முகப்பு  »  வங்கி சேவைகள்

வங்கி சேவைகள்

தமிழ் குட்ரிடர்ன்ஸ் தளத்தில் வங்கி வட்டி விகிதங்கள், ஈஎம்ஐ கால்குலேட்டர்கள், தொடர் வைப்பு நிதி மற்றும் நிரந்த வைப்பு நிதியின் வங்கி வாரியான வட்டி விகிதங்கள், அதனை ஆண்டு வாரியாகக் கணக்கிட கால்குலேட்டர்கள் போன்றவற்றை உள்ளடக்கிய மிக விளக்கமான, விரிவான வங்கி சேவை பிரிவைக் கொண்டிருக்கிறோம். கடன் வாங்குபவர்கள், டெபாசிட்டுகளைத் தொடங்குபவர்களுக்கு இந்தப் பிரிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இண்டர்நெட் வங்கி சேவை

வங்கி செயல்பாடுகள் கடந்த சில வருடங்களில் மிகப்பெரிய வர்த்தக முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இணைய வங்கி சேவையும் மற்றும் இணையத்தில் பணப் பரிமாற்றங்களும் நாம் பார்த்து வந்த பாரம்பரிய வங்கி செயல்பாட்டு முறைகளைப் பெரும்பாலும் நீக்கி விட்டது. இன்று, பாரம்பரிய வங்கியியல் புதிய தொழில்நுட்ப முறைகளை ஏற்றுக்கொண்டு அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்துள்ளது.
வங்கி வட்டி விகிதங்கள் குறித்த தகவல்கள் மற்றும் ஆன்லைன் வங்கி கால்குலேட்டர்கள் மற்றும் எஃப்டி வட்டி விகிதங்கள் போன்ற வசதிகள் வாசகர்களுக்கு வங்கி குறித்த தகவல்களைப் பெற எளிய வழியை அமைந்துள்ளது.

வங்கி வட்டி விகிதங்களின் முக்கியத்துவம்

நீங்கள் கடன் வாங்கியிருந்தாலோ அல்லது எஃப்டி இல் முதலீடு செய்திருந்தாலோ இரண்டு சந்தர்ப்பங்களிலும் வட்டி விகிதங்களைச் சரிபார்க்க வேண்டியது வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் லோன் கால்குலேட்டர்கள் மற்றும் எஃப்டி வட்டி விகித கால்குலேட்டர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தக் கால்குலேட்டர்களில் சில வருவாயுடன் வரியைக் கணக்கிட்டு உங்களுக்கு வழங்குவதில்லை. டெபாசிட்டுகள் மீதான வட்டி முதலீட்டாளர்களின் கைக்கு வரும்போது முற்றிலும் வரிவிதிப்புக்கு உட்பட்டு இருப்பதால் நீங்கள் வரிக்கான காரணிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எஃப்டி இன் மீது அதிகப் பணத்தை ஈட்டுவதற்கு, குறிப்பாகப் பெரிய அளவில் வட்டி விகிதங்களில் வேற்றுமை இருந்தால், ஒரு விரைவான ஒப்பீடு உங்களுக்கு உதவும்.
நீங்கள் வழக்கமாகச் சம்பளம் வாங்கும் தனிநபராக இருந்தால், தொடர் வைப்புத் தொகையான ரிகரிங் டெபாசிட்டைத் தேர்ந்தெடுப்பது நல்லதாகும். வட்டி விகிதங்கள் நீண்ட கால வரையறையில் அதிகமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் இந்த ரிகரிங் டெபாசிட்டுகளை நீண்ட காலவரையறையில் தொடங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, நீங்கள் நீண்ட காலவரையறையை மனதில் கொண்டிருக்காவிட்டால், முதலீடு செய்ய வேண்டாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X