ஐக்கிய அமீரகத்தில் அக்டோபர் 21 முதல் புதிய விசா விதிகள்.. என்ஆர்ஐ-கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

அபுதாபி: வெளிநாட்டில் இருந்து ஐக்கிய அமீரகத்திற்கு வரும் கணவனை இழந்தவர்கள், விவாகரத்துப் பெற்றவர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு விசா விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளனர்.

Advertisement

இதன் படி கணவனை இழந்து அல்லது விவாகரத்துப் பெற்ற தேதியில் இருந்து ஒரு வருடத்திற்குக் கூடுதலாகத் தங்கிக்கொள்ள விசா விதிமுறையில் வர இருக்கும் அக்டோபர் 21 முதல் அனுமதி அளிக்க உள்ளனர்.

Advertisement

பெண்கள்

இந்தப் புதிய விசா கொள்கை மாற்றத்தின் மூலம் மேலும் கூடுதலாக ஒரு வருடம் வரை வெளிநாட்டுப் பெண்கள் ஐக்கிய அமீரகத்தில் தங்கி இருந்து தங்களது சமுக மற்றும் பொருளாதார நிலையினை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். கணவனை இழந்த மற்றும் விவாகரத்தான பெண்கள் பழைய விசா அனுமதியை ரத்துச் செய்ய 100 திராஹமும், புதிய விசா முறைக்கு மாற 100 திராஹமும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

மாணவர்கள்

மாணவர்களாக இருந்தால் 18 வயது ஆகும் போது கூடுதலாக ஒரு வருடம் வரை ஐக்கிய அமீரகத்தில் நேரத்தினைச் செலவிட விசா அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களும் விசா மாற்றம் செய்ய 200 திராஹம் வரை கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

விசிட்டர்கள்

துபாய்க்கு அடிக்கடி சென்று வருபவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பழைய விசா காலம் முடிவடைந்தால் புதிய விசா விதிமுறைக்கு மாறிட முடியும். விசிட்டர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இதற்கு 600 திராஹம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தி 30 நாட்கள் நீட்டிப்பு என இரண்டு முறை செய்யலாம்.

சிறப்பு மனிதாபிமான அடிப்படை

மேலே கூறிய விதிகள் எல்லாம் பொருந்தாமல் சிறப்பு மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய அமீரகத்தில் கூடுதல் நாட்கள் தங்க வெண்டும் என்றால் 5,000 திரிஹாமை விசா டெபாசிட் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை திருப்பி அளிக்கப்படும்.

விதி மீறல்கள்

சுற்றுலாப் பயணிகள், விசிட்டர்கள் விசா காலம் முடிந்து ஏதேனும் விதிமீறல்கள் செய்துள்ளார்கள் என்றால் 10 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளுக்கு 100 திரிஹாம் அபராத கட்டணமாகச் செலுத்த வேண்டி வரும்

English Summary

New visa rules for UAE visitors from October 21
Advertisement