2018-ல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எது? இந்திய பாஸ்போர்ட்டின் நிலை என்ன?

பாஸ்போர்ட் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும், சில நாடுகளில் பாஸ்போர்ட் விதிகள் மிகக் கடுமையாக இருக்கும் சில நாடுகளில் குறைந்த பட்சம் விதிகள் மட்டுமே பின்பற்றப்படும். உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் என்பது எந்தப் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு விசா இல்லாமல் அதிக நாடுகளுக்குச் சென்று வர முடியும் என்பதை வைத்துக் கணிக்கின்றனர்.

Advertisement

இதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஹென்லி & பார்ட்னர்ஸ் எனும் குளோபல் சிட்டிசன்ஷிப் அண்ட் ரெசிடென்ஸ் அட்வைசரி நிறுவனம் ஒரு ஆய்வை மேற்கொண்டு உலகின் மிகவும் விரும்பத்தக்க பாஸ்ப்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இருந்து சிறந்த 10 பாஸ்ப்போர்ட்களின் பற்றிப் பார்ப்போம்.

Advertisement

#10

10 வது இடத்தில் ஹங்கேரி,ஸ்லோவேனியா மற்றும் மலேசியா பாஸ்ப்போர்ட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகளின் பாஸ்ப்போர்ட்களை வைத்து 180 நாடுகளைச் சுற்றிவரலாம்.

#9

உலகின் மிக அற்புதமான இயற்கை அழகைக் கொண்டுள்ள நாடு ஐஸ்லேண்ட், சமீபத்திய தகவல் படி இந்த நாட்டைப் பார்வையிட வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஆனால் மறுபுறம் ஐஸ்லாண்டில் வசிக்கும் மக்கள் எளிதில் விசா இல்லாமல் அல்லது மற்ற நாட்டிற்குச் சென்றபின் விசா வாங்கிக்கொள்ளும் முறையைப் பயன்படுத்திக் கிட்டத்தெட்ட 181 நாடுகளுக்குச் சென்று வரலாம்.

#8

அடுத்தபடியாக நியூசிலாந்து மற்றும் செக் குடியரசைத் தாயகமாகக் கொண்டவர்கள் அந்நாட்டுப் பாஸ்ப்போர்ட்டை வைத்து 182 தலங்களுக்குச் செல்லலாம்.

#7

7வது இடத்தில் ஆஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் மால்டா உள்ளது. இந்த ஊர்களின் பாஸ்போர்ட் மூலம் 183 நாடுகளுக்கு எளிதில் சென்று வரலாம்.

#6

ஆறாவது இடத்தைக் கனடா உடன் ஸ்விட்ஸ்ர்லாண்ட், ஐயர்லேண்ட் மற்றும் பெல்ஜியம் பகிர்ந்து கொள்கிண்டனர். இந்தப் பாஸ்ப்போர்ட்டிலும் விசா இல்லாமல் மற்றும் விசா ஆன் அரைவல் மூலம் 185 நாடுகளுக்குச் செல்லலாம்.

#5

நார்வே,யூகே,ஆஸ்ட்ரியா,லக்ஸம்பர்க்,நெதர்லாண்ட்ஸ்,போர்சுகல்,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பாஸ்ப்போர்ட்டின் மூலம் 186 தேசங்களுக்குப் பொய் வரலாம்.

#4

அடுத்தபடியாக 4வது இடத்தை 187 நாடுகளுக்குச் செல்ல தகுதி வாய்ந்த பாஸ்ப்போர்ட்களைக் கொண்ட நாடு டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, ஸ்வீடன் மற்றும் ஸ்பெயின்.

#3

2018 துவக்கத்தில் முதல் இடத்தில் இருந்த ஜெர்மனி இப்போது பிரான்ஸ் மற்றும் தென் கொரியா உடன் இணைத்து 3வது இடத்தில் உள்ளது.

#2

ஆசிய கண்டத்திலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இரண்டு நாடுகளில் ஒரு நாடாகச் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் விசா இல்லாமல் மற்றும் விசா ஆன் அரைவல் வசதி மூலம் 189 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

#1

2018 ஆண்டிற்குச் சிறந்த பாஸ்ப்போர்ட்டை கொண்ட நாடு ஜப்பான் தான். ஏனென்றால் இந்தப் பாஸ்போர்ட் மொத்தம் 190 நாடுகளில் செல்லும். ஆகச் சிறந்த 10 நாடுகளின் பாஸ்ப்போர்ட்டில் முதல் இரண்டு இடம் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் தான்.

இந்தியா

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 66வது இடத்தில் உள்ளது. 2018-ம் ஆண்டு நிலவரத்திபடி இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் 25 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வரலாம்.

English Summary

top 10 powerful passports around the world
Advertisement