வரியை சேமிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே இஎல்எஸ்எஸ் இருக்கு

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரியை சேமிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே இஎல்எஸ்எஸ் இருக்கு
சென்னை: சம்பாதிக்கும் வர்க்கத்தினர் அனைவரும் கணக்கீடுகளிலும், எவ்வகையான தேர்வுகள் வரி சேமிப்புக்கு சிறந்தவை என்ற ஆராய்ச்சிகளிலும் பரபரப்பாக உள்ள காலகட்டம் இது. பல வகை வரி சேமிப்புப் பத்திரங்களும் வெள்ளமென பாய்ந்து, மின்னும் பொன்னைப் போல் விற்றுத் தீர்க்கின்றன. இன்வெஸ்ட்மென்ட் கேப்பான 100000 ரூபாயை விட சற்றே கூடுதலாக இருக்கக்கூடியதான தொடக்க முதலீடு ரூபாயான 20000-க்கு வரி சேமிப்பு இருப்பினும், மக்கள் இவ்வெளியீடுகளை வாங்கத் திரள்கின்றனர். மூலதன மதிப்பேற்றம் மற்றும் வரி சேமிப்பு ஆகிய இரண்டு சாத்தியக் கூறுகளும் கொண்ட திட்டம் ஏதேனும் உள்ளதா? ஈக்விட்டி லிங்க்ட் சேமிப்புத் திட்டம் (இஎல்எஸ்எஸ்) எனப்படும் அவ்வாறான திட்டம் ஒன்றைத் தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

(How to buy gold coins in India?)

இஎல்எஸ்எஸ் என்றால் என்ன?

ஈக்விட்டி லிங்க்ட் சேமிப்புத் திட்டம் (இஎல்எஸ்எஸ்) என்பது மியூச்சுவல் ஃபண்டின் வழக்கமான அம்சங்களுடன் வருமான வரிச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வரக்கூடிய வரி சேமிப்புக்கான கூடுதல் அம்சத்துடன் கூடிய ஈக்விட்டி-ஓரியண்ட்டட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாகும். ரூ. 1 லட்சம் வரை இஎல்எஸ்எஸ் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி விலக்கு உண்டு.

இதன் முக்கிய அம்சங்கள் என்ன?

இவை, ஈக்விட்டிகளுக்கான சொத்து ஒதுக்கீடு சுமார் 80-லிருந்து 100 சதவீதம் வரை போகக்கூடிய, ஈக்விட்டி-ஓரியன்ட்டட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாகும். அதிக ரிட்டர்னைக் கொண்டுள்ள சொத்துக்களான ஈக்விட்டிகளை நோக்கி ஒதுக்கீடுகள் சாய்வதினால், இத்தகைய ஃபண்டுகளின் முக்கிய குறிக்கோள் மூலதன மதிப்பேற்றமே ஆகும்.

இஎல்எஸ்எஸ் மூலம் என்ன விதமான வரிப் பயன்கள் பெறலாம்?

நீங்கள் இஎல்எஸ்எஸ்-இல் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரிச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரிப் பயன்களைப் பெறலாம். இதன் முக்கியமான பயன்பாடு என்னவெனில் அதிபட்சமாக 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அதற்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு உண்டு. இம்முதலீட்டின் ரெடெம்ப்ஷன் மூலம் கிடைக்கும் மூலதன லாபங்களுக்கு, 10(38) பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். இத்திட்டத்தை கையில் வைத்திருக்கும் போது, டிவிடென்ட் மூலம் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்திற்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 10(35) - இன் கீழ், வரி விலக்கு பெறலாம்.

முதலீட்டு கோட்பாடுகள்:

இத்திட்டத்தின் லாக்-இன் பீரியட் மூன்று வருடங்கள் இருப்பினும் மற்ற வரி சேமிப்புத் திட்டங்களான பிபிஎஃப் மற்றும் என்எஸ்சி ஆகியவற்றின் லாக்-இன் பீரியடுகளைக் காட்டிலும், இதன் கால அளவு குறைவாக இருப்பதினால் இதில் தாராளமாக முதலீடு செய்யலாம். சந்தை செயல்பாடு நன்றாக இருப்பின் இஎல்எஸ்எஸ் மூலதன மதிப்பேற்றத்துக்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், பிபிஎஃப் மற்றும் என்எஸ்சி ஆகியவற்றில் ஒப்புக்கொண்ட வட்டித் தொகைக்கு மேல் இதுபோன்ற மூலதன மதிப்பேற்றத்துக்கான வாய்ப்பு அறவே கிடையாது.

இங்கு, பெரும்பான்மை ஒதுக்கீடு ஈக்விட்டிகளுக்காக இருப்பதினால் 3 வருட கால லாக்-இன் பீரியடும் உங்களுக்கு சாதகமான ஒன்றேயாகும். வழக்கமாக, ஈக்விட்டிகள் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களாகக் கருதப்படுகின்றன. பொதுவாக, நீண்ட காலத் திட்ட முதலீட்டாளர்கள் வழக்கமான ரிட்டர்ன்ஸைக் காட்டிலும், கூடுதலான ரிட்டர்ன்ஸையே பெறுவர். மூன்று வருட கால லாக்-இன் பீரியட், உங்கள் முதலீட்டுப் பங்குகளை, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு முன்பே விற்கச் சொல்லி, உங்களை சபலப்படுதலாம். உண்மையில், இந்த கால வரையறை உங்களுக்கு வருங்காலத்தில் வெகுமானம் அளிக்கக்கூடிய மறைமுகமான வரப்பிரசாதமேயாகும். இதனோடு, உங்கள் ரிட்டர்ன் சதவீதமும், வரி சேமிப்புகளின் மூலம் சிறந்ததோர் ஊட்டத்தைப் பெறும். நீங்கள் சந்தை அபாயங்களினால் கலக்கமடையாதவராய் சற்று அபாயகரமான முதலீடு செய்யத் தயாராய் இருப்பவரென்றால், உங்களுக்கு இஎல்எஸ்எஸ் பரிந்துரைக்கப்படுகிறது.

இஎல்எஸ்எஸ்-இல் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் நேரம், மற்றும் பங்குச் சந்தைகளில் ஆராய்ச்சி செய்யத் தேவையான உங்கள் முயற்சி ஆகியவற்றை மிச்சப்படுத்தி, சராசரிக்கும் அதிகமான ரிட்டர்ன்ஸைப் பெற்று மகிழலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax Saving Using Equity Linked Saving Scheme | வரியை சேமிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே இஎல்எஸ்எஸ் இருக்கு

All the earning people are busy with calculations and research to find out which is the best tax saving option. We are witnessing a flood of tax saving bonds in this season and they are selling like glittering gold now a day. Even though there is a tax saving on initial investment of 20000 just because it’s over and above the investment cap of 100000 people are flocking the issues. Is there any instrument which provides an opportunity of capital appreciation together with Tax saving? We will be discussing one such instrument called Equity Linked Saving Scheme (ELSS) in this article.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X