ஆன்லைனில் வருமான வரி செலுத்துவதால் உள்ள 7 நன்மைகள்!

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

ஆன்லைனில் வருமான வரி செலுத்துவதால் உள்ள 7 நன்மைகள்!
சென்னை: பொருட்களுக்கு, வருமானத்திற்கு அல்லது இதர சேவைகளுக்கு அரசாங்கம் வரி வசூலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்படி வசூலிக்கப்படும், வரிப்பணம் அரசாங்கத்தை நடத்துவதற்கும், பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

முன்பெல்லாம், இவ்வரிகளை செலுத்த நேரடியாக அத்துறை அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும். இது மக்களுக்கு பெரும் இன்னலாகவும், சிக்கலாகவும் இருந்தது. மக்களின் தேவையை உணர்ந்த அரசாங்கம், இப்பொழுது வரிகளை ஆன்லைன் மூலமாக எளிய முறையில் தாக்கல் செய்யும் வசதியைச் செய்துள்ளது. இதனை இ-ஃபைலிங்(E-Filing) என்று அழைக்கின்றனர்.

ஆன்லைனில் வரி செலுத்துவதால் உள்ள நன்மைகள்:

1. எந்த இடத்தில் இருந்தும், எந்நேரத்திலும் ஆன்லைனில் நெட்பேங்கிங் மூலம் வரி செலுத்த முடியும்.

2. எவ்வித காத்திருத்தலும் இன்றி, வங்கிகள் மூலமாக உடனடியாக பணப் பரிவர்த்தனை முடிவடையும்.

3. இ-சலான் (E-Challan) அல்லது வரி செலுத்தும் சீட்டில், நாம் கொடுக்கும் தகவல்கள் நேரடியாக வருமான வரித் துறை அதிகாரிகளை அடைகிறது. இடையில், வங்கிகள் இது தொடர்பாக எவ்வித பணிகளிலும் ஈடுபடுவதிவில்லை.

4. எப்பொழுது வேண்டுமானாலும் வரி செலுத்திய சீட்டையோ அல்லது ரசீதையோ பிரிண்ட் செய்து கொள்ளலாம் அல்லது சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

5. பணப் பரிவர்த்தனைக்கான ஒப்புதலை வங்கிகள் வழங்கியவுடன் அது தொடர்பான ரசீது உடனடியாக வழங்கப்படுகிறது.

6. மேலும், இந்தப் பணப் பரிவர்த்தனை நம் வங்கி அறிக்கையிலும் பிரதிபலிக்கும்.

7. நாம் செலுத்திய வரிப் பணம் சரியாக வருமான வரித் துறை அலுவலகத்தை அடைந்ததா என்பதை அறிந்த கொள்ள https://tin.tin.nsdl.com/oltas/index.html என்ற இணைதளத்திற்கு செல்லவும்.

வரி செலுத்துவோம், நாட்டை முன்னேற்றுவோம் !

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Seven advantages of paying taxes online | ஆன்லைனில் வருமான வரி செலுத்துவதால் உள்ள 7 நன்மைகள்!

Tax is financial fee charged by the government on a product, income or activity of a person. The intent of taxation is to finance government expenditure and to provide facility for the common man. For the convenience of the people, the government has come up with the E-filing, where you can file your tax online with the help of internet.
Story first published: Thursday, April 11, 2013, 6:54 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns