தலைவர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை.. மார்க் ஜூக்கர்பெர்க் அதிரடி..!

பேஸ்புக் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர்கள் கேம்பிர்ட்ஜ் அனலிட்டிக்கா முதல் பல்வேறு சர்ச்சைகள் மார்க் ஜூக்கர்பெர்க் மீது தொடர்ந்து வருவதால் நிறுவனத்தின் மதிப்பு சரிந்து வருவதால் அவரின் தலைவர் பதவியினை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

Advertisement

இந்நிலையில் பேஸ்ச்புக் நிறுவனர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கெர்பெர்க் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி ஒன்றில் அப்பாடி எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் இது இப்போதைக்கு விவாதிக்க வேண்டிய விஷயமே இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மறு பக்கம் வாட்ஸ்ஆப்-ன் இணை நிறுவனர் ஜான் கோம் மற்றும் இன்ஸ்டாகிராம் இணை நிறுவனர்கள் மற்றும் முக்கிய ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறு வருவதும் பெறும் சர்ச்சைக்குள் ஆகி வருகிறது.

மார்க் ஜூக்கெர்பெர்க் ஜனவரி மாதம் முதல் 16 பில்லியன் டாலருக்கும் அதிகமான செல்வ மதிப்பினை இழந்துள்ளார் என்றும் தரவுகள் கூறுகின்றன.

English Summary

Not planning to step down as Facebook Chairman: Mark Zuckerberg
Advertisement