இந்த ஹெச்.ஆர்.ஏ.-வை எப்படி தான் கணக்கிடுகிறார்கள்?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஹெச்.ஆர்.ஏ.-வை எப்படி தான் கணக்கிடுகிறார்கள்?
சென்னை: வருமான வரி கட்டுவதிலிருந்து விலக்கு பெறுவதற்காக செய்யப்படும் ஹெச்.ஆர்.ஏ. கணக்கீடு எவ்வாறு செய்யப்படுகிறது என்பது பற்றி பலருக்கு குழப்பமாகவே இருக்கிறது. ஹெச்.ஆர்.ஏ. கணக்கீடு இடத்திற்கு இடம் மாறுபடும். அதனால் எந்த இடத்திற்கு ஏற்ப எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று புரிந்து கொள்வது சற்று புரியாத புதிராகத்தான் இருக்கும்.

 

வீட்டு வாடகை செலுத்துபவர்கள், வருமானவரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின் கீழ் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுகின்றனர். ஆனால் உங்கள் வீட்டு வாடகைப் படி (ஹெச்.ஆர்.ஏ.), நீங்கள் செலுத்திய வீட்டு வாடகை, உங்கள் சம்பளம் மற்றும் நீங்கள் வசிக்கும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

எடுத்துக்காட்டாக மும்பை, கொல்கத்தா, அல்லது சென்னை போன்ற நகரங்களில் நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால், உங்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து 50 சதவீதம் ஹெச்.ஆர்.ஏ. கணக்கிடப்படும். மற்ற நகரங்களில் நீங்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் 40 சதவீதம் ஹெச்.ஆர்.ஏ. கணக்கிடப்படும்.

எனினும் நீங்கள் முதலில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டும். அதோடு அந்த வீடு உங்களுக்குச் சொந்தமாக இருக்கக் கூடாது. அதுபோல் வாடகை செலுத்துவதற்கான ரசீதை நீங்கள் சமர்பிக்க வேண்டும். மேலும் சொந்த வீடு வைத்திருந்து அந்த வீட்டிற்கான வீட்டு லோனை நீங்கள் செலுத்தி வந்தால், வருமானவரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெற விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் நீங்கள் வீட்டு லோன் மற்றும் வீட்டு வாடகைச் செலுத்துவதன் மூலம் வருமானவரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.

மேலும் ஹெச்.ஆர்.ஏ. என்பது அடிப்படை சம்பளம், டியர்னஸ் அலவன்ஸ் மற்றும் கமிஷன்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதுபோல் நீங்கள் ஹெச்.ஆர்.ஏ. அலவன்ஸ் பெறுவதற்கு முன்பாக நீங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாடகைச் செலுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் வாடைகைச் செலுத்தாமல் ஹெச்.ஆர்.ஏ. அலவன்ஸ் பெற்றால் அதற்கு வரிவிலக்கு பெற முடியாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

HRA and tax benefits: A few things to know | இந்த ஹெச்.ஆர்.ஏ.-வை எப்படி தான் கணக்கிடுகிறார்கள்?

Individuals are often confused on the manner of HRA calculation for computing tax benefits and it's certainly confusing given that it could vary from city to city. Those who pay house rent are eligible for tax deduction under Section 10(13A) of the Income Tax Act. Your house rent allowance (HRA) would depend on a few things including the actual rent paid, your salary and the city you reside in. If you reside in Mumbai, Delhi, Kolkata or Chennai it is calculated on 50 per cent of your basic salary, while for other cities it is 40 per cent.
Story first published: Thursday, May 2, 2013, 18:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more