ரோபோக்களின் வருகையால் உங்கள் வேலை வாய்ப்பு பர்போகுமா? என்ன செல்கிறது யூஎன்!

புளூ காலர் எனப்படும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புளில், ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதால் உலக அளவில் வேலை இல்லாத் திண்டாட்டம் உருவாகும் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஆனால் இதனை மறுத்துள்ள ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, படைப்பாற்றல் திறன் கொண்ட மனிதர்களின் வேலை வாய்ப்பை ஒருநாளும் ரோபோக்கள் பறிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

உற்பத்தி துறையில் லாப விகிதங்களை வளர்ந்த நாடுகள் தீர்மானிப்பதில்லை என்று ஐநா வேலை வாய்ப்புத்துறையின் தலைவர் எக்ர்ட் எர்னஸ்டு கூறியுள்ளார். கட்டுமானம் மற்றும் சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

தொழில்நுட்பங்கள்

வேலை இழப்புகள் அதிகம் இருக்காது அதேநேரத்தில் கணினி, ரோபோ உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் வேலைகள் மாறும்போது தொழிலாளர்கள் வேறு பணிகளுக்கு உதவுவார்கள் என்கிறார் ஏர்ன்ஸ்ட்.

இயந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் மூலம் பணிகளை திறம்படவும், எளிதாகவும் செய்ய முடியும் என்று கூறும் அவர், சமூகம், உணர்ச்சி சார்ந்த விசயங்களை ஈடு செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

 

வளரும் நாடுகளில் அறிவியல்

வேளாண்துறையின் பயன்பாட்டுக்கு வளர்ந்து வரும் நாடுகள் இதனை சார்ந்து உள்ளன. வானிலையை அறிந்து கொள்ளவும், சந்தை விலைகளை அவ்வப்போது தெரிந்து கொள்ளவும் உதவுகின்றன. அல்லது சமீபத்திய சந்தை விலைகளை பெற உதவுகிறது. ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் இணைந்து சப் சகாரன் ஆப்பிரிக்கா உருவாக்கிய ஒரு மொபைல் செயலியால் பயிர்களை தாக்கும் பூச்சிகளை அடையாளம் காண முடிகிறது.

சாதாரணம்

இன்றைய தலைமுறையினர் சாதாரணமாக டிஜிட்டல் தொழில் நுட்பங்களை எந்த வித தடையும் இல்லாமல் பயன்படுத்தி வருகிறார்கள். எவரோ ஒருவர் பயன்படுத்தும் கோடரி, கார் போல இதனையும் ஒரு சாதாரண கருவியாகவே கருதுவதாக எர்ன்ஸ்ட் தெரிவித்தார்.

20 ஆம் நூற்றாண்டு

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் புதிய தயாரிப்புகள் மற்றும் சந்தைகளை பரவலாக்கியுள்ளன. 20 ஆம் நூற்றாண்டில் வாகனங்களின் பயன்பாட்டால் போக்குவரத்துக்கு பயன்பட்ட குதிரை வண்டிகள் காணாமல்போனது. வாகன உற்பத்தித்துறை அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.

மொபைல் புரட்சி

அண்மைக்காலமாக மொபைல் போன் செயலிகளை மேம்படுத்துவோருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஸ்மார்ட் போன்களின் வருகையால் 1990 களுக்கு முன்பு இருந்த நிலைமை மாறியுள்ளது. இதனால் தொழில் நுட்பங்கள் தொழிலாளர் சந்தையில் ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை கூறியுள்ளது.

மனித உழைப்பு மலிவு

அதிக உற்பத்திக்கு உதவும் மனித உழைப்புகள் எந்திரங்களை மலிவாகக் கிடைக்கக்கூடியவை. தொழில்நுட்பங்கள் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றாலும் மனிதனின் தேவைக்கு அவசியம் இருக்கும். உலக அளவில் ஆட்டோமேஷன் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை என்கிறது ஆய்வு.

சமத்துவமின்மை

தொழிலாளர் சந்தையை தற்போதைய தொழில்நுட்பம் மட்டும் பாதிக்கவில்லை என்று கூறும் எர்னஸ்ட், வருமானச் சமத்துவமின்மையும் காரணம் என்கிறார். பரந்த ஒரு சமூக மாற்றம் அவசியம் தேவை என்பது அவரது கருத்து.

ஆலோசனை

ஐ.நாவும் அரசுகளும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சாத்தியமுள்ள சமூக பாதுகாப்புகளை விரிவுபடுத்துவதுடன், பொருத்தமான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். புதுமையான தேசியத் திறன்களை ஊக்குவிக்க கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று எர்னஸ்ட் வலியுறுத்துகிறார். கொள்கைகளை செயலழிப்புச் செய்யக்கூடிய வகையில் தொழில்நுட்ப முன்னேற்றம் இருக்கக்கூடாது என்கிறார்.

Have a great day!
Read more...

English Summary

Will your job get lost by the advent of robots? What UN Says?