ஜாயின்ட் அகௌண்ட்களில் எத்தனை வகை உண்டு?

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து தொடங்கும் வங்கிக் கணக்கு ஜாயின்ட் அகௌண்ட்(கூட்டு கணக்கு) என்று அழைக்கப்படுகிறது. எனினும் ஜாயின்ட் அகௌண்ட் தொடங்கியவர்கள் ஒரு வேளை இறந்துவிட்டால் நாமினியாக நியமிக்கப்பட்டவர் அந்த கணக்கைத் தொடரலாம். ஒரு வேளை நாமினி நியமிக்கப்படாமல் இருந்தால் ஜாயின்ட் அகௌண்ட் வைத்திருந்தவர்களின் சட்ட ரீதியான வாரிசுகள் கணக்கில் இருக்கும் பணத்தைப் பெறலாம். தற்போது நடைமுறையில் இருக்கும் பலவிதமான ஜாயின்ட் அகௌண்ட்களைப் பற்றி பார்ப்போம்.

ஈதர் ஆர் சர்வைவர்

ஈதர் ஆர் சர்வைவர் என்ற முறை தான் பொதுவான ஜாயின்ட் அகௌண்ட் ஆகும். எடுத்துக்காட்டாக எ மற்றும் பி ஆகிய இருவர் இணைந்து ஒரு ஜாயின்ட் அகௌண்டை வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால், உயிரோடு இருப்பவரிடம் பணம் ஒப்படைக்கப்படும்.

எனிஒன் ஆர் சர்வைவர்

எ, பி மற்றும் சி ஆகிய இரண்டுக்கும் மேற்போட்டோர் இணைந்து வங்கிக் கணக்கைத் தொடங்கியிருக்கலாம். இவர்களில் இருவர் இறந்துவிட்டால், உயிரோடு இருக்கும் 3வது நபர் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

ஃபார்மர் அல்லது சர்வைவர்

எ மற்றும் பி ஆகியோர் இணைந்து ஜாயின்ட் அகௌண்ட் தொடங்கி இருந்தாலும், எ மட்டுமே பணத்தை வங்கியிலிருந்து எடுக்க முடியும். இந்த நிலையில் எ இறந்துவிடும் தருவாயில் பி பணத்தை எடுக்க அனுமதிக்கப்படுவார்

லேட்டர் அல்லது சர்வைவர்

இந்த முறையில் இருவர் இணைந்து ஜாயின்ட் அகௌண்டைத் தொடங்கலாம். அதே நேரத்தில் இருவருமே வங்கியிலிருந்து பணத்தை எடுக்கலாம்.

மைனர் அகௌண்ட்

இந்த முறையில் சிறுவர் சிறுமியர், தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இணைத்து ஜாயின்ட் அகௌண்டை தொடங்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: banks, வங்கிகள்
English summary

Different types of joint accounts | ஜாயின்ட் அகௌண்ட்களில் எத்தனை வகை உண்டு?

An account opened by more than one individual can be operated by single individual or by more than one individual jointly. This is called a joint account. However, on death of depositors, the nominee gets access. In case there is no nomination and all depositors die, legal heirs of all depositors will get the money. The various ways in which they can be operated are explained above.
Story first published: Wednesday, March 27, 2013, 14:31 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns