பாஜகவின் எண்கள் எல்லாம் பொய்கள்...! ப சிதம்பரம் விலாசல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு வழியாக பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டார்கள். இப்போது ஒவ்வொரு நபராக தங்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டே வருகிறார்கள். இதில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்த ப சிதம்பரம் மட்டும் விதி விலக்கா என்ன..?

 

பாஜகவின் எண்கள் எல்லாம் பொய்கள்...! ப சிதம்பரம் விலாசல்..!

ஒரு பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் தாறுமாறாக பாஜகவை தாக்கி இருக்கிறார். இனி அவர் மொழியில் இருந்து.

"இன்று பாஜக ஆட்சிக் காலத்தில் வெளியிடப் படும் பொருளாதாரம் சார்ந்த டேட்டாக்கள் மற்றும் தரவுகள் பெரும்பாலும் நம்பத் தகுதியற்றதாக, அவர்களின் துதிபாடும் விதமாகவே இருக்கின்ற்ன. ஒரு அரசு அமைப்பு கொடுக்கும் தரவுகள் மற்றொரு அரசு அமைப்பு கொடுக்கும் தரவுகளோடு ஒத்துப் போவதே இல்லை." என குற்றம் சாட்டி இருக்கிறார்.

அதோடு "பாஜக ஆட்சிக் காலத்தில் தான் தேசிய மாதிரி சர்வே அமைப்பு வெளியிடும் தரவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் இருக்க வேண்டும் எனக் கொண்டு வந்திருக்கிறார்கள். மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளை அமைச்சரவை அங்கீகரிக்கும் பழகக்த்தை பாஜக தான் கொண்டு வந்திருக்கிறது. இதற்காகவே நிதி ஆயோக்கில் ஆட்களுக்கு அரசு செலவில் சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள்" என வருத்தெடுத்திருக்கிறார்.

மேலும் "நிதி அயோக் என்கிற அமைப்பு அரசுக்கு தேவையான ஆலோசனைகளை சொல்வதற்கு பதிலாக, சரி தவறுகளை அறிவுறுத்துவதற்கு பதிலாக, அரசு வெளியிடும் தரவுகளை திரிப்பது, ஆட்சியாளர்களுக்கு சரிபட்டு வரும் விதத்தில் மொத்த தரவுகளை மாற்றியமைப்பது போல மோசமான செயல்களில் ஈடுபடுகிறது" என நிதி அயோகையும் உரித்திருக்கிற ப சிதம்பரம்.

ப சிதம்பரம் இத்தனை கொதிப்பாக பேட்டி கொடுப்பதற்கு முன்னாலேயே, காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் “இது பாரதிய ஜனதா கட்சியின் கடைசி ஜூம்லா பட்ஜெட்” என கலாய்த்திருந்தார். ஜூம்லா என்றால் பொய்யான என்று அர்த்தமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

all bjp numbers are fabricated and its credibility is zero said by p chidambaram

all bjp numbers are fabricated and its credibility is zero said by p chidambaram
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X