துருக்கியில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கத்தார்..!

துருக்கி நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சி மோசமடைந்த நிலையில் ஒட்டுமொத்த நாணய சந்தையைப் புரட்டிப்போட்டுள்ளது. இதனால் துருக்கி நாட்டின் நாணய மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகக் கிட்டத்தட்ட 90 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் துருக்கி நாட்டில் சுமார் 15 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை கத்தார் நாடு செய்யவதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டைத் துருக்கி வஹ்கி மற்றும் நிதியியல் சந்தை வழியாகச் செய்யவும் கத்தார் முடிவு செய்துள்ளது.

இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து, துருக்கி லீராவின் மதிப்புச் சரிவு மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்த பின் இந்த முதலீடு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது கத்தார்.

இதன் மூலம் துருக்கி நாட்டின் நாணய மதிப்புச் சரிவு, பொருளாதார வீழ்ச்சி ஆகியவே கட்டுப்படுத்த முடியும் எனத் துருக்கி நம்புகிறது.

Have a great day!
Read more...

English Summary

Qatar to invest $15 billion in Turkey