ஐடி துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டம்: அஸ்ஸோசாம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி துறையின் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டம்: அஸ்ஸோசாம்
மும்பை: தொழில்துறையின் தலைமை அமைப்பான அஸ்ஸோசாம், பொருளாதார மந்தநிலை மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய போட்டி ஆகியவற்றோடு போராடிக் கொண்டிருக்கும் ஐடி துறையின் ஏற்றுமதி வளர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் அத்துறைக்கு ஊக்கமளிக்கும்படி அரசை நிர்பந்தித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான ஆனந்த் ஷர்மாவுடனான ஒரு கருத்துப் பரிமாற்றத்தின் போது அஸ்ஸோசாம், "2012-13 ஆண்டின் போது இந்தியாவின் ஐடி துறை சுமார் 4.2 சதவீத வளர்ச்சியைக் கண்ட அதே வேளையில், இத்துறையில் நமது போட்டியாளர்களாக விளங்கும் ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலா 69 சதவீதம் மற்றும் 27 சதவீதம் என்ற அளவில் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்தியாவின் இந்த ஆமை வேக வளர்ச்சிக்கு பொருளாதார மந்தநிலை காரணமாக சொல்லப்பட்டாலும், அயல்நாட்டுப் போட்டியாளர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலை பார்க்கும்பொழுது, ஐடி துறையின் ஏற்றுமதி வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் இத்துறைக்கு ஊக்கமளிக்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்." என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தொழில்துறை அமைப்பு, இந்தியாவுக்கு புலம் பெயர்ந்து வந்து கால் உன்றலாமா என்ற எண்ணத்தில் இருக்கும் ஐடி நிறுவனங்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய ஏற்றுமதி ஊக்கத்திட்டத்தை அரசு வழங்கலாம் என்றும் முன்மொழிந்துள்ளது. மேலும் மென்பொருள் நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டை விட சுமார் ஏழு சதவீதம் வரையிலான அதிகமான இறக்குமதிக்கான முழுமையான வர்த்தக தொகையைப் பெறுவதற்கு அனுமதி வழங்கலாம் என்றும், இத்தொகையை சுங்க வரி செலுத்துவதற்கு அவர்கள் உபயோகித்துக் கொள்ளவும், மேலும் இத்திட்டத்தை சுமார் ஐந்தாண்டு காலம் வரையில் நீட்டிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Assocham calls for incentivizing IT sector to raise exports

The apex industry body Assocham has urged the government to incentivize the country's IT sector to boost its exports growth as it continues to struggle with economic slowdown and rising global competition.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X