மீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா!

அமெரிக்கா ஈரான் மீது செவ்வாய்க்கிழமை முதல் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன்படி வங்கி துறைகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மெல்லட் வங்கி, மெஹர் ஈக்வெஸ்டட் வங்கிகள் மீது இந்தப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வருவாய் துறை தெரிவித்துள்ளது.

Advertisement

அமெரிக்கா

இது குறித்து அமெரிக்க மூத்த அதிகாரிகளைத் தொடர்புகொண்ட போது முதலீட்டிற்காக இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள், கமாடிட்டி மற்றும் பொறியியல் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பொருளாதாரத் தடை

நவம்பர் மாதம் முழுமையான பொருளாதாரத் தடை வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இனி தொடர்ந்து பல துறைகள் மீது அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புள்ளது.

ஈரான் விமர்சனம்

அமெரிக்கா ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடை மீது ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்ட ஈரான் அதிபர் ஹாசன் ரோஹவுனி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு பொருளாதாரத் தீவிரவாதம் மற்றும் பொருளாதாரப் போரைத் தொடுத்து வருகிறது என்று விமர்சித்துள்ளார்.

முழுமையான தடை

ஈரான் மீது அமெரிக்கா நவம்பர் மாதம் முன்பே முழுமையான பொருளாதாரத் தடை விதிக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானதை அடுத்து ரோஹவுனி இந்தக் கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா

அமெரிக்கா பொருளாதாரத் தடையினை மீறி ஈரானுடன் வர்த்தகத்தினைத் தொடரப்போவதாகப் பிரட்டன், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ள நிலையில் இந்திய அரசும் மாற்று வழியில் பரிவர்த்தனைகளைச் செய்து கச்சா எண்ணெய்யினை இறக்குமதி செய்வதற்காகப் பணிகளில் இறங்கியுள்ளது.

English Summary

US Issued New Sanctions On Iran
Advertisement