இந்திய முறை மருத்துவத்திற்கும் இன்சூரன்ஸ் கவர்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலோபதி அல்லாத மருத்துவத்திற்கும் இன்சூரன்ஸ் கவர்
சென்னை: ஆயுஷ் எனப்படும் இந்தியமுறை மருத்துவத்திற்கும் காப்பீடு வசதி அளிக்கப்பட்டுள்ளது என்று காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏ) தெரிவித்துள்ளது.

ஆயுஷ் எனப்படும் இந்தியமுறை மருத்துவ முறைகளான ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவமுறைகள் குறித்த ஒழுங்குமுறை விதிகள் அரசாங்க கெஜட்டில் வெளியிடப்பட்டு 18.02.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த ஒழுங்குமுறைகளின்படி அலோபதி மருத்துவ முறையல்லாத மருத்துவத்திற்கும் காப்பீடு நிறுவனங்கள், காப்பீட்டு வசதி அளிக்க வேண்டும். ஒரு நிபந்தனை என்னவெனில், இக்காப்பீட்டுக்கான மருத்துவம் அரசு மருத்துவமனைகளிலோ, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையங்களிலோ, உடல் நலத்துக்கான இந்திய தேசிய தர நிர்ணய நிறுவனத்தினால் தரச்சான்று வழங்கப்பட்ட வேறு ஏதேனும் ஒரு தகுதியான மையத்திலோ மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

காப்பீட்டு நிறுவனங்களான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி, ஸ்டார் ஹெல்த் அன்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி, எல் அன்ட் டி ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி போன்றவை ஆயுஷ் எனப்படும் இந்தியமுறை மருத்துவ முறைகளுக்கு மருத்துவக் காப்பீடு வசதி அளிக்கின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Insurance should now cover non-allopathic treatments: IRDA | அலோபதி அல்லாத மருத்துவத்திற்கும் இன்சூரன்ஸ் கவர்

Insurance Regulatory and Development Authority (IRDA) has informed that the insurance coverage to AYUSH treatments has been facilitated. Ayush treatments include Ayurveda/Homoeopathy treatments Regulations which are published in the official gazette and came into force with effect from 18.02.2013.
Story first published: Wednesday, May 8, 2013, 16:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X