ஈரான் உடனான போர் உக்கிரம் அடைந்து வரும் வேளையில் அமெரிக்கா புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது, ஹார்முஸ் நீரிணையில் மாற்று பாதையில் செல்லும் கப்பல்களையும், ஈரான் அனுமதி இல்லாமல் செல்லும் கப்பல்களையும் ஏவுகணை கொண்டு தாக்கி வருகிறது ஈரான் ராணுவம். இந்த பிரச்சனையை உடனடியாக கட்டுப்படுத்தவும், ஈரான் உடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை கிடப்பில் போடவும் தயாராகியிருக்கிறது டிரம்ப் அரசு.
ஹார்முஸ் வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்க கடற்படை மீண்டும் துறைமுகங்களை முயற்றுகையிடும் பிளாக்கேட் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதேபோல் ஹார்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு காக்கும் கடவுளாக அமெகிக்கா மாற திட்டமிட்டு இதற்காக கட்டணத்தையும் வசூலிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்கா ஈரான் நாட்டில் கிஷ் தீவு, ஜாம் தீவு, கேஷ்ம் தீவு, புஷேர் மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய பகுதிகளில் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இதேபோல் ஈரான் குவைத், பஹ்ரைன், ஓமான், ஜோர்டன் போன்ற நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர செவ்வாய்க்கிழமை 20 GMT மணிநேரத்தில் பிளாக்கேட் அமைக்கப்படும். இதன் மூலம் THE HORMUZ STRAIT-ன் கார்டியனாக அமெரிக்கா இருக்கும்.
இதேவேளையில் இவ்வழித்தடத்தில் பயணிக்கும் அனைத்து சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களுக்கும் முழுமையான பாதுக்காப்பை உறுதி செய்ய 20 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் தெரிவித்துள்ளார் டிரம்ப். இந்த கட்டணம் தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பை உறுதி செய்ய மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார் டிரம்ப்.
அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தையில் ஹார்முஸ்-ன் முழு கட்டுப்பாடு ஈரானுக்கு கிடைக்க வேண்டும் என்றும் இவ்வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பல் மீதும் கட்டணம் விதிக்கப்படும் என ஈரான் கூறிய போது அமெரிக்கா பெரும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் டிரம்ப் தற்போது இதே விஷயத்தை செய்கிறார், டிரம்ப்-ன் அறிவிப்பை தொடர்ந்து இந்த முடிவுக்கு ஐநா ஷிப்பிங் ஏஜென்சி கட்டணம் விதிப்பது தவறு என கூறி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
More Articles
- டிரம்புக்கு இவ்வளவு பணத்தாசை இருக்க கூடாது ; அதிபர் என்பதையே மறந்துவிட்டாரா? கொந்தளிக்கும் அமெரிக்கர்கள்
- இந்திய மாணவர்களுக்கு வேட்டு வைக்கும் டிரம்ப்.. வேலை செய்யணுமா.. 100000 டாலர் கட்டணம்..!
- காசா போரில் முக்கிய திருப்பம்..!! டிரம்ப் வெளியிட்ட குட் நியூஸ்..!! வெடிச்சத்தம் இல்லாத பொழுது விடியுமா?
- ஈரானுக்கு பயந்து விமானத்தை மாத்திய டிரம்ப்.. ஏர் போர்ஸ் ஓன் ரெடியானது ஏன்..?
- சண்டையா? சமாதானமா? என்ன செய்ய போகிறார் டிரம்ப்? கன்னித்தீவு கதையாக நீளும் ஈரான் போர்..!!
- இந்திய பொருட்கள் மீது 10% வரி போட்ட டிரம்ப்.. மீண்டும் ஆட்டத்தை துவங்கிய அமெரிக்கா.. எதற்காக தெரியுமா..?