ஆன்லைனில் வருமானவரி செலுத்துவதில் உள்ள 7 நன்மைகள்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைனில் வருமானவரி செலுத்துவதில் உள்ள 7 நன்மைகள்
ஒவ்வொரு குடிமகனும் தனது நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, தான் ஈட்டும் வருமானத்திலிருந்து ஒரு சிறியத் தொகையை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும். அரசின் செலவுகளை எதிர் கொள்வதற்காகவே குடிமக்களிடம் வரி விதிக்கப்படுகிறது.

தற்போது வருமான வரியைச் செலுத்துவதற்கு வசதியாக குடிமக்களுக்கு இ-பைலிங்(e-filing) வசதியை அரசு ஏற்படு செய்திருக்கிறது. எனவே வங்கிகளுக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலமாக வருமானவரியைச் செலுத்த முடியும்.

இவ்வாறு இணையதளம் மூலமாக வருமானவரி செலுத்துவதில் உள்ள மிக முக்கியமான 7 நன்மைகள் உள்ளன.

1. ஆன்லைன் மூலமாக அதாவது நெட் பேங்கிங் மூலம் நீங்கள் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் வருமான வரியைச் செலுத்த முடியும்.

2. வங்கிக் கணக்கிலிருந்து உடனடியாக வரியைச் செலுத்த முடியும்.

3. இ-சலானில் நிரப்பும் குறிப்புகள் நேரடியாக வருமானவரித் துறைக்கேச் சென்றுவிடும். இடையில் வங்கிகள் உங்கள் குறிப்புகளில் மாற்றம் செய்யாது.

4. வரி செலுத்தியவுடன் வருமானவரித் துறை வழங்கும் ரசீதை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம், அல்லது கணினியில் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம்.

5. செலுத்திய பணத்திற்கு வங்கி ஒப்புதல் அளித்தவுடன், வரி செலுத்தியதற்கான ரசீது வங்கியிலிருந்து கிடைத்துவிடும்.

6. வருமானவரி செலுத்துவதற்காக செய்த பண பரிவர்த்தனைக்குரிய ஐடி உங்கள் வங்கி ஸ்டேட்மென்டில் குறிக்கப்பட்டிருக்கும்.

7. ஆன்லைன் மூலமாக செலுத்திய வருமானவரி, வருமானவரித் துறைக்குச் சென்றடைந்துவிட்டாதா என்பதை ஆன்லைன் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

அதற்காக வருமானவரித் துறை பின்வரும் இணையதள முகவரியைத் தந்திருக்கிறது. https://tin.tin.nsdl.com/oltas/index.html என்ற முகவரிக்குள் சென்று பின் CIN boxஐ கிளிக் செய்ய வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Seven advantages of paying taxes online

Tax is financial fee charged by the government on a product, income or activity of a person. The intent of taxation is to finance government expenditure and to provide facility for the common man.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X