்று வரை அடைகாத்து வருவது, காபி பிசினஸுக்காக நிகாராகுவாவை அடித்துத் துவைத்தது, கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில், குறிப்பாக எண்ணெய் வள நாடுகளில் தம் சார்பாக ஒரு பொம்மை ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்காக ஒசாமாவை வளர்த்துவிட்டது என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இப்படி தனக்கு காசு கிடைக்கும் என்றால் யாரை வேண்டுமானாலும் போட்டுத் தள்ளும், எதை வேண்டுமானாலும் எரித்துக் கொள்ளும் நல்ல குணம் படைத்த நாடு நம் அமெரிக்கா. அவ்வளவு போர் அனுபவம் கொண்ட நாடு என்பதையும் அடிக் கோடு இட்டுக் கொள்ளவும்.

அமெரிக்க பாகிஸ்தான் உறவு

அமெரிக்கா சொன்னால் பாகிஸ்தான் செய்துவிடுமா..? என்று கேட்டால் யெஸ் தான் விடை. பாகிஸ்தான் தனி நாடாக பிறந்த காலத்தில் இருந்தே அமெரிக்காவும், பாகிஸ்தானும் பால்ய நண்பர்கள். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை நிச்சயம் ஏவிவிடும் என்பதற்கு இந்தியர்கள் மறக்க முடியாத உதாரணம் இந்தோ பாக் போர் 1971.
1971-ல் இந்தியா சர்வதேச அளவில் கிழக்கு பாகிஸ்தான் பிரச்னை குறித்து எவ்வளவு சொல்லியும் யாரும் உதவிக்கு வரவில்லை. பின் இந்தியாவே தலையிட்டு வங்காள தேசத்தை பாகிஸ்தானிடம் இருந்து பிரித்துக் கொடுத்தது. அப்போது இந்தியா வெற்றி பெறக் கூடாது என்று பாகிஸ்தான் ராணுவத்துக்கு தன்னால் ஆன அனைத்து ராணுவ உதவிகளையும் செய்தது. இருப்பினும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது ஆச்சர்யம், ஆனால் அது தான் எதார்த்தம். பல் ஆயிரம் கிலோமீட்டர் தள்ளி இருக்கும் நாடுகளையே உண்டு இல்லை என்றாக்கு அமெரிக்காவுக்கு, தான் தாக்க வேண்டிய நாட்டுக்கு அருகிலேயே கடை போட்டு ஒரு நண்பன் உட்கார்ந்திருந்தால் சும்மாவா இருப்பான்.

சிஐஏவும் தீவிரவாதமும்

அமெரிக்க வணீக போர்களை ஒரு புத்தகம் போட்டு ஒரு அடியாளே சொல்லி இருக்கிறார். "Confession of an Economic hitman by John perkins" என்கிற புத்தகத்தில் நாங்கள் எத்தனை நாடுகளின் குடியைக் கெடுத்தோம், எப்படிக் கெடுத்தோம், யாரை எல்லாம் கெடுத்தோம் என்று பட்டியலிட்டுச் சொல்லி இருக்கிறார் ஜான் பெர்க்கின்ஸ். சிஐஏ எப்படி எல்லாம் தீவிரவாதிகளோடு தீவிரவாதியாக இயங்கி அமெரிக்காவுக்கு அனைத்தையும் சாதகமாக்கிக் கொடுக்கும் என்று படம் வரைந்து பாகம் குறிக்கிறார் பெர்கின்ஸ். அதையும் தாண்டி ஒரு நல்ல லைவ் உதாரணம் வேண்டும் என்றால் அல்கொய்தா. அல்கொய்தாவை வளர்த்துவிட்டு, பின் தன் சொல் பேச்சு கேட்காத, அமெரிக்க வெறுப்புணர்வு கொண்ட ஒசாமா பின் லேடனைக் குறி வைத்து சர்வதேச தீவிரவாதத்துக்கு எதிரான போரை தொடங்கியது அமெரிக்கா. ஓசாமாவைக் கொன்று உலக ரட்சகன் வேஷமும் அழகாகப் போட்டுக் கொண்டது. இன்று வரை தீவிரவாதத்துக்கு எதிரான போரை அமெரிக்கர்களே நடத்திக் கொண்டிருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. சரி இந்தியாவுக்கு வருவோம்.

எதில் தாக்குதல்

அமெரிக்கா பாகிஸ்தான் தீவிரவாதிகளை வைத்து, ஈரானில் இருந்து புறப்படும் கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்குவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஈரானில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்தும் ஓமன் நாட்டின் வளைகுடா பகுதிகளைக் கடந்து தான் அரபிக்கடலில் வந்து சேரும். இப்படி சுமார் 1260 கடல் மைல்கள் வரை கச்சா எண்ணெய்க் கப்பல்கள் கடக்க வேண்டும். சுமாராக 5 - 10 நாட்களாவது கடலில் பயணம் செய்து தான், கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து மும்பை துறை முகம் வந்து சேரும். இந்த நேரத்தில் தான் தாக்குதல் நடத்த திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள்.

பயிற்சிகள்

பாகிஸ்தானின் லஷ்கர் இ தாய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய இரண்டு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படை வீரர்களுக்கு மட்டும் ஆள்கடல் தாக்குதல் பயிற்சிகளை அளித்து வருகிறார்களாம். அதுவும் பாகிஸ்தானின் கடற்படையே இந்த ரகசிய பயிற்சிகளை அளித்து வருகிறதாம். இந்த சிறப்புப் பிரிவு தீவிரவாதிகளுக்கு Samundari jihad கடல் ஜிகாதிக்கள் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

என்ன பயிற்சிகள்

ஒரு ஆளை கை மற்றும் கால்கலைக் கட்டி கடலில் எறிந்த பின்னும் தன் மார்புப் பகுதியை மட்டும் வைத்து மிதந்து கொண்டு உயிர் பிழைத்து தன் இலக்கு இடத்தை அடைவது தான் down proofing. இந்த பயிற்சிகள் எல்லாம் தேர்ந்தெடுத்த தீவிரவாதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் பயன்படுத்தும் neoprene suit sets, weight belts, open air circuit breathing apparatus, Gemini or Zodiac dinghies with powerful outboard motor engines போன்ற கருவிகள் எல்லாம் ராணுவ தரத்தில் தயாரிக்கப்பட்டவைகளாம்.

தாக்குதல் திட்டம்

இந்த பயிற்சி கடந்த ஜூன் 2018-ல் இருந்து நடந்து வருவதாக நேஷனல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி (NIA) தெரிவித்திருக்கிறது. இந்த பயிற்சிக்கு பின் இந்திய சரக்குக் கப்பல்களை கடத்தி மிரட்டுவது, இந்தியாவுக்கு வரும் சரக்கு கப்பல்களை மிரட்டிக் கடத்துவது, இந்திய சரக்கு கப்பல்கள் மீது தாக்குவது, குறிப்பாக கச்சா எண்ணெய்க் கப்பல்களை தற்கொலைப் படையினர் மூலம் காலி செய்வது என்று தாக்குதல்களை எதிர்பார்க்கலாம். இல்லை என்றால் இந்திய சரக்கு கப்பல்களோடு மும்பையின் exclusive economic zone (EEZ) வழியாக 26/11 தாக்குதல் நடத்தப்பட்டது போல மீண்டும் ஒரு தாக்குதலை எதிர்பார்கலாம் என்று நேஷனல் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி (NIA) அரசுக்கு எச்சரித்து இருக்கிறது.

உஷாரான கப்பல் படை

இந்த தகவல்கள் அனைத்தும் இந்தியாவின் அனைத்து கப்பல் படை தலைமையகத்துக்கும் அனுப்பி, கடல் படையினரை தயார் நிலையில் வைத்திருக்கிறது இந்தியா. தாக்குதல் நடந்துவிட்டால் இந்தியா என்ன மாதிரியான நஷ்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று இந்தியாவுக்கு தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவுக்கு ஒரு யூகம் இருக்கிறது.

எத்தனை நல்ல திட்டம்

இந்த தாக்குதல் வெற்றி பெற்றால், இந்தியா தானாக ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை கைவிடும் வாய்ப்பு அதிகம். எனவே அமெரிக்காவின் திட்டப்பட்டி இந்தியாவை நேரடியாக பகைத்துக் கொள்ளவும் இல்லை, இந்தியர்களின் பணத்தை, வாங்கும் திறனை பாதிக்கவும் இல்லை. சரி தானே. இதை எல்லாம் விட கொடுமை என்ன என்றால், இந்த சம்பவங்கள் எல்லாம் அமெரிக்கா தான் செய்கிறது என்பதை நிரூபிக்க, இந்தியாவிடம் எந்த வலுவான ஆதாரங்களும் இல்லை. அடிக்கடி பாகிஸ்தானும், அமெரிக்காவும் குசு குசு வென்று பேசிக் கொள்வதைத் தவிர. ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? விழித்தெழு இந்தியா...!

English Summary

Terrorist planned to execute an attack against Indian merchant ships or in Indian harbor
Advertisement