கோவிட் வேக்சின் தயாரிப்பை அதிகரிக்க ரூ4,567.50 கோடி முன்பணம்.. யாருக்கு எவ்வளவு..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மே 1 முதல் 18 வயதிற்கு அதிகமானோர் அனைவருக்கும் கோவிட் வேக்சின் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மருந்துக்கான தேவை இந்தியாவில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

 

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க மத்திய அரசின் அறிவுறுத்தல் படி மத்திய நிதியமைச்சகம், இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் மற்றும் பாரத பயோடெக் ஆகிய நிறுவனங்களுக்கு வேக்சின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முன்பணமாகச் சுமார் 4,567.50 கோடி ரூபாய் அளவிலான தொகையை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

மோடி அரசு அறிவிப்பால் சென்செக்ஸ் சரிவிலிருந்து மீண்டது.. 500 புள்ளிகள் வரை உயர்வு..!

இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள இந்த முன்பணம் மூலம் எந்த நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை அளிக்கப்படுகிறது..? எந்த மருந்து அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

 இந்தியாவில் கொரோனா தாண்டவம்

இந்தியாவில் கொரோனா தாண்டவம்

இந்தியாவின் தலைநகர் டெல்லி, வர்த்தகத் தலைநகரான மும்பை ஆகிய பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் லாக்டவுன் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசின் அனைவருக்குமான தடுப்பு மருந்து அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது.

 4,567.50 கோடி ரூபாய் நிதியுதவி

4,567.50 கோடி ரூபாய் நிதியுதவி

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து என்ற இந்தியாவிற்கு மிகவும் அவசியமான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில், அதைச் சாத்தியமாக்க நிதியமைச்சகத்தின் 4,567.50 கோடி ரூபாய் நிதியுதவி பெரிய அளவில் உதவிடும். இந்நிலையில் 4,567.50 கோடி ரூபாய் முன்பணத்தில் எந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அளிக்கப்படுகிறது.

 சீரம் ஆதார் பூனவல்லா
 

சீரம் ஆதார் பூனவல்லா

இந்தியாவின் வேக்சின் கிங் என அழைக்கப்படும் ஆதார் பூனவல்லா தலைமை வகிக்கும் புனே தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தற்போது AstraZeneca-வின் கோவிஷீல்டு தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு 4,567.50 கோடி ரூபாய் முன்பணத்தில் 3000 கோடி ரூபாய் அளிக்கப்பட உள்ளது.

 ஹைதராபாத் பாரத் பயோடெக்

ஹைதராபாத் பாரத் பயோடெக்

இதேபோல் ஹைதராபாத் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பு மருந்தைத் தயாரிக்கிறது, இந்த நிறுவனத்திற்கு மீதமுள்ள 1,567.50 கோடி ரூபாய் அளவிலான தொகையை அளிக்கப்பட உள்ளதாக ஏஎன்ஐ தளம் தெரிவித்துள்ளது.

 சீரம் மற்றும் பாரத் பயோடெக்

சீரம் மற்றும் பாரத் பயோடெக்

சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்து இந்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுக் கடந்த பல மாதங்களாக அதாவது ஜனவரி மாதம் முதல் நடைமுறை செய்யப்பட்டுப் பல கோடி மக்கள் இத்தடுப்பு மருந்தைப் பெற்று வருகின்றனர். இதனால் மக்கள் எவ்விதமான பயமும் குழப்பமும் இல்லாமல் கொரோனா வேக்சினை பெறலாம் என அரசு கூறுகிறது.

 மே 1 கொரோனா தடுப்பு மருந்து

மே 1 கொரோனா தடுப்பு மருந்து

மேலும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் கொரோனா வேக்சின் பெற உள்ள நிலையில், நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் vaccination drive குறித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

 சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா

சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமாக விளக்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தடுப்பு மருந்தை அதிகரிக்க நிதியுதவியை மத்திய அரசிடம் கோரியது. இதன் வாயிலாகவே தற்போது மத்திய அரசு 4,567.50 கோடி ரூபாய் அளவிலான முன்பணத்திற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SII, Bharat Biotech receive ₹4,567 crore to boost vaccine production capacity: Who gets more money?

SII, Bharat Biotech receive ₹4,567 crores to boost vaccine production capacity: Who gets more money?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X