அமெரிக்காவில் இந்தியர்களுக்கு புதிய சிக்கல்.. பூதாகரமாகிறது கிரீன் கார்டு விவகாரம்!

நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன்கார்டு வழங்கக்கோரி இந்தியர்கள் தாக்கல் செய்த 306,601 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அமெரிக்க அரசு நிலுவையில் வைத்துள்ளது. வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பங்களைக் கிடப்பில் போட்டுள்ளதால் இந்தியர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை

அண்மையில் இருநாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் குடியேற்றச் சட்டத்தின் மாற்றங்கள் குறித்துக் கலந்துரையாடின. கிரீன் கார்டின் தகுதி, பல்வேறு இசைவு சீட்டுக்கள் தொடர்பாகவும் அவர்கள் ஆலோசித்தனர்.

புள்ளி விவரங்கள்

2016 ஆம் ஆண்டு 64,687 பேர் அமெரிக்காவின் கிரீன் கார்டை பெற்றுள்ளனர். இது 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதைவிட அதிகமாகும். 2013 ஆம் ஆண்டை வழங்கப்பட்ட கிரீன் கார்டை விட 2014 ஆம் ஆண்டு 77,908 பேருக்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. 2012 இல் 66 ஆயிரம் பேருக்கும், 2013 ஆம் ஆண்டு 68 ஆயிரம் பேருக்கும் கிரீன் கார்டு வழங்கப்பட்டதாக அமெரிக்கக் குடிவரவு சேவைகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் நம்பிக்கை

வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டு விநியோகம் குறித்து அமெரிக்கா சமீப காலத்தில் எந்தவொரு பெரிய மாற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள இந்திய அதிகாரி ஒருவர், இது விரிவுபடுத்தப்படும் என ஆகஸ்டு மாதத்தில் தெரிவித்ததாகக் கூறுகிறார். அதேநேரம் கிரீன் கார்டின் தகுதி மற்றும் குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளதை ஒத்துக்கொண்டுள்ளார்.

எச்.1.பி விசா விவகாரம்

அமெரிக்கா காங்கிரசில் அறிமுகப்படுத்தப்பட்ட எச்.1.பி விசா தொடர்பான சட்ட மசோதாக்கள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது தொழில் நுட்ப நிபுணர்களுக்கும், சிறப்பு அதிகாரிகளுக்கும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் அரசு மீது புகார்

அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலை என்ற முழக்கத்தை அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதனால் எச்.1.பி விசாவில் சீர்திருத்தங்களைச் செய்யச் சில உத்தரவுகள் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் விசா வழங்கும் விவகாரத்தில் துஷ்பிரயோகம் நடப்பதாக இந்தியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

இறையாண்மை உரிமையா

அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்கள் பங்களிப்புச் செய்துள்ளதாகக் கூறியுள்ள அதனால் தயக்கம் இருக்கக்கூடாது என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசா வழங்குவது அந்தந்த நாட்டின் இறையாண்மை உரிமையைப் பொறுத்தது என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் லலித் மான்சிங் கூறினார். இந்தச் சிக்கலை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமா என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Have a great day!
Read more...

English Summary

New Issue For Indians In the United States On 2+2 talks In Green Card Affair!