கார் இன்ஸ்சூரன்ஸ் கிளைம் செய்வதில் பிரச்சனையா?? அப்ப இதை படிங்க பாஸ்!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோட்டார் வாகனச் சட்டப்படி கார்கள் கண்டிப்பாக காப்பீடு செய்யப்பட வேண்டும். ஆனால், விபத்து ஏற்பட்ட பின்னரே அதன் காப்பீட்டின் நன்மையும் முக்கியதுவமும் நமக்கு தெரியவருகிறது. காருக்கு சேதம் ஏற்படும் போது அதற்கான செலவுகளை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இந்த காப்பீட்டின் கிளைம் நாம் நினைப்பது போல் பிரச்சனையில்லாமல் ஈஸியாக கிடைப்பதில்லை. இவ்வாறான இடர்பாடுகளுக்கான காரணங்களாக கெட்ட நேரம் என்றோ அல்லது காப்பீட்டு நிறுவனத்தைக் குறை கூறுகிறோம். இருப்பினும் இந்த இடர்பாடுகள் அதிகளவில் கார் உரிமையாளர்களையே சாரும்.

 

இதனால் காப்பீட்டின் தொகையை முழுமையாக பெறவும், அதில் இருக்கும் சிக்கல்களில் இருந்து விலகவும் இந்த கட்டுரை கண்டிப்பாக உங்களுக்கு உதவும். மேலும் இதில் வாகன காப்பீட்டில் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய சில விஷயங்கள் பற்றிவும் குறிப்பிட்டுள்ளோம்.

போதுமான கவரேஜ் இல்லாமை!!

போதுமான கவரேஜ் இல்லாமை!!

நாம் எப்போதுமே கார் காப்பீட்டின் நோக்கத்தை முழுமையாக புரிந்துகொள்வதில்லை. உங்களிடம் மூன்றாம் நபர் காப்பீடு இருந்தால் மட்டுமே, கார் சேதத்துக்கான செலவை காப்பீட்டு நிறுவனம் செலுத்தும். ஆகவே ஒரு காப்பீடு செய்யப்படாத காருக்கு, முன்புறகண்ணாடி மாற்றப்பட வேண்டும் என்றால், தயவு செய்து காப்பீட்டு கிளைம் செய்ய முயற்சிக்காதீர்கள். காப்பீட்டு கவரேஜை அதிகப்படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொண்டால், இடர்களைக் குறைக்க முடியும்.

மது போதையில் வாகனம் ஓட்டுதல்..

மது போதையில் வாகனம் ஓட்டுதல்..

ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு கார் ஓடுவதால் ஏற்படக்கூடிய விபத்துகளை காப்பீட்டு நிறுவனங்கள் விரும்புவதில்லை. உங்கள் காப்பீட்டு கிளைம் நிராகரிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால், மது அருந்தாதீர்கள் அல்லது ஒருவேளை மது அருந்தினால் ஒரு கால் டாக்ஸி மூலமாக வீடு போய் சேருங்கள்.

விலக்கு விதி பிரிவு
 

விலக்கு விதி பிரிவு

விலக்கு விதிகளை நன்றாக கவனிக்க வேண்டும். உதாரணமாக, ஒரு தனிநபர் உரிமம் உள்ள ஒரு காரை வணிக பயணத்துக்காக பயன்படுத்தும் போது விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு கிளைம் அனுமதிக்கப்பட மாட்டாது. நீங்கள் கிளைம் விண்ணப்பம் தாக்கல் செய்தால் கூட, அது நிராகரிகப்படும்.

கார் உருமாற்றம் செய்யப்படுதல்.

கார் உருமாற்றம் செய்யப்படுதல்.

மகிழ்ச்சிகரமாக உங்கள் காரை மாடிஃபிகேஷன் செய்யலாம், ஆனால் உங்கள் காப்பீடு முடக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். காரில் மாற்றங்கள் செய்யப்படும் போது, அதன் மதிப்பு அதிகரிக்கிறது மற்றும் மற்றவர்களால் கவரப்படுவதால், திருட்டுப் போகும் வாய்ப்பும் கூடுகிறது. இந்த மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர் உங்கள் காருக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது திருட்டு போனால், காப்பீட்டு நிறுவனம் உங்கள் கிளைம் விண்ணப்பத்தை மறுக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

ஓட்டுநரின் உரிமம் பிரச்சனைகள்

ஓட்டுநரின் உரிமம் பிரச்சனைகள்

சிறந்த ஓட்டுநர்களுக்கு குறைவான விகிததில் காப்பீடு கிடைக்கலாம், கொள்முதல் நிலைக்கு அப்பால் அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. ஆனால், உங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிருந்தால் அல்லது உங்கள் உரிமம் சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்தால், காப்பீடு கிளைம் பிரச்சனைகள் உருவாகும்.

அங்காரம் பெறாத ஓட்டுநர்

அங்காரம் பெறாத ஓட்டுநர்

அங்ககாரம் பெறாத ஓட்டுநர்களை அனுமதிக்காதீர்கள். சிறந்த ஓட்டுநர்கள் கூட, அவர்களை அறியாமலே விபத்து ஏற்படும் நிலையில் இவ்வாறு அங்கிகாரம் பெறாத ஓட்டுநரால் கார் ஓட்டிசெல்லப்படும் போது விபத்து நேரிட்டால், உங்கள் காப்பீட்டு கிளைம் நிராகரிக்கப்படும்.

விபத்து குறித்து தகவல் சொல்ல தவறுதல்

விபத்து குறித்து தகவல் சொல்ல தவறுதல்

உங்கள் கார் திருட்டுப் போனால் அல்லது விபத்துக்குள்ளானால், தாமதிக்காமல், 24 மணி நேரத்துக்குள் போலீஸில் தகவல் தெரிவித்தால், காப்பீட்டு சிக்கல்களை தவிர்க்க முடியும்.

பார்க்கிங் இடமாற்றம்

பார்க்கிங் இடமாற்றம்

உங்கள் கார் பார்க்கிங் செய்யப்படும் இடம் அல்லது முகவரி மாற்றப்பட்டால், இது பற்றி காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் சொல்வதில் அலட்சியமாக இருகாதீர்கள். திருட்டு அல்லது விபத்து குறித்து பாதுகாப்பாக இருப்பதற்கு, பார்க்கிங் இடமாற்றம் பற்றி காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் சொல்ல வேண்டியது அவசியம்.

காப்பீடு காலவதியாகிருத்தல்

காப்பீடு காலவதியாகிருத்தல்

உங்கள் காப்பீடு காலவதியாவதற்கு முன்னரே, சரியான நேரத்தில் ப்ரீமியம் செலுத்தி புதுப்பித்துக் கொள்வதால், காப்பீட்டு கிளைம் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

காப்பீடு விதிமுறைகள் மிக முக்கியம்

காப்பீடு விதிமுறைகள் மிக முக்கியம்

காப்பீட்டு கிளைம் பெறுவதிலுள்ள பல காரணிகளில் சில காரணிகளே மேலே கொடுக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பொறுப்புடன் உங்கள் காரை ஓட்டிச்செல்லுங்கள், காப்பீடு விதிமுறைகளை நன்கு தெரிந்து கொண்டு, காப்பீட்டில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பதை காப்பீட்டு நிறுவனத்திடம் கேட்டறிந்து அதன்படி செய்வதால் பிரச்சனைகளை குறைக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How car owners can reduce insurance claim hassles?

The advantage of having insured your car shows up after an accident. Then, the costs of the dents on the door and the cracks on the windshield-expensive propositions that they are-can be passed on to the insurer.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X