எச்-1பி விசா விதிமுறைகளில் புதிய மாற்றம்.. இந்தியர்கள் கதறல்..!

டிரம்ப் தலைமையிலான அரசு வெளிநாடுகளில் இருந்து எச்-1பி விசா கீழ் அமெரிக்காவில் பணிபுரிய வரும் சிறப்பு வேலைகளுக்கான வரையறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது. இந்தப் புதிய வரையறைகளினால் இந்திய நிறுவனங்களால் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்துவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement

இந்திய நிறுவனங்களுக்குச் சிக்கல்

புதிய வரைமுறைகளினால் இந்தியர்களைப் பணிக்கு எடுப்பது மட்டும் இல்லாமல் தொடர்ந்து அமெரிக்காவில் இந்திய நிறுவனங்கள் வணிகத்தினைத் தொடர்வதே சிக்கலாக இருக்கும் என்றும், அதிலும் இந்திய அமெரிக்கர்கள் தொடங்கி நடத்தி வரும் சிறு ஐடி ஒப்பந்த நிறுவனங்கள் பெறும் அளவில் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்குமாம்.

Advertisement
புதிய வரையறைகள் எப்போது முதல்

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) ஜனவரி 2019 முதல் புதிய எச்-1பி விசா வரையறைகளை வெளியிடும் என்று உறுதி செய்துள்ளது.

முக்கிய மாற்றங்கள்

புதிய வரையறையில் சிறப்புப் பணிகளுக்காக வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது மற்றும் எச்-1பி விசா முறையில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது என இரண்டு முறையில் பல மாற்றங்கள் இருக்குமாம்.

ஊதியம்

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் பணிபுரிய வரும் ஊழியர்களுக்குத் தற்போது உள்ள விதிகளை விட மிகவும் கடினமான விதிகள் அமலுக்கு வர வாய்ப்புகள் உள்ளது. டிரம்ப் அரசு வந்த உடன் எச்-1பி விசா கீழ் அமெரிக்கா வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளித்து வந்த 65,000 டாலர் என்ற குறைந்தபட்ச ஊதியத்தினை 1,20,000 டாலராக மாற்றியது போன்று தற்போது ஒரு அறிவிப்பு வர வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எச்-4 விசாவிற்கு வேலைவாய்ப்புச் சலுகை நீக்கம்

எச்-1 விசா கீழ் அமெரிக்காவில் பணிபுரியும் நபர் ஒருவர் தங்களைச் சார்ந்துள்ளவர்களை எச்-4 விசா கீழ் அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சட்டத்தினை நீக்க முடிவு செய்துள்ளனர் என்றும் அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

எண்ணிக்கை

எச்-1பி விசா கீழ் ஆண்டுக்கு 65,000 ஊழியர்களை அனுமதித்து வரும் நிலையில் அதிலும் மாற்றம் நடைபெறலாம் என்றும் முழுமையான மின்னணு விண்ணப்ப முறை போன்றவற்றை அறிமுகம் செய்து லாட்டரி முறை போன்றவையினை மேலும் சிறப்பாகச் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

English Summary

Trump Administration to Propose Major Changes in H 1B Visas That Will Hit Indians in US
Advertisement