யார் இந்த Qandeel Baloch..? இவர் இறப்புக்கு ஏன் இத்தனை இறங்கல்கள்..?

Qandeel Baloch. இந்த பெயரை கந்தில் பலூச் எனப் படிக்க வேண்டுமாம் சொன்னது கோபக்காரி கந்திலே தான். இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணையத்தில் கிரங்கடித்துக் கொண்டிருந்த 90-ஸ் கிட். "பொட்டப் புள்ளங்க போத்திக்கிட்டு தான்யா நடக்கணும்" என வரையறுத்து வைத்திருக்கும் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்தவர். செல்லமாக பாகிஸ்தானியர்கள் இவரை "Kim Kardashian of Pak" என்கிறார்கள். அந்த அளவுக்கு குட்டி செல்லம் உப்பிய உச்சி முதல் உருளைக்கிழங்கு கால்கள் வரை அமெரிக்க கிம் கர்தாஷியனை உரித்து வைத்திருக்கிறாராம். எனவே, ஒன்று கூடிய பாக் இளவுகள் எங்கள் கிம் கர்ஷானியன் என பட்டமே கொடுத்துவிட்டார்கள்.

Advertisement

ஏன் இத்தனை உயரம்

Qandeel Baloch எடுப்பான மார்பைக் காட்டினார், தன் பிருட்டத்தை ஆட்டினார், உடலில் நீர் ஊற்றி போஸ் கொடுத்து சூடேற்றினார் என்பதற்காக மட்டும் பாராட்டப் படவில்லை. "இவள் ஒரு காஃபீர், இவள் அல்லாவின் கோபத்துக்கு இரையாக வேண்டிய தேவுடை*, இவள் இஸ்லாத்துக்கு எதிரானவள்" என வரிசை கட்டி திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில், தன் கருத்தை உலகுக்கு உரக்கச் சொல்லி அரசியல் செய்தவர். பெரியாரைப் போல.

Advertisement
இவளும் அரசியல்வாதி தான்

ஒரு பாகிஸ்தான் அரசியல் தலைவர் இறந்தால் எவ்வளவு இறங்கல்கள் பதிவாகும், எத்தனை ட்விட்டுகள் பறக்கும், எத்தனை ஃபேஸ்புக் போஸ்டுகள் கண்ணீர் வடிக்கும். அதை விட பன்மடங்கு அதிகமாக பதிவானது, பறந்தது, கண்ணீர் வடிந்தது... Qandeel Baloch-க்காக. aவள் பேசிய அரசியலுக்காக. அப்படி என்ன அரசியல் பேசிவிட்டாள்...? ஒரு சாதாரன பஸ் பணிப் பெண்ணாக வாழ்கையைத் தொடங்கி, ஒரு மாடலாக பிழைத்து வந்தவளுக்கு இவ்வளவு மதிப்பா..? அதோ அங்கே 17 வயதில் Qandeel Baloch-க்கு நிக்காஹ் நடக்கிறது.

திருமணம்

2008-ல் ஆசிக் ஹுசைன் என்பவருக்கு 18 வயதான இளம் Qandeel Baloch-க்கு ஆசிக் ஹுசைன் வெட்ஸ் ஃபவுசியா அசீம் என நிக்காஹ் நடக்கிறது. அட ஆமாங்க ஃபவுசியா அசிம் (Fouzia Azeem) தான் Qandeel Baloch-ன் உண்மையான பெயர். அந்த பழமை மாறாத பாகிஸ்தானிய முறைபடி கல்யாணமான அடுத்த வருடம் கையில் ஒரு குழந்தையும் வந்துவிட்டது. 30 நாளின் மோகம் தீர்ந்து, 60 நாளில் ஆசை தீர்த்து, கட்டுப்பாடற்ற காமம் வடிந்த பின் கணவன் எஜமானன் ஆகிவிட்டான். பாகிஸ்தானில் தான் அடிப்பது உதைப்பது எல்லாம் சர்வ சாதாரணம் தானே..?

தலாக்

கொடுமை தாங்க முடியாத ஒரு சாதாரண பெண்ணாக, (பாகிஸ்தானிய பழமை மாறாத பெண்ணாக அல்ல) கணவ செய்த கொடுமைகளை மீறி கடமைகளை செய்ய முடியாமல் விவாகரத்து வாங்கிவிட்டாள். இஸ்லாமிய விவாகரத்து சட்டப் படி ஒரு கணிசமான தொகையை பெண்ணின் வாழ்கையை கடத்த கணவன்கள் கொடுக்க வேண்டும். அந்த பணத்தைக் கூட நம் Qandeel Baloch எதிர் பார்க்கவில்லை. எனக்கு சுதந்திரம் கிடைத்தால் போதுமென வந்துவிட்டாள். ஆக பாகிஸ்தானில் தலாக் சொல்லி கணவனைக் கை கழுவிய முதல் பெண் இவளாகத் தான் இருப்பாள்.

பிடிக்கல வந்துட்டேன்

ஃபவுசியா அசீம், Qandeel Baloch ஆன பின் பத்திரிகைகள் இந்த கல்யாணத்தை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. ஒருவழியாக Qandeel Baloch இடம் கேட்டதற்கு "அவன் எல்லாம் ஒரு மனிஷனா, என்னை கொடுமை படுத்துனா அவன விட்டுட்டு வந்துட்டேன்" என சிரித்த மேனிக்கு பேட்டி கொடுத்தாள். அப்படி என்ன கொடுமை செய்துவிட்டார்கள் எனக் கேட்டால் சிரித்துவிட்டாள் கந்தில். ஆனால் அவளது அம்மா தன் மகள் பட்ட கஷ்டத்தை பட்டியலிடுகிறாள். ஒரு கட்டத்தில் மாப்பிள்ளை வீட்டில் கந்தில் மீது தொடர்ந்து மின்சாரம் பாய்ச்சி கொடுமை படுத்தினார்கள் என திடுக்கிட வைக்கிறார்.

பாகிஸ்தான் ஐடல்

2009 - 2010 கால கட்டங்களில் விவாகரத்து வாங்கிய பின் அப்படியே திரிந்து கொண்டிருந்த Qandeel Baloch-க்கு ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஆடிஷனுக்குப் போகிறாள். நம் ஊர் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போல பாகில், பாகிஸ்தான் ஐடல். ஆக அந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கந்தீல் ஆத்தா அடித்த லூட்டி வீடியோ யூடியூபில் வெளியே வர, வாலி வாலியாக ஜொல்லித் தள்ளினார்கள் நம் கட்டுப்பாடான பாக் இளசுகள். இந்த இடத்தில் இருந்து தான் ஃபவுசியா அசீம், கந்தில் பலூச்சாக புதிய மனிஷியாக உருவாகிறாள். மேற் சொன்ன வீடியோவைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=QO-alf0lBgY

இணையப் பிணைப்பு

2010 கால கட்டத்தில் தான் கிழக்காசிய நாடுகளுக்கு சமூக வலைதளங்களின் தாக்கங்கள் பலமாக வர ஆரம்பிக்கின்றன. இந்த தருணத்தில் கந்திலும் எதார்த்தமாக ஒரு கணக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா என ரவுண்ட் கட்டித் தொடங்கி தனக்கு சரி எனத் தோன்றுவதை எல்லாம் அப்லோடத் தொடங்கினாள். நாளாவட்டத்தில் இவள் அழகுக்கு மயங்காத பாக் இளவுகள் இல்லை. இவள் தைரியத்துக்கும், வெளிப்படைத் தன்மைக்கும் மயங்காத பாக் பெண்கள் இல்லை.

அந்த ஹாட் பக்கங்கள்

மக் கான் (Mac Khan) தான் கந்தீலின் பாகிஸ்தான் ஐடல் காலத்தில் ஏஜெண்டாக இருந்தார். ஒரு வங்கி வாசலில் இருவரும் காத்திருந்த போது விளையாட்டாக எடுத்த "How em luking?"(How am I looking?) வீடியோ சில நாட்களில் லட்சக் கணக்கில் வியூஸ் போனது. அம்மணிக்கு சோஷியல் மீடியா பல்ஸ் புரிந்து விட்டது.

சாவுங்கடா..?

செக்ஸியாக குளித்த கையோடு போட்டோ போடுவது, Low Neck ஆடை போட்டுக் கொண்டு ஆண்களை சூடேற்றுவது, உதட்டைக் குவித்து உள்ளங்களை கவர்வது, நெஞ்சை நிமித்து இளசுகளை விரைக்க வைப்பது என பாக் இந்தோ பாக் சோஷியல் மீடியாவை சோலோவாக ஆண்டு வந்த ஆண்டாள் கந்தீல். அதோடு "Maire sar mai pain ho raha hai" எனக்கு தலைய வலிக்குதுயா என்பது தான் இந்த ஹிந்தி வார்த்தைகளின் பொருள். இந்த பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்ட வேகத்தில் Dubsmash நிறுவனமே இவள் வாய்ஸை டெம்ப்ளேட்டாக வெள்யிட்டு அவள் பலத்தை சோஷியல் மீடியாவில் காட்டியது. ஆண்களும் கந்தீல் குரலில் எனக்கு தல வலிக்குதுய்யா என கொஞ்சினார்கள்.

அந்த ஊர் பூனம் பாண்டே

பூனம் பாண்டேவைத் தெரியாத கிரிக்கேட் ரசிகர்கள் இருக்கவே முடியாது. 2011-ல் உலகக் கோப்பையை இந்தியா ஜெயித்தால் நிர்வாணமாக ஆடி அப்லோட் செய்கிறேன் என இந்திய சமூக வலைதளத்தில் சூட்டைக் கிளப்பினார். அதே போல மார்ச் 2016-ல் பாக் இந்தியாவை ஜெயித்தால் நான் நிர்வாணமாக நடனமாடுகிறேன் என ஒரு சின்ன பிட்டையும் போட்டு பாக் சோஷியல் மீடியாவை எரித்துச் சாம்பளாக்கினார்.

I love You Kohli

"I hate you Afridi"... இத்தனை சொல்லியும் நீங்க இந்தியாவ ஜெயிக்கலைல்ல, பாகிஸ்தானுக்கு வராதீங்கடா என பாக் கிரிக்கேட் ஜெர்ஸி அணிந்து நாட்டுக்காக கோவப்பட்டாள். அதே நேரத்தில் கோலி செம அழகா இருக்கான்ல... கோலி எனக்கான உனக்கு நிச்சயமான பொண்ண விட்டுட்டு வாயேன் Please, Please, Please, Please... என இந்திய சோஷியல் மீடியாவையும் சேர்த்து சூடேற்றினாள்.

பிசிசிஐ-க்கு எதிர்ப்பு

எங்க நாட்டுக் காரங்க என்ன தப்பு பண்ணிட்டாய்ங்கன்னு ஐபிஎல்-ல்ல வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குறிங்க. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒத்துமையா இருக்கணுமா...? வேண்டாமா..? அப்ப இது மாதிரி பாக் கிரிக்கேட் வீரர்கள் மேல தடை விதிச்சா எப்புடி என சிறுத்தை புலி லெக்கின்ஸ், சட்டை அணிந்து கோவப்பட்டாள், கொழுக் மொழுக் கந்தில்.

கிரங்கிய இளைஞர்கள்

இப்படி பாகிஸ்தான் ஐடல் வீடியோவில் தொடங்கிய பரபரப்பு ஒரு கட்டத்தில், "காலையில் தினமும் கண் விழித்தால் கண் தொழும் தேவதை கந்தில், செல் போன் என்றாலே கந்தில்" என உருகித் தள்ளினார்கள். ஒரு கட்டத்தில் கந்தில் காய்ச்சல் வந்து படித்திருந்த போதும் ரசிகர்கள் நச்சரித்துத் தள்ள, "என்னய்யா காய்ச்சல்ல இருக்குறவளப் போய் வீடியோ போடச் சொல்றீங்க" என கொஞ்ச அதையும் ரசித்து வழிந்தார்கள்.

டிவி ஷோக்கள்

கந்திலுக்கு டிவியில் ஆடும், பாடும் வேலை தான் கனவு. அப்ப்டி செய்யத் தொடங்கிய காலம் அது. அதுவும் தனியாக. தன் பால்யத் திருமணத்தில் பிறந்த குழந்தையை தன் அப்பா அம்மாவிட ஒப்படைத்துவிட்டு ஓடிய பொழுது கந்திலுக்கு சம்பளம் வெறும் 10,000 ரூபாய். ஒரு சிலரின் அறிவுரைகள் படி உடலை கட்டுக் கோப்பாக்கி, அழகைக் கூட்டி, சோஷியல் மீடியாவில் சூடேற்றியதால் கந்தீலின் சம்பளம் சர சர வென உயர்ந்தது. ஒரு ஷோவுக்கு லட்சத்தில் எல்லாம் சம்பளம் வாங்கும் அளவுக்கு பாகிஸ்தானில் பெரிய செலிபிரிட்டி ஆனாள்.

மத எதிர்ப்பு, பழமைவாத எதிர்ப்பு

நிக்காவின் போது ஹிஜாப் அணிந்து பணிவாக இருந்தவளுக்கு இஸ்லாம் பிடித்த அளவுக்கு, ஹிஜாப் பிடிக்கவில்லை. கழட்டிவிட்டால். காதலர் தினத்துக்கு அரசியல் கட்சி தொடங்கி அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்த போது, மேற்கத்திய தனி மனித சுதந்திர கலாச்சாரத்தை ஆதரித்துப் பேசினார். பற்றி எரிந்தது. கண்டு கொள்ளவில்லை. தன் கருத்தை அதிகம் விமர்சிக்காத அரசியல்வாதி இம்ரா காணுக்காக ஒரு சூடேற்றும் வீடியோவை பதிவிட்டு நன்றி சொன்னாள்.

மீடியா பசி

கொஞ்ச நாள் வளர விட்ட மீடியா... அவளை மொய்க்கத் தொடங்கியது "எதுக்கு நீங்க இப்புடி சர்ச்சைக்குரிய ரீதியிலேயே டிரஸ் பண்றீங்க, பேசுறீங்க, ட்விட் போடுறீங்க" என வளைத்து வளைத்துக் கேட்டார்கள். "எனக்கு மத நம்பிக்கை உண்டு, ஆனால் மூட நம்பிக்கை இல்லை, என் அல்லா மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் எனக்கு தோன்றியதைத் தான் செய்கிறேனே ஒழிய அதை சென்சேஷன் ஆக்க வேண்டும் என்பதற்காகச் செய்யவில்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என் வீடியோக்களை நீங்கள் பார்க்க வேண்டும்" என நெத்தியில் அடித்தாள் கந்தில்.

மத குருமார்கள் எதிர்ப்பு

"பாகிஸ்தான் எதோ இந்தியாவைப் போல வெறும் குடிய்ரசு அல்ல. இது இஸ்லாமிய குடியரசு. இது ஒரு இஸ்லாம் தேசம். இந்த தேசத்தில் வாழ்பவர்கள், இஸ்லாமிய விதிகளுக்கும் கட்டுப் பட்டு தான் வாழ வேண்டும். கந்திலைப் போல கண்ட மேனிக்கு மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழக் கூடாது" சொல்வது ஒரு இஸ்லாமியப் பெரியவர்.

மக்கள் எதிர்ப்பு

ஜொல்லு விட்டவர்கள், கந்திலை நினைத்து கனவு கண்டு ரத்தம் சூடேறி கண் முன் தெரியாமல் தவித்தவர்கள் எல்லாம் ஒரு பக்கம் என்றால், அதே சோஷியல் மீடியாவில் "இந்த சனியனப் பாத்தாலே கடுப்பாகுது" "#ISIS இவளப் போட்டுத் தள்ள ஒரு புல்லட் ஆகுமா, கொஞ்சம் முடிச்சி விடுங்களேன்" "பாகிஸ்தானின் அவமானச் சின்னம் #Qandeel baloch" இப்படி எதிர் காத்தில் சைக்கில் விட்டவர்களும் உண்டு.

கந்தில் பதில்

கோலிக்கு உருகிய வீடியோ, அப்ரிதிக்கு விட்ட செக்ஸி வீடியோ, இம்ரான் கானுக்கு விட்ட காதல் தூது, இம்ரான் கானுக்காக ஒப்பனாக அழுத வீடியோ என எல்லாமே வைரல் ஆகிக் கொண்டிருந்த நேரத்தில் "என்னை நேசிக்கவும், என் திறமையைப் பாராட்டவும் நிறைய மக்கள் இருக்கிறார்கள். என்னை நேசிக்க போதுமான மக்கள் இல்லாமல் இல்லை. எனவே வெறுப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை" என மீண்டு மீடியாவின் மூக்கை உடைத்தாள் கந்தில்.

சந்திப்பு Mufti Abdul Qawi

ஒரு டிவி பேட்டியில் ஒரு பக்கம் இஸ்லாத்தைச் சேர்ந்த மத குருமார்களில் ஒருவரான Mufti Abdul Qawi.மற்றொரு பக்கம் நம் கந்தில்...
மத குரு: "உன்னோட டு பீச் டிரஸ் போட்டோ & வீடியோக்கள உங்க அப்பா, அம்மா கிட்ட, உன் குழந்தைகள் கிட்ட காட்டுவியா..?" என கொந்தளித்தார்.
கந்தில்: காட்டுவேன்.
மத குரு: நீங்கள் கராச்சியைச் சேர்ந்தவரா..?
கந்தில்: ஆம்
மத குரு: ஒரு முறை நேரில் சந்திப்போம், நம் மத விஷயங்களுக்கு உங்களுக்கு விரிவாக விளக்குகிறேன். என முடிந்தது.
ஒரு சுப தினத்தில் மத குருவும், கந்திலும் சந்தித்தார்கள். அந்த போட்டோ மற்றும் வீடியோ எல்லாம் பாகிஸ்தான் நினைத்துக் கூட பார்க்க முடியாத, வேற லெவல் வைரல் தான்.

கிழி கிழி கிழி

அந்த சந்திப்புக்குப் பின் ஒரு டிவி பேட்டியில் மத குரு என்னை 18-வது மனைவியாக திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். அதற்காக என்ன வேண்டுமானாலும் தரத் தயாராக இருப்பதாகவும் சொன்னார் என மத குருவை வைத்துக் கொண்டே குற்றச் சாட்டை வாசித்தாள். மத குரு மறுக்க "சும்மா பொய் சொல்லாதீங்க சார் ஒத்துக்குங்க" என அசால்டாக மிரட்டினால் கந்தில்.

பாதிக்கப்பட்ட மத குரு

மத குரு Pakistan Tehreek-e-Insaf என்கிற அரசியல் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். Ruet-e-Hilal என்கிற பாகிஸ்தான் மத நடைமுறைகளில் முக்கியமான கமிட்டியில் இருந்தும் நீக்கப்பட்டார். "மத குருவைப் பற்றி வெளியே கொண்டு வந்ததற்கு பெருமைப் படுகிறேன்" என கூலாக பேட்டி கொடுத்தாள் கந்தில்.

அந்த ஆ(ட்)டல் இருக்கே..!

பிரச்னைகள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, கந்திலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. கந்திலும் வீடியோ, போட்டோ, டிவி ஷோக்களும் கலை கட்டிக் கொண்டிருந்தது. ஆங்கிலத்தில் Twerking என்று சொல்வார்களே... அதை நம் செல்லக் குட்டி Qandeel-லும் செய்திருக்கிறாள். இந்த Ban என்கிற தலைப்பில் வெளியானது தான் குண்டுக் கண்ணழகி கந்தீலின் கடைசி வீடியோ. அவள் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் வெளியாகி இளசுகளின் கனவுகளையும் ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதை அவளே தன் டிவிட்டர் பக்கத்தில் சந்தோஷமாகவும் பகிர்ந்திருந்தால். அந்த அதிரடி ஆட்டத்தைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=PtD72-js8dQ

அண்ணனிடம் இருந்து மிரட்டல்கள்

கந்திலுக்கு 6 அண்ணன்கள். அதில் ஒருவன் வசீம். வசீம் இன்னும் அவர்களின் பிறந்த இடமான கராச்சியில் தான் வாழ்ந்து வருகிறான். மத குருவையே கமிட்டியில் இருந்து விரட்டியவர்களின் குடும்பம் என வசீமை ஊர்மக்கள் உசுப்பேத்த அவமானத்தில் கதறினான். மொத்த குடும்பத்தோடும் "கந்தீலின் செக்ஸி வீடியோ, போட்டோ எல்லாமே நம் மதத்துக்கு எதிரானது. இப்போது நம் மத குருக்களில் ஒருவரையே நேரடியாக சீண்டி இருக்கிறாள்" என அப்பா, அம்மாவோடு எல்லாம் கோவப்பட்டிருக்கிறான். அப்போதே குடும்பத்தார்களுக்கு வசீம் மீது ஒரு பயம் வந்து விட்டது. கோபத்தில் கந்தீலை ஏதாவது செய்துவிடுவானோ என பயந்திருக்கிறார்கள்.

எனக்கு பயமா இருக்கு பாதுகாப்பு வேண்டும்

இந்த நேரத்தில் "எனக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து மிரட்டி அழைப்புகள் வருகிறது, வாட்ஸப்களில் கண்ட படி மிரட்டுகிற்றார்கள், யார் யாரோ என்னை கொன்ருவிடுவேன் என இ-மெயில் செய்கிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள், எனக்கு காவலர்களை உதவிக்கு அனுப்புங்கள் என கதறினாள். கந்திலின் கிளு கிளு வீடியோ & போட்டோக்கள் மூலம் பொழுது போக்கிய பெருசுகள், காமத்தை வடித்துக் கொண்ட இளவுகள், தங்கள் சுதந்திரத்தைப் பேசிய பெண்கள் என யாருமே அவளுக்கும், அவள் கதறலுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வில்லை. பயம் தலைக்கேறியது.

கழுத்தறுத்த சகோதரன்

பயத்தில் தன் பெற்றோரிடமே வந்திருக்கிறாள் கந்தில். விவாகரத்து வாங்கிய பின், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கராச்சிக்கு வரும் போது தான் பழைய ஃபவுசியாவாக ஹிஜாப் எல்லாம் அணிந்து பழமை மாறாத பாகிஸ்தானிய பெண்ணாக, யாருக்கும் தெரியாத வண்ணமே வந்திருக்கிறாள். இரவு உணவில் தூக்க மாத்திரையை கலந்து நன்றாக தூங்க வைத்தான் வசீம். பின் மூச்சை இழுக்க முடியாத படிக்கு கழுத்தை இறுக்கி நிரந்தரமாக தூங்க வைத்தான் வசீம். விளையாட்டுப் பிள்ளையாகவே உலகை வளம் வந்து தன் தனி மனித விருப்பு வெறுப்புகளை வெளிப்படையாகச் சொல்லி வாழ்ந்த அந்த அழகு அரசியல் வாதியின் உயிர் ஜூலை 15, 2016 அன்று பிரிந்தது.

வசீம் பேட்டி

"ஆமாயா நான் தான் கொன்னேன். அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து திட்டம் போட்டு, அவள நா தான் கொன்னேன். என் தங்கை ஃபவுசியாவிடம் (கந்தில் அல்ல) இப்படி அரையும் குறையுமான ஆடைகளை போட்டுக் கொண்டு உளறிக் கொண்டிருக்காதே எனச் சொன்னேன். கேட்கவில்லை கொன்றுவிட்டேன்"

விசாரணை அதிகாரி

இந்த கொலையை விசாரித்த அத்தியா ஜஃப்ரியும் ஒரு பெண் தான். "பாகிஸ்தானிலேயே கராச்சியில் தான் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும். இங்கு சர்வ சாதாரனமாக ஒரு ஆணிடம் பெண் பேசினால் கூட பெண்ணைக் கொன்றுவிடுவார்கள். இப்படி வாராவாரம் புதிய வழக்குகள் வந்த வண்ணமே இருக்கின்றன" என இன்னொரு திடுக்கிடும் குற்றத்தை அசால்டாக முன் வைக்கிறார். அதோடு குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்க வேண்டாம் என வாதி (குற்றம் சுமத்தியவர்) மன்னிப்பு வழங்கினால் பாகிஸ்தான் சட்டப் படி குற்றவாளி தண்டிக்கப்படமாட்டார். இப்போது இந்த சட்டத்தின் கீழ் தான் வசீம் கம்பீரமாக வெளியே திரிகிறான்.

மத குரு விளக்கம்

"நான் ஒரு போதும் கந்திலிடம் தவறாக நடந்து கொண்டதில்லை. அவள் என்னோடு நெருக்கமாக இருந்துவிட்டு, மீடியாக்களிடம் என்னைப் போன்ற மதிக்கத்தக்க மத குருக்களை அவமானப்படுத்தினால், மதத்தை நேசிப்பவர்கள் என்ன செய்வார்கள். மதத்தை கொச்சைப்படுத்துபவர்களை கொல்லத் தானே செய்வார்கள். எனவே கந்தில் மரணத்துக்கு நான் பொறுப்பாக மாட்டேன். இனி மதத்தோடு விளையாடுபவர்களுக்கும் கந்தில் கதி தான்" என ஒரு ரத்த எச்சரிக்கையையும் செய்கிறார்.

கண்டித்த பிரபலங்கள்

Madonna, Khloé Kardashian, Miley Cyrus, Jamie Lee Curtis, Faryal Fatima, Rakhi Sawant, Imran Khan, Bilawal Bhutto Zardari, Sharmila Farooqi, Abdul Razaque, Reham Khan, Sanam Baloch, Osman Khalid Butt, Meesha Shafi, Sabz Khan ஒரு பெரும் படையே அழுத்தமான கண்டனத்தைத் தெரிவித்தது. இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தன் கண்டனத்தை பதிவு செய்தார்.

மரியாதை

1. உருது 1 சேனலில் போராளி (பாகி) என்கிற தலைப்பில் கந்திலின் வாழ்கை வரலாறு 28 எபிசோட் கொண்ட ஒரு தொடர் வெளியானது.
2. Swet Shop Boys என்கிற ஹிப்ஹாப் குழுவின் Aaja என்கிற பாடலின் கடசி நிமிடங்கள் கந்திலின் ஒரிஜினல் குரலில் பதிவு செய்து காதலுக்கும், அவளின் அன்புக்கும் மரியாதை செய்தார்கள். வீடியோவைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=V4sKUUdxEmg
3.Undercover Asia S4: In The Name Of Honour என்கிற பெயரில் கந்திலின் வாழ்கை தொடர்பாக ஒரு டாக்குமெண்டரியை வெளீட்டார்கள் : https://www.youtube.com/watch?v=oSvXrSSiWJo

கண்ணீர் விட்ட இளைஞர்கள்

மலாலா பெண்களின் கல்விக்குக் குரல் கொடுத்தால், ஆனால் பெண்ணாக பாகிஸ்தானிலேயே வாழ Qandeel Baloch குரல் கொடுத்தால். அவள் உடலும், உள்ளமும் உண்மையாகப் பேசியது, ஒன்றாக இணைந்து பெண் சுதந்திரத்தையும், பெண்ணியத்தையும் பேசியது, எதார்த்தத்தைப் பேசியது, வீன் வரையறைகளை விமர்சித்தது, ஒட்டு மொத்தத்தில் தனக்குத் தேவையானதைத் தாண்டி, தன்னைப் போன்று ஹிஜாபுக்குள் புலம்பிப் கொண்டிருந்தவர்களுக்காகப் பேசியது... இன்று பாக் பெண்கள் Qandeel Baloch வழியில் பேசத் தொடங்கிவிட்டார்கள். பாவம் அழகால் அரசியல் பேசியவளுக்கு அதை பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை.

கண் உறங்கு தாயி... கண் உறங்கு

மலாலா ஒற்றை ஆளாக வாயால் பேசிய அரசியலை, Qandeel Baloch அழகால் பேசினாள், மற்றவர்களையும் தங்கள் சுதந்திரத்தைப் பற்றிப் பேச வைத்தாள். பாகிஸ்தானின் ஈடு இணையற்ற அழகு அரசியல்வாதி Qandeel Baloch-ன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறோம். எல்லாம் வல்ல இறைவா... இந்த அழகு அரசியல் வாதியை காத்து ரட்சிப்பீராக, அவளுக்கு அமைதியைத் தருவீராக... பிஸ்மில்லாஹ், இர்ரகுமான் இர்ரஹீம்

English Summary

Qandeel baloch a rebel who lived her life against the traditions
Advertisement