கைக்காசை போடாமல் வர்த்தகம் செய்ய உதவும் வெர்ச்சுவல் டிரேடிங்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைக்காசை போடாமல் வர்த்தகம் செய்ய உதவும் வெர்ச்சுவல் டிரேடிங்
சென்னை: பங்குச் சந்தையில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தை வெர்ச்சுவல் டிரேடிங் என்பதாகும். பங்குச் சந்தையில் எப்போது முதலீடு செய்ய வேண்டும்? எந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்? மற்றும் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும்? என்று படிப்படியாகக் கற்றுக் கொடுப்பதே வெர்ச்சுவல் டிரேடிங் ஆகும். இந்த வெர்ச்சுவல் டிரேடிங், பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு எவ்வாறு உதவியாக இருக்கிறது என்று பார்ப்போம்.

வெர்ச்சுவல் டிரேடிங் என்றால் என்ன?

 

வெர்ச்சுவல் டிரேடிங் என்றால் பங்குச் சந்தையில் இருக்கும் ஒரு தனித்துவமான ப்ரோக்ராம் ஆகும். இந்த ப்ரோக்ராம் பங்குச் சந்தையில் உள்ள நெளிவு சுழிவுகளைக் கற்றுத் தருகிறது. நாம் நம் கையில் இருந்து பணத்தை போடாமல் வெர்ச்சுவல் பணத்தை வைத்து வர்த்தகம் செய்வது. இந்த ப்ரோகிராம் பங்குச் சந்தையின் டூப்ளிக்கேட் நேரடி வர்த்தகத்தை நமது கம்யூட்டரில் வழங்குகிறது. இதன் மூலம் ஒரு முதலீட்டாளர் சிரமம் இல்லாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்யவோ அல்லது பங்குகளைப் பரிமாற்றம் செய்யவோ முடியும்.

 

வெர்ச்சுவல் டிரேடிங் நன்மைகள்

இந்த வெர்ச்சுவல் டிரேடிங்கில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இந்த வெர்ச்சுவல் டிரேடிங் ஒருவரை பங்குச் சந்தையில் ஒரு சிறந்த முதலீட்டாளராக மாற்றிவிடும்.

களப்பயிற்சி அளிக்கும் வெர்ச்சுவல் டிரேடிங்

இந்த வெர்ச்சுவல் டிரேடிங் பங்குச் சந்தையின் நேரடி வர்த்தகத்தை ஒத்த ஒரு ப்ரோகிராமை வழங்கும். அதன் மூலம் நீங்கள் உங்களின் பங்குச் சந்தை நடவடிக்கைகளை மிக எளிதாக ஒப்பிட்டு பார்க்க முடியும். பங்குச் சந்தையில் உள்ள அடிப்படையான அணுகுமுறைகள், யுத்திகள்போன்றவற்றை இந்த ப்ரோகிராம் மூலம் கற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் ஒருசில அடிப்படையான சோதனைகளையும் செய்து பார்க்க முடியும்.

ரிஸ்க் ஃப்ரீ

பணத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம் இந்த ப்ரோக்ராமில் இல்லை. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வெர்ச்சுவல் தொகையை ஒதுக்கி அந்த தொகையை வைத்து நீங்கள் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

இந்த வெர்ச்சுவல் டிரேடிங் பங்குச் சந்தையின் நடவடிக்கைகளைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் பங்குகளின் பரிவர்த்தனைகள், பங்குகளின் விலை மற்றும் உலக பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.

பங்குச் சந்தையில் புதியவர்களுக்கு பாடம் நடத்தும் வெர்ச்சுவல் ட்ரேடிங்

ஒருவர் பங்கு வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கு முன்பாக இந்த வெர்ச்சுவல் டிரேடிங்கில் ஒரு வருடமாவது ஈடுபட்டிருந்தால் அவர் பங்குச் சந்தையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும். அந்த ஒரு வருடத்தில் பங்கு வர்த்தகத்தில் ஏற்படும் சுழற்சி, ஏற்றம் மற்றும் இறக்கம் ஆகிய அனைத்தையும் அவர் தெரிந்துகொள்ள முடியும். அதோடு அவரை இந்த ப்ரோக்ராம் ஒரு சிறந்த முதலீட்டாளராக மாற்றும். குறிப்பாக புதியவர்களைவிட பங்கு வர்த்தகத்தில் தொழில் ரீதியாக ஈடுபடுபவர்கள்தான் அதிகமான அளவில் இந்த வெர்ச்சுவல் டிரேடிங்கில் ஈடுபடுகின்றனர்.

உங்கள் கவனத்திற்கு

இந்த வெர்ச்சுவல் டிரேடிங், பங்கு வர்த்தகத்தில் புதிதாக முதலீடு செய்பவர்களுக்கு ஒரு பயிற்சியாளராக இருக்கும் என்பது உண்மையே. ஆனால் இந்த வெர்ச்சுவல் டிரேடிங் உண்மையான மனித பயிற்சியாளரை ஈடு செய்ய முடியாது. ஒரு சில நேரங்களில் இந்த ப்ரோக்ராம் தவறான தகவல்களையும் தர வாய்ப்பிருக்கிறது. அதாவது பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் மிகப் பெரியத் தொகையை அள்ளிவிடலாம் என்ற தவறான தகவலையும் தர வாய்ப்பிருக்கிறது. இந்த வெர்ச்சுவல் டிரேடிங் மிகவும் முக்கியமானது. அதே நேரத்தில் ஒரு பயிற்சியாளரையும் நீங்கள் வைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is virtual trading in stock market? | கைக்காசை போடாமல் வர்த்தகம் செய்ய உதவும் வெர்ச்சுவல் டிரேடிங்

Many investors have burnt their fingers while investing in stock market. Primary reason for this is lack of knowledge and the presumption that making money in stock market is as easy as buying low and selling high. Before investing people do not spend time in understanding the market dynamics and fundamental reasons behind price movements. The only way you can make money in stock market is by gaining knowledge and controlling your emotions. One very interesting idea has popped up in recent past backed by the power of internet and computing which helps you in overcoming the hurdle of knowledge and emotional control i.e. Virtual Trading or Paper Trading. This program is designed especially for beginners but professionals also use it for testing new methodologies.
Story first published: Wednesday, April 24, 2013, 15:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X