வர்த்தக சகாப்தம் முடிவுக்கு வருகிறது.. அலிபாபாவிலிருந்து விலகினார் ஜாக் மா!

வர்த்தக உலகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வரப்போவதாக ஊடகங்கள் அனுமானித்துக் கொண்டிருந்த நிலையில், ஆன் லைன் வர்த்தகத்தில் அனாயாசமான சாதனைகளை நிகழ்த்திய அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா பதவி விலகப் போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது உலகளவில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கோடீசுவர வர்த்தகராக அவதாரம் எடுத்துள்ள ஜாக் மா, அலிபாபா நிறுவன இயக்குநர்களில் ஒருவராகத் தொடர்வார் எனத் தெரிவித்துள்ள நியூயார்க் டைம்ஸ், நேரத்தையும், செல்வத்தையும் கல்வி அறக்கட்டளையில் செலவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பில்கேட்ஸ் அனுதாபி

ஜாக் மாவை அதிகம் கவர்ந்த மனிதர்களில் பில்கேட்சுக்கு எப்போதும் இடமுண்டு. பில்கேசிடம் கற்றுக்கொள்ள ஏராளமான நல்ல விஷயங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தாம் எப்போது பணக்காரனாகவே இருக்க முடியாது என்ற இயற்கையின் யதார்த்தத்தைப் புரிந்து வைத்துள்ள ஜாக், ஆனால் முன்னதாகவே ஓய்வு பெற முடியும் என்கிறார். மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்புவதாகவும், அலிபாபாவை விட அது நிறைவைத் தருவதாகவும் கூறியுள்ளார்.

துணிகர முயற்சி

2013 ஆம் ஆண்டில் அலிபாபாவில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒரு ஆங்கில ஆசிரியரால், உலகச் சந்தையை வெல்ல முடிந்திருக்கிறது. ஆன்லைன் சில்லறை வர்த்தகம், ஹாலிவுட் திரைப்படம், பணப்பரிவர்த்தனைகளில் எடுத்த துணிகரமான முயற்சி ஒரே ஆண்டில் அலிபாபாவுக்கு 400 பில்லியன் டாலர்களை ஈட்டித் தந்தது.

ஜாக் மாவின் அவதாரம்

54 வயதை எட்டியுள்ள ஜாக் மா 40 பில்லியன் டாலருக்கு சொந்தக்காரராக வளர்ந்தார். ஏறக்குறைய ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்னர்த் தற்செயலாக அலிபாபா நிறுவனத்துக்குள் நுழைந்தார். இன்று சீனாவின் அங்கீகரிக்கப்பட்ட பெரிய முதலாளியாக வளர்ந்துள்ளார். இருப்பினும் அவர் பணத்தைப் பெரும் பொருட்டாகக் கருதியதில்லை.

வர்த்தகத் தந்திரம்

ஜாக் மாவின் இந்த அதிர்ச்சிகரமான முடிவு அலிபாபா நிறுவன பங்குதாரர்களை அசைத்துப் பார்த்துள்ளது. நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துப் பேசிய ப்ரோக் சில்வர்ஸ், ஜாக் மாவின் வர்த்தகத் தந்திரம் நிறுவனத்தின் அடித்தளத்தை வலுவாக்கி இருப்பதாகக் கூறினார். இதேபோல் சீன நிறுவனங்களிலேயே அலிபாபாவின் நிர்வாகக் குழு வலுவானது என்றார்.

ஜாக் மா அறக்கட்டளை

பிரபலமான சில மனிதர்களைப் பயமுறுத்திய கல்வி ஜாக் மாவையும் விடவில்லை. சீனா தேசிய பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது 2 தேர்வுகளில் தோல்வியடைந்திருக்கிறார் ஜாக். தாம் நல்ல மாணவனாக இல்லையென்றாலும், முன்னேறியிருப்பதாகக் கூறுகிறார். எப்போதுமே தாம் கற்றுக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ஜாக் மா அறக்கட்டளை மூலம் சேவையைத் தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்.

அமெரிக்காவைக் கவர்ந்த ஜாக்

அலிபாபாவின் தலைவராக இருந்தபோது ஜாக் மாவின் வழிகாட்டல் உலகளாவிய வளர்ச்சிக்கு உதவியது. அவரது அபரிமிதமான வளர்ச்சியும் புத்திசாலித்தனமான உத்திகளும் அமெரிக்க அதிபரைக் கவர்ந்தது. அதனால் தேர்தல் முடிந்ததும் முதன் முதலாக ஜாக் மாவை சந்தித்தார் டொனால்டு டிரம்ப்.

முகேஷ் அம்பானி

ஆசிய கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து சில மாதங்கள் முன்பு முகேஷ் அம்பானி இவரைப் பின்னுக்கு தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Jack Ma Step Down’s From Alibaba And Goes Back To Teaching