மைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..?

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாடெல்லா, இந்நிறுவனத்தில் தனக்கு இருந்த பங்கு இருப்பில் 3இல் ஒரு பங்கு பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

இதன் மூலம் சுமார் 35 மில்லியன் டாலர் அளவிலான தொகையைச் சம்பாதித்துள்ளார் சத்ய நாடெல்லா.

3.28 லட்சம் பங்குகள்

நாடெல்லா சுமார் 3,28,000 மைக்ரோசாப்ட் பங்குகளை 109.08 டாலர் முதல் 109.68 டாலர் வரையிலான தொகைக்கு விற்பனை செய்துள்ளார். இதன் இந்நிறுவனப் பங்குகளின் அதிகப்படியான விலை என்பது குறிப்பிடத்தக்கது.

35 மில்லியன் டாலர்

இந்தப் பங்கு விற்பனை மூலம் சத்ய நாடெல்லா சுமார் 35 மில்லியன் டாலர் தொகையைப் பெற்றுள்ளதாக அமெரிக்கப் பங்குச்சந்தை அமைப்பு தெரிவித்துள்ளது.

15 மடங்கு அதிகப் பங்குகள்

சத்ய நாடெல்லா தனது அடிப்படை சம்பள அளவை விடவும் 15 மடங்கு அதிகமான பங்குகளை வைத்திருக்க வேண்டும் என்னும் விதி உள்ளது. இந்நிலையில் தற்போது குறித்த அளவிற்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ள காரணத்தால் சத்ய நாடெல்லா உபரி பங்குகளை விற்பனை செய்துள்ளார்.

வளர்ச்சி

கடந்த ஆண்டில் மட்டும் மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் சுமார் 53 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் 50 வயதாகும் சத்ய நாடெல்லா இன்னும் 7,78,596 மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகளை வைத்துள்ளார்.

சம்பளம்

2017ஆம் ஆண்டில் இவரது அடிப்படை சம்பளம் 1.45 மில்லியன் டாலர், இது மொத்த சம்பள அளவை ஒப்பிடுகையில் 20 மில்லியன் டாலர் அளவை விடவும் அதிகமாக உள்ளது.

Read more about: microsoft ceo nadella share

Have a great day!
Read more...

English Summary

Microsoft CEO Nadella earns USD 35 million in share sale