தங்க நாணயம் வாங்கப் போகிறீர்களா? இதை படிச்சிட்டுப் போங்களேன்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு காலத்தில் அரசர்கள் தங்களைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்கு வெகுமதியாக தங்க நாணயங்களைப் பரிசளிப்பர். அந்த தங்க நாணயங்களுக்கு ஒரு பெரிய மரியாதை உண்டு.

 

அதுபோல் இப்போதும் தங்க நாணயங்களுக்கு மிகப் பெரிய மதிப்பும், மரியாதையும் உண்டு. எனவே பலர் தங்க நாணயங்களை வாங்க ஆசைப்படுகின்றனர். இந்தியாவில் தங்க நாணயங்களை வாங்குவது எளிது. ஆனால் அவற்றைத் திருட்டிலிருந்து பாதுகாக்க ஒரு சிறந்த பாதுகாப்பான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தங்க நாணயங்களைப் பத்திரமாக வைத்திருக்க கோல்டு இடிஎப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் நகைக் கடையிலோ அல்லது வங்கியிலோ எங்கிருந்து தங்க நாணயங்களை வாங்கினாலும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

பான் கார்டு வைத்திருக்கிறீர்களா?

பான் கார்டு வைத்திருக்கிறீர்களா?

ஒரு வேளை நீங்கள் ரூ.50,000க்கு அதிகமாக தங்க நாணயங்களை வாங்க விரும்பினால் உங்களுடன் பான் கார்டை வைத்திருப்பது நல்லது. ஏனெனில் நீங்கள் பான் கார்டு வைத்திராவிட்டால் வங்கியோ அல்லது நகைக் கடையோ உங்களுக்கு ரூ.50,000க்கு அதிகமாக தங்க நாணயங்களை விற்கமாட்டார்கள்

நகைக் கடைகள் சிறந்தது

நகைக் கடைகள் சிறந்தது

வங்கிகளும் தங்க நாணயங்களை விற்பனை செய்கின்றன. ஆனால் நகைக் கடைகளில் தங்க நாணயங்களை வாங்குவது சிறந்ததாக இருக்கும். ஏனெனில் வாங்கிய தங்க நாணயங்களை நீங்கள் விற்க வேண்டும் என்றால் அவற்றை அந்த நகைக் கடையே வாங்கிக் கொள்ளும். ஆனால் நகைக் கடைகளில் தங்க நாணயங்கள் வாங்கும் போது அதன் தூய்மையை பரிசோதித்து வாங்குவது நல்லது.

வங்கிகள் மிக எளிதாக அந்த தங்க நாணயங்களை வாங்க மாட்டார்கள். அந்த தங்க நாணயங்களுக்கு உத்திரவாதம் இருந்தாலும் அதன் தூய்மையை பரிசோதிப்பார்கள்.

தங்க நாணய அளவுகள்
 

தங்க நாணய அளவுகள்

பொதுவாக தங்க நாணயங்கள் 5, 10, 20 மற்றும் 50 கிராம் அளவுகளில் வருகின்றன. உங்களுக்கு பிடித்த அளவை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் அவ்வாறு தங்க நாணயங்களை வாங்கும் போது எலக்ட்ரானிக் படிவம் மூலம் வங்கினால் அது பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவ்வாறு வாங்கும் போது அந்த தங்க நாணயங்களை விற்பது மிக எளிதாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to buy gold coins in India? | தங்க காசு வாங்கப் போகிறீர்களா? இதை படிச்சிட்டுப் போங்களேன்...

Buying gold coins is not the ideal way to buy gold, since one has to arrange a place to store it and one would always be worried of theft. Gold ETFs are far better. In any case here are a few things to note when you buy gold coins, either from a jeweller or the bank.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X