கிராஜுவிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் முழுமையாக வேலை செய்த பணியாளர்களுக்கு அந்த நிறுவனத்தால் வழங்கப்படும் தொகையே கிராஜுவிட்டி என்று அழைக்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தை விட்டு பல காரணங்களுக்காக விலகலாம். ஆனால் அவர் 5 ஆண்டுகளை அந்த நிறுவனத்தில் முடித்துவிட்டால் அவருக்கு அந்த தொகை வழங்கப்படும்.

 

(Planning for home loan? Here are few FAQs)

கிராஜுவிட்டி தொகையைக் கணக்கிடுவதில் நிறுவனங்கள் பல அளவீடுகளை வைத்திருக்கின்றன. குறிப்பாக கிராஜுவிட்டி சட்டம் 1972ன் கீழ் ஒரு பணியாளர் வருகிறாரா அல்லது அந்த நிறுவனம் வழங்கும் கிராஜுவிட்டி விதியின் கீழ் அவர் வருகிறாரா என்பதை வைத்து இந்த தொகை வழங்கப்படுகிறது.

1972ம் ஆண்டு கிராஜுவிட்டி சட்டம்

1972ம் ஆண்டு கிராஜுவிட்டி சட்டத்தின் கீழ் ஒரு தொழிலாளி வந்தால் அவருடைய 15 நாட்கள் சம்பளத்தோடு அவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஆண்டுகளைப் பெருக்கி அதில் வரும் மொத்தத் தொகைய அவர் கிராஜுவிட்டித் தொகையாகப் பெறுவார். மேலும் அவருடயை அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றைக் கணக்கிட்டு அதை அவர் பணியாற்றிய ஆண்டுகளோடு பெருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒரு தொழிலாளி ரூ.10,000த்தை மாத சம்பளமாகப் பெறுகிறார் என்று எடுத்துக் கொள்வோம். இந்த சம்பளத்தில் அவருடைய அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவை உள்ளடக்கி இருக்கிறது. தற்போது அவருடைய கிராஜுவிட்டி தொகையக் கீழ்கண்டவாறு கணக்கிடலாம்.

கிராஜுவிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது?
கிராஜுவிட்டி = கடைசியாக வாங்கிய சம்பளம் x 15/26 x பணியாற்றிய மொத்த ஆண்டுகள். இவ்வாறு கணக்கிட்டு அதில் கிடைக்கும் தொகை கிராஜுவிட்டியாக வழங்கப்படும். அதாவது 10000x15/26x10 = Rs 57,692 வழங்கப்படும்.

ஒரு சில காரணங்களுக்காக 5 வருடம் வேலை செய்த தொழிலாளிக்கு கிராஜுவிட்டி தொகையை வழங்க மறுக்கலாம். ஒருவேளை அந்த தொழிலாளி நிறுவனத்தின் சொத்துக்களுக்கோ அல்லது அங்குள்ள பொருள்களுக்கோ ஏதாவது சேதத்தை ஏற்படுத்தினால் அதைக் காரணம் காட்டி அவருக்கு கிராஜுவிட்டித் தொகைய வழங்காமல் இருக்கலாம்.

 

ஆகவே இந்த கிராஜுவிட்டித் தொகைய ஒரு தொழிலாளி பெற வேண்டும் என்றால் அவர் ஒரு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகளாவது தொடர்ந்து வேலை செய்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வேளை 5 ஆண்டுகளுக்குள் ஒருவர் இறந்துவிட்டால் அவர் அந்த நிறுவனத்தில் 1 ஆண்டு முழுமையாக வேலை செய்திருந்தாலும் அவருக்கு அந்த கிராஜுவிட்டித் தொகை வழங்கப்படும். எனவே இந்த கிராஜுவிட்டித் தொகையை தொழிலாளிகளின் ஒரு வரப்பிரசாதம் என்றே அழைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to calculate gratuity? | கிராஜுவிட்டி தொகையை எவ்வாறு கணக்கிடுவது?

Gratuity is a part of the benefits that an employee receives from the employee, who has completed 5 years of continuous service. An employee could leave his job for various reasons, after which receiving his gratuity. There could be various ways of calculating gratuity, depending on whether an employee is covered under the payment of gratuity act, 1972 or it is a voluntary step on the part of a company etc.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X