13வருடத்தில் முதல் முறையாக லாபத்தில் சரிவடைந்த டென்சென்ட்..!

சீனாவின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ், கேமிங் பிரிவு வர்த்தகத்தில் ஏற்பட்ட மந்தமான வர்த்தகத்தால் 13 வருடத்தில் இல்லாததைப் போல் லாபத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement

டென்சென்ட் நிறுவனத்தின் பிரபலமான PUBG வீடியோ கேமிற்கு அரசு விதிமுறை மாற்றத்தால் கட்டணத்தை விதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் வாயிலாகத் தற்போது ஏற்பட்டுள்ள லாப சரிவை ஈடு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் டென்சென்ட் நிறுவனத்தின் லாபம் கடந்த வருடத்தை விடவும் 2 சதவீதம் குறைந்து 2.59 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

ஆனால் இந்நிறுவனத்தின் வருவாய் 30 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இது கடந்த 3 வருடத்தில் குறைவான வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இக்காலாண்டில் ஏற்பட்ட சரிவிற்கு முக்கியக் காரணம் மொபைல் மற்றும் பிசி கேமிங் பரிவில் ஏற்பட்ட வருவாய் சரிவு தான் முக்கியக் காரணம்.

டென்சென்ட் நிறுவனத்தின் PUBG கேம் சுமார் 400 மில்லியன் மக்களால் உலகம் முழுவதும் விளையாடப்பட்டு வருகிறது. இது ஆண்டுராய்டு தளத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டது குறிப்பிடத்தக்கது.

English Summary

Tencent with first profit fall in nearly 13 years
Advertisement