அஞ்சலக சேமிப்பு திட்டங்களும், அதன் வகைகளும்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அஞ்சலகங்கள் வழங்கும் சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 100 சதவீத பாதுகாப்பு உண்டு. மேலும் அஞ்சலகங்கள் வழங்கும் ஒரு சில சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வரி செலுத்தவும் வேண்டியதில்லை. அதோடு அஞ்சலகத்தில் தொடங்கும் கணக்குகளை வேறு வங்கிகளுக்கும் மிக எளிதாக மாற்ற முடியும்.

அஞ்சலகங்கள் வழங்கும் சேமிப்புத் திட்டங்கள்

மன்த்லி இன்கம் ஸ்கீம்

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 100 சதவீத பாதுகாப்பு உண்டு. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ஒரு சிறிய தொகையை வருமானமாக பெறலாம். குறிப்பாக, ஓய்வு பெற்றவர்கள் மற்றும் முதியோருக்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெறலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 8.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் 5 ஆண்டுகள் கால வரையறை கொண்டது.

இந்த திட்டத்தில் ஒருவர் தனியாக கணக்குத் தொடங்கினால் குறைந்தபட்சமாக ரூ.1500ம், அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ஒருவேளை ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து கணக்குத் தொடங்கினால் குறைந்தபட்சமாக ரூ.1500ம் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டம், ஒருவருடைய அஞ்சலக வங்கி சேமிப்பு கணக்கிற்கு ஆட்டோமேட்டிக் கிரெடிட்டை உறுதி செய்கிறது.

அஞ்சலக டைம் டெபாசிட் (டிடி) ஸ்கீம்

இந்த திட்டத்தில் வயது வந்த ஒருவரோ அல்லது இருவரோ இணைந்து கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்தின் காலம் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு முதலாம் ஆண்டு காலாண்டில் 7.7 சதவீத வட்டியும், 2ம் ஆண்டு காலாண்டில் 7.8 சதவீத வட்டியும், 3ம் ஆண்டு காலாண்டில் 8.4 சதவீத வட்டியும், 4வது ஆண்டு காலாண்டில் 8.5 சதவீத வட்டியும் வழங்கப்படும். ஒரு வேளை முதலீட்டு தொகை 5 ஆண்டுகளை கடந்துவிட்டால், 1961ம் ஆண்டு வருமானவரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம்.

இந்த திட்டத்தில் ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக ரூ.200 முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக நம்மால் முடிந்த அளவு முதலீடு செய்யலாம்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு

இந்த சேமிப்பு கணக்கில் தனி நபர் சேரலாம். குழுக்களோ அல்லது நிறுவனங்களோ இந்த கணக்கைத் தொடங்க முடியாது. இந்த கணக்கில் சேமிக்கப்படும் சேமிப்புக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. எனினும் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று தெரிகிறது.

நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட்

வருமான வரியைச் செலுத்த வேண்டியவர்களான அரசு ஊழியர்கள், வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத வருமானம் பெறுவோர் போன்றவர்களுக்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக நம்மால் முடிந்த அளவு தொகையை முதலீடு செய்யலாம். மேலும் இதிலிருந்து பெறும் வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை. இந்த திட்டம் வழங்கும் சான்றிதழைக் கொண்டு மிக எளிதாக வங்கிகளில் கடன் பெறலாம். இந்த திட்டத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக முதலீடு செய்தால் அந்த தொகைக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவன் கீழ் வரி விலக்கு உண்டு.

அஞ்சலகம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கும் சேமிப்பு திட்டங்கள்

சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (எஸ்சிஎஸ்எஸ்) அகௌண்ட்

60 வயதான எந்த ஒரு இந்தியரும் இந்த கணக்கைத் தொடங்கலாம். விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற 55 வயது நிரம்பியவர்களும், ஓய்வு பெற்ற 3 மாதங்களுக்குள் இந்த கணக்கைத் தொடங்கலாம். அரசு பாதுகாப்பு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த கணக்கைத் தொடங்க வயது வரம்பு இல்லை.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. மேலும் மன்த்லி இன்கம் ஸ்கீம் (எம்ஐஎஸ்) மற்றும் சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (எஸ்சிஎஸ்எஸ்) போன்ற திட்டங்கள் மூத்த குடிமகன்களுக்கு மிகவும் பலனளிக்கும் திட்டங்களாக இருக்கின்றன. மேற்கூறிய திட்டங்களில் இணைந்து, அதிலிருந்து வரும் வட்டியை, சேமிப்பு கணக்கின் மூலம் ரெக்கரிங் டெபாசிட் கணக்கிற்கு மாற்றினால் 10.5 சதவீத வட்டி பெறலாம்.

பப்ளிக் ப்ராவிடன்ட் பன்ட் (பிபிஎஃப்)

இந்த திட்டம் மாத வருமானம் வாங்குவோருக்கும் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கும் ஏற்ற மிகச் சிறந்த திட்டமாகும். நீண்ட காலத்திற்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஒரு வருடத்திற்கு ரூ.1 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 8.8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இதில் இருந்து வரும் வட்டிக்கு வரி செலுத்த தேவையில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Post Office Schemes and its types | அஞ்சலக சேமிப்பு திட்டங்களும், அதன் வகைகளும்

Post office schemes are offered by the Government of India and are highly secure. Some of the schemes are exempted from tax and interestingly accounts can transferred across cities.
Story first published: Wednesday, April 3, 2013, 17:40 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X