இந்த பொலப்புக்கெல்லாம் லட்சக் கணக்குல சம்பளமா..? என்னய்யா அநியாயமா இருக்கு..?

எனக்கு பதிலாக என் முடிவுகளை எடுக்க சம்பளத்துக்கு ஆள் வேண்டும் என விளம்பரம் செய்திருக்கிறார் பிரிஸ்அல் பகுதியச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண்.

Advertisement

மாதம் 1,75,000 ரூபாய் வரை சம்பளத்தை அதிகப்படுத்தித் தர தயாராக இருக்கிறாராம். எடுக்கும் சரியான முடிவுகள் பொறுத்து சம்பளம் அதிகரிபாராம். ஆனால் நிச்சயம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் தந்துவிடுவேன் என Bark.com என்கிற வலைதளத்தில் விளம்பரம் கொடுத்திருக்கிறார்.

Advertisement

ஏன் இந்த திடீர் முடிவு எனக் கேட்ட போது "என் வாழ்வில் பல்வேறு முடிவுகளை தவறாக எடுத்துவிட்டேன். அதனால் என் வருமானம் நிதி நிலை தொடங்கி என் காதல் வாழ்கை வரை தவறாகிவிட்டது. எனக்கு ஒரு வழி காட்டுதல் வேண்டும். என் முடிவுகளுக்கு ஆணித்தரமான ஒரு விளக்கம் வேண்டும். அதை யாரால் சரியாக கொடுத்து எனக்கு வழி காட்டி முடிவுகள் எடுக்க முடியுமோ அவர்களைத் தான் என் வாழ்கையை முடிவு செய்யும் பொறுப்பை மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுத்து எடுக்க இருக்கிறேன்" என்கிறார்.

வேற வேலைகள்

கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா..? இப்படி இன்னும் உலகத்தில் எத்தனை வேலைகள், வித்தியாசமானவைகள், கேட்கவே சிரிபாக இருப்பவைகள், நம்ம ஆச்சர்யப்படுத்தும் வேலைகள், நம்மை மயிர்க்கூச்செரியும் வேலைகள் என பல்வேறு வேலைகளை கண்டு பிடித்திருக்கிறோம். படித்துப் பாருங்கள்.

Ferrari கார் பயிற்சியாளர்

Ferrari. இந்தப் பெயரைக் கேட்ட உடனேயே உங்களால் கணிக்க முடியும். உலகின் தலை சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்களின் என்றுமே Ferrari-க்கு தனி இடம் உண்டு. இந்த காரை எல்லோராலும் ஓட்ட முடியாது. கார் பந்தயங்களில் ஓட்டிய அனுபவம் வேண்டும். அதோடு Ferrari நிறுவனத்தின் சில நிபுணர்களின் பயிற்சிகளும் கூட வேண்டுமாம். அப்போது தான் Ferrari கார்களை தொட முடியுமாம். அப்படி முறையாகப் பயிற்சி பெற்று Ferrari கார் பயிற்சியாளர். இருப்பவர்களுக்கு மாதம் 7 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கிறார்களாம்..?

வீடியொ கேம் ப்ளேயர்

கம்ப்யூட்டர் வீடியோ கேம் தொடங்கி இன்று பப்ஜி வரையான அனைத்து வீடியோ கேம்களும் இன்று அனைத்து வயது தரப்பினர்களுக்கும் பரிச்சயம். ஆனால் இந்த கேம்களின் ஒரு அளவுக்கு மீறி நன்றாக விளையாடக் கூடிய நபர்களுக்கு மட்டுமே வீடியோ கேம் நிறுவனங்களே தங்கள் கேம்களை முதலில் விளையாடி ரிவ்யூ செய்யச் சொல்வார்களாம். இவர்களுக்கு பொழுது பூராவும் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும். அது தான் வேலை. அதற்காக மாதம் சுமார் 2.5 லட்சம் வரை கொடுக்கிறார்களாம்.

தனித் தீவுக் காவலர்

பில் கேட்ஸ், சுந்தர் பிச்சை, அமேஸானின் தலைவர் ஜெஃப் பிசாஸ் போன்ற மிகப் பெரும் பணக்காரர்கள், தங்களுக்கு என ஒரு உல்லாசத் தீவை வடிவமைப்பார்களாம். இப்படி அமைக்கப்படும் தீவுகள் அந்த் அதீவுகளின் உரிமையாளருக்கு தகுந்தாற் போல மட்டுமே வடிவமைக்கப்படுமாம். அப்படி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தீவுகளில் கொஞ்ச நாள் தங்கி இளைப்பாறிவிட்டு கிளம்பிவிடுவார்களாம். அதன் பிறகு அந்தத் தீவை தனி ஒருவராகவோ அலல்து தனி ஒரு குழுவாகவோ பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பணியில் சேர திகில் பயணங்களில் ஆர்வம், நீச்சல் விளையாட்டுக்கள், அதிரடி விளையாட்டுக்கள் மற்றும் தெளிவாக தகவலைப் பரிமாற்றம் செய்யும் திறமையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களாம்.

உணவு அழகு கலைஞர்

மிகப் பெரிய விருந்தினர்களுக்கு பரிமாற வேண்டிய உணவை சாப்பிடக் கூடிய பொருட்களை வைத்து சிறப்பாக அலங்காரம் செய்து கொடுப்பது தான் இவர்களின் வேலை. இந்த வேலையை இன்று சமையல் புத்தகங்களில் வெளிவரும் புகைப்படங்களுக்குக் கூட பயன்படுத்திக் கொள்கிறார்கள். இப்படி உணவை அழகுபடுத்தும் கலை இந்தியாவின் பல நட்சத்திர உணவகங்களில் கூட செய்கிறார்களாம். இன்றைய தேதிக்கு அதிகபட்சமாக மாதம் 4.50 லட்சம் ரூபாய் வரை கொடுத்து வேலைக்கு எடுக்கிறார்களாம்.

குறுக்கெழுத்தாளர்கள்

ஒவ்வொரு பத்திரிகைகளிலும் குறுக்கெழுத்துப் போட்டி வருகிறது இல்லையா. சரி இந்த கேள்விகளையும், குறுக்கெழுத்து வடிவத்தையும் யார் வடிவமைக்கிறார்கள்..? நம் குறுக்கெழுத்தாளர்கள் தான். இப்படி இத்தனை கட்டம் கட்டி சரியாக குறுக்கெழுத்துகளுக்கான கேள்விகளை அமைத்து சரி பார்த்துக் கொடுபபவர்களூக்கு இன்னும் வெளிநாடுகளில் கண்ணா பின்ன சம்பளம் தான். இவர்களுக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் தருகிறார்களாம். இவர்களுக்கு ஒரு மொழியில் அதிகப்படியாக வார்த்தைகளும் அதன் அர்த்தங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதோடு ஏகப்பட்ட அழுத்தத்தையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும்.

விமானக் கப்பல் ஓட்டுநர்

விமான ஓட்டு என்றால் தெரியும். அதென்ன விமானக்கப்பல். இந்த விமானக் கப்பல்களில் ஹீலியம் அல்லது ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு மேலே எழுப்பப்படும். இந்த ஏர் பலூனுக்குக் கீழ் உள்ள இரண்டு மோட்டார்கள் மூலமாக மட்டுமே விமானக் கப்பல் திசை நிர்ணயித்து ஓட்டுவார்களாம். இப்படிபட்ட விமானக் கப்பலை ஓட்டக் கூட விமான ஓட்டுநர் உரிமம் வேண்டுமாம். சுமார் 1200 மணி நேரம் விமன ஓட்டிய அனுபவம் கட்டாயமாம். சமீபத்தில் ஏர்லேண்டர் 10 என்கிற விமானக் கப்பல் தான் Hybrid Air Vehicles (HAV) என அழைக்கப்படுகிறது. இந்த ரக விமான ஓட்டிக்கு மாதத்துக்கு அதிகபட்சம் 4,00,000 வரை கொடுக்கிறார்களாம். கூடிய விரைவில் Hybrid Air Vehicles (HAV) புழக்கத்துக்கு வரும் பட்சத்தில் இந்த சம்பளம் இன்னும் கூடத்தானே செய்யும்.

பொம்மை வடிவமைப்பாளர்கள்

குழந்தைகளுக்கு பொம்மை செய்வது தான் இவர்கள் வேலை. அதற்கென்ன செய்துவிடலாம் என எல்லோராலும் செய்ய முடியாது. ஒரு பொம்மை என்ன நிறத்தில் இருக்க வேண்டும். பொம்மை எந்த மெட்ட்ரீயலில் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும். அவர்கள் செய்யும் பொம்மை குழந்தைகள் வாயில் வைத்து கடிக்குமா..? கடித்தால் அந்த மெட்டீரியல் குழந்தையில் உடல் நலத்துக்கும், பொம்மைக்கு எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும்..? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளிக்க வேண்டும். இந்த வேலைக்குச் சேர பொம்மை வடிவமைப்பில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். பொம்மை என்றால் காதலால் கசிந்துருகுபவராக இருக்க வேண்டும். அப்போது தான் மாதம் 3.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுப்பார்கள்.

நாலு வார்த்தையில நல்ல விஷயம்

நம் ஊரில் பூமர் வாங்கினால் உள்ளே ஒரு டாட்டூ இருப்பதைப் போல, மேலை நாடுகளில் உணவகங்களில் பில்லோடு Fortune Cookie என்கிற சில ரொட்டித் துண்டு களை வைப்பார்கள். அந்த ரொட்டித் துண்டுகளை உடைத்தால் உள்ளே நாலு வார்த்தை நல்ல விதமாகவோ அல்லது உங்கள் வாழ்கை சம்பந்தப்பட்ட விஷயமாகவோ இருக்கும். இது ஒரு விதமான கலாச்சாரம் அவ்வளவு தான். ஆனால் இந்த Fortune Cookie-க்கு பின் ஒரு பெரிய தொழில் இருக்கிறது. அதற்கு முக்கியமாக இந்த நான்கு வார்த்தைகளை நன்றாக எழுதக் கூடியவர்கள் தேவை. அதற்கு மொழியில் நல்ல புலமையும், நல்ல கற்பனைத் திறனும் இருக்க வேண்டும். இருந்தால் ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாமாம்.

ஐஸ் க்ரீம் சுவைப்பாளர்

புரிந்திருக்குமே..? அதே தான். ஒரு Ice Cream Taster ஒரு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டாள் அவருக்கு காலையில் அலுவலகத்தில் நுழைந்ததில் இருந்து மாலை அலுவலகத்தை விட்டுச் செல்லும் வரை புதிய புதிய ஐஸ் க்ரீம்களை சுவைத்து குறிப்பு எழுதுவது தான் வேலை. pista ஐஸ்க்ரீமில் பாதாம் வாசனை இருக்கிறது, vannila chocolate காம்பினேஷனில் ஐசிங் பவுடரின் தரம் மாறி இருக்கிறது. kesar almond ரகத்தில் குங்குமப்பூ வின் எசச்ன்ஸ் கூடுதலாக இருக்கிறது ஆனால் குங்குமப்பூ மிகக் குறைவாக இருக்கிறது. ஆக இனி எசன்ஸைக் குறைத்து குங்குமப்பூவை அதிகப்படுத்த வேண்டும். இப்படி நுணுக்கமாக குறிப்புகள் எழுத வேண்டும். அப்படி வாய், மூக்கு போன்ற் சிற்றின்பப் புலன்கள் வேலை செய்ய வேண்டும். தயாரா..? மாதம் 3 லட்ச ரூபாய் வரை கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.

வொயின் சுவை பார்ப்பவர்

மேலே ஐஸ் க்ரீமுக்குச் சொன்னது போல இங்கு வொயின்களுக்கு. உலகம் பூராவும் சுற்றி புது வொயின் ரகங்களைக் கண்டு பிடிப்பது தான் இவர்கள் வேலை. இவர்களுக்கு வொயின் பற்றி பெரிய உணவுச் சரித்திர அறிவு வேண்டும், அதோடு வாயும், மூக்கும் ஹார்ப்பாக் இருக்க வேண்டும். அப்போது தான் வொயினை தரம் பிரித்து சொல்ல முடியுமாம். இதற்கு எந்த பட்டப் படிப்புகளும் தேவை இல்லை. ஆனால் அறிவு அத்தனை ஆழமாக இருக்க வேண்டும். மாதம் 8.75 லட்சம் ரூபாய் வரை கொடுத்து எடுக்க ஆட்கள் தயாராக இருக்கிறார்களாம்.

English Summary

worlds most funful jobs with high salary packages
Advertisement