அதிக லாபம் தரும் பன்னாட்டு பரஸ்பர நிதிகளைப் திட்டங்கள்!!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை:நமது உள்நாட்டு முதலீட்டு சந்தைகளின் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, உங்களது முதலீட்டின் ஒரு பகுதியை பன்னாட்டு நிதிகளில் முதலீடு செய்வது சரியான யோசனை என்று தோன்றுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு முதலீட்டு நிதி நிறுவனங்கள் இது போன்ற பன்னாட்டு நிதிகளுக்கான முதலீட்டினை பெற்றுக்கொண்டு அவற்றை பன்னாட்டு சந்தைகளில் முதலீடு செய்கின்றன.

 

முதலீட்டாளர்களுக்கு இது ஒரு புதிய துறை என்றாலும், இது போன்ற பன்னாட்டு நுழைவு நிதிகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் 2008 ஆம் ஆண்டில் 6 ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை 2013ல் 23 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும், இந்திய பரஸ்பர நிதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தைகள் திருப்திகரமாக செயல் படாத நிலையில் பல்வேறு நாடுகளுக்கும் அவற்றின் செலாவனிகளுக்கும் இடையே சந்தைகளில் ஏற்படும் ஆபத்துக்களை, பரவலாக்குதல் (diversify) மூலம் குறைத்து ஒரு அடித்தளைத்தை ஏற்படுத்தும் இப்பன்னாட்டு நிதிகள் பொதுவாக இருவகைப்படும்:

1. பூகோள அமைப்பை சார்ந்த நிதிகள்
2. வகைபடுத்தப்பட்ட உலகளாவிய நுழைவு நிதிகள்

அதிக லாபம் தரும் பன்னாட்டு பரஸ்பர நிதிகளைப் திட்டங்கள்!!!..

உலகளாவிய நுழைவு நிதிகளில் செய்யப்படும் முதலீடுகள் நேரடியாக பன்னாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். எனினும், நிதிகளின் நிதி (Fund of funds) எனப்படும் வேறு சில திட்டங்கள், முதலீடுகளை தங்கள் தலைமை நிதியில் முதலீடு செய்கின்றன. அத்தலைமை நிதி நிறுவனங்கள் முதலீடுகளை பத்திரங்களில் செய்வதா அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் செய்வதா என்பதை தீர்மானிக்கின்றன.

பூகோள அமைப்பை சார்ந்த உலகளாவிய நிதி அமைப்புகள், அமெரிக்கா, பிரேசில் அல்லது சீனா போன்ற குறிப்பிட்ட சந்தைகளிலோ அல்லது தென்கிழக்கு, ஆசிய அல்லது வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் முதலீடுகள் செய்கின்றன. உதாரணமாக ஹெச்எஸ்பிசி வளரும் சந்தை நிதி, உலக பொருளாதார சந்தைகளில் வளர்ந்துவரும் சந்தையாக தெரிவுபெற்ற ஒன்றில் முதலீடு செய்கிறது. வேறு சில நிதிகள் உலகம் முழுவதிலும் அல்லது பல்வேறு வளர்ந்துவரும் சந்தைகளிலும் முதலீடு செய்கின்றன.

 

வகைபடுத்தப்பட்ட உலகளாவிய நுழைவு நிதிகள் சில குறிப்பிட்ட வகைப்படுத்தப்பட்ட அல்லது துறைகளை சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. உதாரணமாக தங்கச் சுரங்கத் தொழில், விவசாயம் சார்ந்த தொழில், நிலம் மற்றும் கட்டுமானத் துறை அல்லது மின்சார உற்பத்தித் துறை போன்றவை இதில் அடங்கும். இப்பிரிவில், தங்கச் சுரங்கத்தொழில் முதன் முதலாக நிதி அமைப்புகளால் அறிமுகப்படுத்தப்பட்டு, இந்தியாவில் செய்யப்படும், செலாவணி மாற்று வர்த்தக நிதிகளுக்கு ஒரு நல்ல மாற்றாக அறியப்பட்டுள்ளது.

எனினும் இந்நிதிகள் உள்நாட்டில் நன்றாக முதலீடுகளை பரவலாக்கியுள்ள, தற்போது தனிப்பட்ட பன்னாட்டு முதலீட்டுத் திட்டத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு நன்கு பொருந்தும். மேலும், இதில் முதலிட விரும்புவோர் வெளிநாட்டு சந்தை நிலைகளையும் குறிப்பிட்ட துறைகளையும் பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருத்தல் அவசியம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Different type of global or international funds

In view of the domestic market scenario, it makes sense to commit some proportion of your investible surplus towards global funds. Such mutual fund schemes are floated by different fund houses in India who after collecting funds to invest in global markets.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X