வால்மார்ட் வால்டன் குடும்பத்திற்கு அடித்த ஜாக்பாட்..!

அமெரிக்காவின் முன்னணி ரீடைல் நிறுவனமான வால்மார்ட், கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்குச் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் வால்மார்ட் நிறுவனப் பங்குகள் 11 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

வால்மார்ட் நிறுவன பங்களில் 50 சதவீதம் இந்நிறுவனத்தை உருவாக்கிய குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் ஆஸ்தான உரிமையாளர்களான வால்டன் குடும்பத்தின் அலைஸ், ஜிம், ராப், லூகாஸ் மற்றும் கிரிஸ்டி ஆகியோரின் சொத்து மதிப்பு ஓரே நாளில் 11.6 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் இந்த 4 பேரின் மொத்த சொத்து மதிப்பு 163.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவில் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் வால்மார்ட் ஆன்லைன் ரீடைல் சந்தையில் களமிறங்கியுள்ளது. வால்மார்ட் இந்தியாவில் இப்போது அமேசான் போட்டி போட தயாராகி வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

walmart Walton Family's Wealth Surges $11.6 Billion