மறைந்த நபரின் பெயரில் உள்ள பங்குகளை மற்றவரின் பெயருக்கு மாற்றுவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மறைந்த நபரின் பெயரில் உள்ள பங்குகளை மற்றவரின் பெயருக்கு மாற்றுவது எப்படி?
உயில் இருந்தால் இறந்த நபரின் பெயரில் இருக்கும் பங்குகளை அடுத்தவரின் பெயருக்கு மாற்றுவதில் எந்த கஷ்டமும் இருப்பதில்லை. ஆனால் உயில் இல்லாத பட்சத்தில் பங்குகளை அதிகாரபூர்வமான வாரிசுக்கு மாற்றுவதில் கொஞ்சம் சிரமம் உள்ளது. உரிமை கோருபவர் பங்கின் இணை உடைமையாளராகவோ அல்லது சட்டப்பூர்வ வாரிசாகவோ இருக்கலாம். அவர் ட்ரான்ஸ்மிஷன் ரெக்வஸ்ட் ஃபாரத்தை நிரப்பி டெபாசிட்டரி பார்ட்டிசபண்ட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் சேர்த்து தேவையான இதர ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்கள் என்னவென்று பார்க்கலாம்:

1. டீமாட் கணக்கிற்கு தனி உடைமையாளராக இருப்பவர் இறந்து விட்டால்; அந்த கணக்கிற்கு நாமினியும் இருக்கிறார் என்றால். நியமிக்கப்பட்ட நாமினி, கணக்கின் உடைமையாளரின் அசல் இறப்பு சான்றிதழை ஒப்படைக்க வேண்டும்.

 

2. தன்னுடைய டீமாட் கணக்கிற்கு தனி உடைமையாளராக இருப்பவர் இறந்து விட்டால்; அந்த கணக்கிற்கு நாமினி யாரும் இல்லையெனில்
கீழ்கூரிய ஆவணங்களை உரிமை கோருபவர் சமர்ப்பிக்க வேண்டும்:
a) சான்றளித்த இறப்பு சான்றிதழ்
b) கீழ்கூரிய ஆவணங்களில் ஏதாவது ஒன்று:
- சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்
- நிர்வாக கடிதம்
- புதுபித்த உயிலின் நகல்

3. ஒரு வேளை மேற்கூறிய எந்த ஒரு ஆவணத்தையும் உரிமை கோருபவரால் சமர்ப்பிக்க முடியாவிட்டால்; மேலும் டீமாட் கணக்கில் இருக்கும் பங்குகளின் சந்தை விலை, உரிமை கோருபவர் தன் பெயருக்கு மாற்ற கோரி விண்ணப்பித்த தேதியன்று 1 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருந்தால், கீழ் கூறிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- அனெக்ஷர் 'O'-வில் இருக்கும் ட்ரான்ஸ்மிஷன் ரெக்வஸ்ட் ஃபாரம்
- நோட்டரி ஒப்புதல் பெற்ற மறைந்த நபரின் (டீமாட் கணக்கின் உடைமையாளர்) இறப்பு சான்றிதழ்
- இந்த கணக்கு மாற்றத்தை மறுக்காமல் இருக்க இதர வாரிசுகளிடம் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மைச் சான்றிதழ் (அல்லது) நோட்டரி ஒப்புதல் பெற்ற குடும்ப தீர்வு ஆவணம்
- நீதித்துறைச் சாரா முத்திரை தாளில் எழுதப்பட்ட காப்புறுதிக் கடிதம்.
- நீதித்துறைச் சாரா முத்திரை தாளில் எழுதப்பட்ட உறுதிமொழி ஆவணம்.

சட்டப்பூர்வ வாரிசு அல்லது உரிமை கோருபவர் சமர்ப்பித்த ஆவணங்களை டெபாசிட்டரி பார்ட்டிசபண்ட் கவனமாக ஆய்வு செய்தப்பின் பங்குகளின் மாற்றம் நடைபெறும்.

(எஸ்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தாது: பிரதிப் சவுத்ரி)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to transfer shares of a deceased person?

Transfer of shares of a deceased person is not too difficult if there is a will, but, otherwise it can be a tricky affair to get shares transferred to the rightful legal heir.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X