நெட்பிளிக்ஸ் உயர் அதிகாரி திடீர் ராஜினாமா..!

இன்றைய இளைய தலைமுறையினரின் பொழுதுபோக்கு உயிர் நாடியாக விளங்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான டேவிட் வெல்ஸ் சுமார் 8 வருடப் பணிக்குப் பின் தற்போது தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisement


இவர் தலைமையில் தான் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல முன்னணி ஹாலிவுட் ஸ்டூடியோ-க்களை விடவும் அதிகமான பணத்தைத் திரைப்படத்திலும், டிவி ஷோக்களிலும் முதலீடு செய்து உலகில் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக உருவெடுத்தது.

டேவிட் வெல்ஸ் இனி தான் நன்கொடை மற்றும் மக்கள் சேவையில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்து இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்.

Advertisement

47 வயதாகும் டேவிட் வெல்ஸ், தன் இடத்திற்குப் புதிதாக ஒரு நபரை நியமனம் செய்யப்பட்டு நிர்வாகப் பொறுப்புகள் முழுமையாக அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பு வெளியேறுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

English Summary

Netflix CFO David Wells to step down after 8 years
Advertisement