இந்தியா முழுவதும் தனது கிளைகளை பரப்ப திட்டம்!!: ஸ்ரீராம் சிட்டி யூனியன்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா முழுவதும் தனது கிளைகளை பரப்ப திட்டம்!!: ஸ்ரீராம் சிட்டி யூனியன்
மும்பை: சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீராம் குழுமம், சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்புடையது. இதன் ஒரு பகுதியான ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிட்டெட், இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் அதன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து தனது தடத்தை பதிக்கவும், கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் களம் புகுந்து கலக்கவும் திட்டமிட்டு வருகிறது.

"அனைத்து வணிக மையங்களிலும் அனைத்து ரக புராடக்ட்களையும் அறிமுகப்படுத்தவும், ஸ்ரீராம் வர்த்தக சாம்ராஜ்யத்துக்கும் அதன் நீண்ட-கால நுகர்வோருக்கும் இடையிலான உறவை பலப்படுத்தி அதனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் எங்கள் நிலைமை மற்றும் செயல்பாடுகளை ஒன்றிணைக்க பாடுபடும் அதே வேளையில் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளைப் போன்ற புதிய சந்தைகளில் நுழையவும் தீர்மானித்துள்ளோம்." என்று ஸ்ரீராம் சிட்டியின் நிர்வாக இயக்குநரான ஜி.எஸ். சுந்தரராஜன் அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

நான்-கார்ப்பொரேட் நிதித்துறை மீது கவனம் செலுத்தி வரும் மிகப்பெரிய என்பிஎஃப்சி நிறுவனமான ஸ்ரீராம் சிட்டி, தற்போது குஜராத் மற்றும் அதன் தொழில்முனைவோரின் மீது தீவிர கவனம் செலுத்தவும், இத்தகைய நகரங்களின் மீது இரண்டு அடுக்கு கவனம் செலுத்தவும் ஆர்வம் காட்டி வருகிறது.

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Shriram City Union Fin to expand small enterprise lending ops

Chennai-based Shriram Group, is planning to expand its footprint in western and southern India and to make a foray into eastern and northern regions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X