டெஸ்லா பங்குகளை விற்ற பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ்..!

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ டெக் நிறுவனமாகத் திகழும் டெஸ்லா-வின் டாப் 10 பங்குதாராக இருக்கும் பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் தனது பங்கு இருப்பை 5இல் ஒரு பங்கை குறைத்துள்ளது.

Advertisement


இதன் மூலம் டெஸ்லா நிறுவனத்திஸ் பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸின் பங்கு இருப்பு அளவு தற்போது 21 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த மாதம் எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தைத் தனியார் நிறுவனமாக மாற்றத் திட்டமிட்டுள்ள செய்தியை வெளியிட்ட நிலையில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு அதிகளவில் குறைந்தது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள் மத்தியிலும் சர்ச்சை நிலவியது.

Advertisement

ஆனால் இந்தச் சர்ச்சைக்கு முன்னதாகவே பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம் தனது பங்கு இருப்பைக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், சுமார் 3 மில்லியன் டெஸ்லா பங்குகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இன்னும் 11.2 மில்லியன் பங்குகளைத் தன்னிடம் வைத்துள்ளது.

இந்த 11.2 மில்லியன் பங்குகளின் மதிப்பு 4 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Major Tesla shareholder Fidelity cuts stake by 21%
Advertisement