சுதந்திர காற்றை உணரும் சவுதி பெண்கள் கையில் 90 பில்லியன் டாலர்!

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்ட அளிக்கப்பட்ட அனுமதி சட்டமானது ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் 2030-ம் ஆண்டுக்குள் சவுதியின் பொருளாதாரம் கூடுதலாக 90 பில்லியன் டாலர் வரை உயரும் என்று ப்ளும்பெர்க் தெரிவித்துள்ளது.

பூமியில் பெண்களுக்கு கடைசியாக கார் ஓட்ட அனுமதி அளித்த நாடு என்ற பெயரையும் சவுதி அரேபியா பெற்றுள்ளது. சவுதி அரசின் இந்த முடிவால் எப்படி எல்லாம் பொருளாதாரம் உயரும் என்று இங்கு பார்க்கலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள்
வேலைக்குச் செல்லும் பெண்கள்

சவுதியில் வேலைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் கார் மூலமே பயணம் செய்து வந்து நிலையில் தற்போது பெண்களுக்கு கார் ஓட்ட அளிக்கப்பட்டுள்ள அனுமதியால் கூடுதலாக பெண்கள் வேலைக்குச் செல்வார்கள். பெண்கள் வேலைக்குச் செல்வது பெரும் அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் ஊழியர்கள் தட்டுப்பாடு குறையும்
பெண் ஊழியர்கள் தட்டுப்பாடு குறையும்

சவுதியில் பெண்கள் வேலைக்கு செல்வது என்பது மிகவும் குறைவு என்பதால் வெளிநாட்டுப் பெண்கள் மட்டுமே அதிகளவில் சவுதியில் பணிபுரிந்து வந்தனர். தற்போது அந்த நிலை மாறி பெண் ஊழியர்களுக்கு உள்ள தட்டுப்பாடும் குறையும்.

வருவாய்
வருவாய்

பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்லும் போது குடும்பத்தின் வருவாய் அதிகரிக்கும். அதனால் அதிகளவில் பணப்புழக்கம் இருக்கும். பணவீக்கம் குறையும். வேகமாகப் பொருளாதாரமும் உயரும்.

எண்ணெய்
எண்ணெய்

சவுதி அரேபிய நாடுகள் பெரும்பாலும் எண்ணெய் மூலம் மட்டுமே அதிக வருவாய் ஈட்டி வரும் நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரிக்கும் போது பிற துறைகளின் வளர்ச்சியின் அதிகரிக்கும். எண்ணெய் மட்டும் தான் சவுதி நம்பி உள்ளது என்ற நிலை மாறும் என்று சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் எதிர்பார்க்கிறார்.

மாற்றம்
மாற்றம்

சவுதி பெண்கள் கலாச்சாரம் போன்றவற்றை பின்பற்றி கார் ஓட்டுவதை தவிர்த்து வருவதாகக் கூறி வந்தாலும் அது ஒரு தடை போன்றே அங்கு இருந்ததாகவும், சில இடங்களில் கார் ஓட்டிய பெண்களுக்கு தண்டனை கூட அளிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில் இந்த அனுமதியானது மிகப் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

மகிழ்ச்சியான சவுதி பெண்கள்
மகிழ்ச்சியான சவுதி பெண்கள்

கார் ஓட்ட அளித்த அனுமதியை மகிழ்ச்சியாக கொண்டாடும் சவுதி பெண்கள்.

முகமத் பின் சல்மான்
முகமத் பின் சல்மான்

முகமத் பின் சல்மான் :சவூதி அரேபியாவைக் கலக்கும் அதிரடி இளவரசர்

Have a great day!
Read more...

English Summary

Saudi Arabia's Women To Drive Boost Economy By $90 Billion