ஒரு நிறுவனத்தை வளைத்துப்போடுவது எப்படி..? மார்க் ஜுக்கர்பெர்க்-இன் தந்திரம் இதுதான்..!

சிறிய நிறுவனங்களைக் கையகப்படுத்துவதில் கூகுளை விடப் பேஸ்புக் நிறுவனம் திறமையாகச் செயல்படுகிறது என்ற பெயரை வாங்கியுள்ளது. எதிர்காலச் சந்தையைக் குறிவைத்து மிகவும் தந்திரமாக அகுலஸ் நிறுவனம் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்தியதில் கூகுளை தோற்கடித்து விட்டது பேஸ்புக்.

ஒரு நிறுவனங்களை வாங்குவதைப் பற்றிய தன்னுடைய பார்வையை, நுணுக்கங்களைச் சமீபத்தில் மார்க் ஜுக்கர்பெர்க் பகிர்ந்து கொண்டார்.

அவருடைய நான்கு முக்கிய நுணுக்கங்கள் இதோ இங்கே..

முதலில் உறவுகளை உருவாக்குங்கள்

மார்க் ஜுக்கர்பெர்க் நிறுவனங்களை வாங்குவதற்கு முன் அதனை உருவாக்கியவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்வார் .

நோக்கங்களைப் பகிர்ந்து கொள்ளல்

மார்க் ஜுக்கர்பெர்க் கருத்துப்படி அகுலஸை $4 பில்லியனுக்கும் குறைவாகப் பெற முடிந்தது. ஏனென்றால் அவர் அகுலஸை கையகப்படுத்த விரும்பியவுடன் அதற்கான தொலைநோக்கு பார்வையை உருவாக்கி, அதை வாங்க விரும்பிய அவருடைய குழுவில் உள்ள அனைவரின் ஒத்துழைப்புடன் செயல்பட்டார்.

தந்திரமாகச் செயல்பட வேண்டும்

ஜுக்கர்பெர்க் சில நேரங்களில் சிறிய துவக்க நிறுவனங்களைப் பயமுறுத்துவதன் மூலம், அவர்களது வர்த்தகத்தைத் தனியாக இயக்க எவ்வளவு கடினமானது என்பதைக் கற்பனை செய்யச் செய்து அவர்களைப் பயமுறுத்தி கையகப்படுத்தி விடுவார்.

வலிகள்

"உங்களோடு இணைய விரும்புவர்களை, நம்ப வைக்க முயற்சிக்கும் போது, அவர் அவரது நிறுவனத்தை உருவாக்கி நடத்திக்கொண்டு செல்லும் வழிகளில் ஏற்பட உள்ள அனைத்து வலியையும் புரிந்து கொள்ள வைத்துவிட்டாலே நீங்கள் வென்றுவிடலாம்" என்கிறார் ஜுக்கர்பெர்க் .

ஸ்னாப்சாட்

மூன்றாண்டுகளுக்கு முன் ஸ்னாப்சாட் நிறுவனத்தின் இவான் ஸ்பைகெல் லிடம் ஜுக்கர்பெர்க் அதை $3 பில்லியனுக்கு விலை பேசிய போது இந்தத் தந்திரத்தை உபயோகித்தாரா தெரியவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தை அவர் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

 

மிகமுக்கியமான ஒன்று

ஓய்வூதியத்திற்காகத் திட்டமிடும் போது கவனிக்க வேண்டிய மிகமுக்கியமான ஒன்று இது..!

 

 

Have a great day!
Read more...

English Summary

Mark Zuckerberg secrets for acquiring companies