வங்கி சாரா நிதி நிறுவனங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

வங்கி சாரா நிதி நிறுவனங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?
சென்னை: வங்கி சாரா நிதி நிறுவனங்களை(என்பிஎஃப்சி) பின் வருமாறு வகைப்படுத்தலாம்.

I. சொத்து நிதி நிறுவனம் (அசெட் பைனான்ஸ் கம்பெனி (ஏஎஃப்சி)): ஏஎஃப்சி என்பது ஒரு நிதி நிறுவனம் ஆகும். இது அசையா சொத்துகள் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் இயந்திரங்களுக்கு நிதி உதவி அளிப்பதை முக்கியமான நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இது வாகனங்கள், டிராக்டர்கள், லேத் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், எர்த் மூவர்ஸ் போன்ற தொழில்துறை இயந்திரங்கள் மீது நிதி உதவி அளிக்கிறது.

II. முதலீடு நிறுவனம் (இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி (ஐசி)): ஒரு கம்பெனி வணிக பத்திரங்களில் முதலீடு செய்வதை முதல் நோக்கமாக கொண்டு செயல்படுமானால் அது ஐசி என அழைக்கப்படும்.

III. கடன் நிறுவனம் (லோன் கம்பெனி (எல்சி)): ஏஎஃப்சியைப் போன்று உற்பத்தி மற்றும் அசையா சொத்துகளுக்கு நிதி உதவி செய்யாமல், கடன்கள் அல்லது முன்பணம் மூலம் பிறருக்கு நிதி வழங்கும் நிறுவனம் எல்சி என அழைக்கப்படும்.

IV. உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி (ஐஎஃப்சி): ஐஎஃப்சி ஒரு வங்கி சாராத நிதி நிறுவனம் ஆகும்.
a) இந்நிறுவனங்கள் தங்களின் சொத்து மதிப்பில் 75 சதவீத பணத்தை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கடனாக வழங்குகிறது.
b) இந்நிறுவனங்கள் குறைந்த பட்சமாக ரூ. 300 கோடி நிதியை நிர்வகிக்க வேண்டும்.
c) இந்நிறுவனங்களின் குறைந்தபட்ச கிரெட்டி ரேட்டிங் ஏ அல்லது அதற்கு இணையாக இருக்க வேண்டும்.
d) இந்நிறுவனங்களின் சிஆர்ஏஆர் 15 சதவீதமாக இருக்க வேண்டும்

V. முறையான முக்கிய முதலீட்டு நிறுவனம் (சிஸ்டமேட்டிகலி இம்பார்டன்ட் கோர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி (சிஐசி-என்டி-எஸ்ஐ)): சிஐசி-என்டி-எஸ்ஐ என்பது பின்வறும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பங்குகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யும் ஒரு நிதி நிறுவனம் ஆகும்.

a) இந்நிறுவனங்கள் தங்களின் சொத்து மதிப்பில் குறைந்த பட்சமாக 90 சதவீத பணத்தை பங்குகள், முன்னுரிமை பங்குகள், கடன் அல்லது குழு நிறுவனங்களில் கடன் முதலீடு ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கும்.
b) ஒரு குழு நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் மொத்த முதலீட்டில் (10 ஆண்டுகளுக்குள் பங்குகளாக மாற்றத்தக்க முதலீடுகளையும் சேர்த்து), இந்நிறுவனத்தின் பங்கானது, அதன் நிகர சொத்து மதிப்பில் 60 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
c) இந்நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளான பங்குகள், முன்னுரிமை பங்குகள், கடன் அல்லது குழு நிறுவனங்களில் கடன் முதலீடு, ஆகியவற்றை வியாபாரம் செய்வதில்லை. இவை, தங்கள் முதலீட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேற நினைக்கும் பொழுது தங்களின் முதலீடுகளை மொத்தமாக விற்பனை செய்துவிடும்.
d) இந்நிறுவனங்கள் 1934ல் இயற்றப்பட்ட மத்திய ரிசர்வ் வங்கி சட்டம், 45I(சி) மற்றும் 45I(f) இல் குறிப்பிடப்பட்ட நிதி நடவடிக்கைகளான வங்கி வைப்பு முதலீடு, பண சந்தை பத்திரங்கள், கடன் அல்லது குழு நிறுவனங்களில் கடன் முதலீடுகள், குழு நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாதங்கள் ஆகியவற்றை தவிர வேறு எந்த நிதி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை.
e) இந்நிறுவனங்கள் குறைந்த பட்சமாக ரூ. 100 கோடி நிதியை நிர்வகிக்க வேண்டும்.
f) இந்நிறுவனங்கள் பொது மக்களிடம் இருந்து நிதியை திரட்டிக்கொள்ளலாம்.

VI. உள்கட்டமைப்பு கடன் நிதி; வங்கி சாராத நிதி நிறுவனம். (இன்ப்ராஸ்ட்ரக்சர் டெப்ட் ஃபண்ட்; நான் பேங்கிங் பைனான்ஷியல் கம்பெனி (ஐடிஎஃப்-என்பிஎஃப்சி)): ஐடிஎஃப்-என்பிஎஃப்சி என்பது வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட ஒரு நிதி நிறுவனம் ஆகும். இந்நிறுவனங்கள் நீண்ட கால கடன்களை, உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்குகின்றன. ஐடிஎஃப்-என்பிஎஃப்சி நிறுவனங்கள் குறைந்தபட்சமாக 5 ஆண்டு முதிர்வு கொண்ட ரூபாய் அல்லது டாலரில் கடன் பத்திரங்கள் வெளியிட்டு தமக்கு தேவையான நிதி ஆதாரங்களை திரட்டிக்கொள்ளலாம். ஐஎஃப்சி நிறுவனங்கள் மட்டுமே ஐடிஎஃப்-என்பிஎஃப்சி நிறுவனங்களுக்கு உதவி செய்ய முடியும்.

VII. வங்கி சாரா நிதி நிறுவனம்- மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் (நான் பேங்கிங் பைனான்ஷியல் கம்பெனி - மைக்ரோ பைனான்ஸ் இன்ஸ்டிடியூஷன் (என்பிஎஃப்சி-எம்எஃப்ஐ)): என்பிஎஃப்சி-எம்எஃப்ஐ நிதி நிறுவனம், வைப்பு நிதி பெறாத வங்கி சாரா நிதி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவை கீழ்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

a) என்பிஎஃப்சி-எம்எஃப்ஐ நிதி நிறுவனம் ரூ 60,000க்கும் குறைவான வருமானம் உடைய கிராமப்புற மக்களுக்கும், ரூ. 1,20,000க்கும் குறைவான வருமானம் உடைய நகர்ப்புற மக்களுக்கும் மட்டுமே நிதி உதவி செய்ய வேண்டும்.
b) முதல் தவணையாக வழங்கப்படும் கடனின் அளவு ரூ 35,000க்கு மிகாமலும், பிற தவணைகள் ரூ 50,000க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
c) மொத்த கடன் தொகை ரூ 50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
d) ரூ 15,000க்கு அதிகமாக வழங்கப்பட்ட கடனுக்கான தவணை 24 மாதங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். பயனாளிகள் முன் கூட்டியே செலுத்தும் தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது.
e) ஈடு இல்லாமல் கடன் தொகையை நீட்டிக்க வேண்டும்.
f) வருமானத்தை ஈட்டுவதற்காக கொடுக்கப்பட்ட கடன்களின் மொத்த அளவு, என்பிஎஃப்சி-எம்எஃப்ஐ நிறுவனங்களால் கொடுக்கப்பட்ட கடன்களில் 75 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
g) கடன் கொடுக்கும் பொழுது பயனாளிகள் கடன் தொகையை வாரா வாரமோ, 2 வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதாமாதமோ திருப்பிக் கொடுக்கும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Read more about: bank, வங்கி
English summary

What are the different types of NBFCs? | வங்கி சாரா நிதி நிறுவனங்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

NBFCs can be categorised as Asset Finance Company(AFC), Investment Company(IC), Loan Company(LC), Infrastructure Finance Company (IFC) and Systemically Important Core Investment Company (CIC-ND-SI).
Story first published: Thursday, May 9, 2013, 17:52 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns