சீனாவை பின்னுக்குதள்ளிய ஜப்பான்.. இந்தியாவின் நிலை என்ன..?

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தை பட்டியலில் 2வது இடத்தில் கெத்தாக இருந்த சீனா தற்போது அமெரிக்கா விதித்துள்ள அதிகளவிலான வர்த்தகக் கட்டுப்பாடுகள் மூலம் சீன பங்குச்சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடு அதிகளவில் வெளியேறியுள்ளது.

இதன் எதிரொலியாகத் தற்போது சீன பங்குச்சந்தையின் மதிப்பு 6.09 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இதனால் உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகள் பட்டியலில் சீனா 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

சீனா - ஜப்பான்

சீனா பங்குச்சந்தையின் வீழ்ச்சியால் ஜப்பான் பங்குச்சந்தை 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது ஜப்பான் பங்குச்சந்தையின் சந்தை மதிப்பு 6.17 டிரில்லியன் டாலராகும்.

முதல் இடம்

முதல் இடத்திற்கும் அமெரிக்கப் பங்குச்சந்தையின் மதிப்பு 31 டிரில்லியன் டாலராகும்.

வரலாறு

2014ஆம் ஆண்டில் ஜப்பான் பங்குச்சந்தையைப் பின்னுக்குத்தள்ளி சீனா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் பின் 2015ஆம் ஆண்டில் சீன பங்குச்சந்தை மதிப்பு 10 டிரில்லியன் என்ற உச்சத்தை அடைந்தது.

சீன பங்கு சந்தை

அதன் பின் பல்வேறு காரணங்களுக்காகச் சீன பங்குச்சந்தையின் மதிப்புப் படிப்படியாகக் குறைந்தது. தற்போது அமெரிக்காவின் வர்த்தகத் தடையால் அதிகளவிலான பாதிப்பை சந்தித்து வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Japan dethrones China to become world’s second biggest stock market