கிரேடிட் ஸ்கோர் பற்றிய 5 தவறான எண்ணங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும் என்பவை சார்லஸ் டார்வினின் வார்த்தைகள். இதே விஷயம் வங்கிகளின் பார்வையிலும், நிதி நிறுவனங்களின் பார்வையிலும் - 'தகுதியுள்ளது கடன் பெறும்' என்று மாற்றம் பெறும். ஏனெனில், முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் அதிகமான முன்னெச்சரிக்கைகளுடன் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செயல்படத் துவங்கியுள்ளன.

இந்த நிறுவனங்களிடம் கடன் பெற ஒருவர் விண்ணப்பம் அளிக்கும் போது, அவர் கடன் பெற தகுதியானவரா என்று அவர்கள் எடை போட பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த வழிமுறைகளின் மூலம் அவர்களின் படிப்பு, வயது, செய்து வரும் தொழில், வருமானம், ஏற்கனவே உள்ள கடன் என பல்வேறு தகவல்களை பெறுகிறார்கள். இவ்வாறு மதிப்பிடும் பொருட்டாக அவர்கள் எவ்வளவு செலவு செய்ய முடியும், இதர செலவுகள் போக கடன்களை செலுத்த எவ்வளவு ஒதுக்க முடியும் என்று உறுதியாக அளவிட முயற்சி செய்கின்றனர். இந்த முயற்சிகளை கிரேடிட் புள்ளிகள் (Credit score) வழங்குவதன் மூலம் பெருமளவில் செய்து வருகின்றனர். அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

இப்பொழுதெல்லாம் கடன் வாங்க வேண்டும் என்றால், கடன் பெறுவதற்கான புள்ளிகள் மிகவும் அதிக அளவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமான விதியாக உள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கேபிள் நிறுவனங்கள் மற்றும் பயன்பாட்டு நிறுவனங்கள் கூட உங்களால் கட்டக்கூடிய அளவுகளை அல்லது முதலீட்டு அளவுகளை மதிப்பிட்டு உங்களுடைய கிரெடிட் புள்ளிகளை நிர்ணயிக்கின்றன. ஆனால், வாழ்க்கையின் பல விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொண்டதைப் போலவே, இந்த கிரெடிட் ஸ்கோர்களையும் நாம் அடிக்கடி தவறாகவே புரிந்து கொள்கிறோம். இந்த கடன் அட்டை புள்ளிகள் பற்றி இருக்கும் சில புதிர்கள் உங்களை மிகவும் பாதிக்கச் செய்கின்றன.

இது போன்ற கிரெடிட் கார்டு ஸ்கோர் மற்றும் கிரெடிட் அறிக்கைகள் தொடர்பான 7 தவறான எண்ணங்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

கிரெடிட் கார்டு அறிக்கைகளை பரிசோனை..

கிரெடிட் கார்டு அறிக்கைகளை பரிசோனை..

உங்களுடைய தனிநபர் கடன் அறிக்கைகளை பரிசோதிப்பதில் தவறில்லை. உங்களுக்கு சொந்தமான கிரெடிட் அறிக்கைகளை சோதிப்பது 'சாப்ட் புல்', அல்லது 'சாப்ட் இன்கொய்ரி' (soft inquiry," ) என்று அழைக்கப்படும். இப்படி செய்வதால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஒவ்வொருவரும் அவர்களுடைய கிரெடிட் அட்டைகளை, ஆண்டுக்கு ஒரு முறையாவது சோதித்து பார்ப்பது அவசியம் என்பது தான் உண்மை.

ஹார்ட் இன்கொயரி

ஹார்ட் இன்கொயரி

அதே போல், கடன் கொடுப்பவர்களோ அல்லது வேறு சிலரோ உங்களுடைய கிரெடிட் அறிக்கைகளை பரிசோதிப்பது 'ஹார்ட் இன்கொயரி' (hard enquiry) என்று அழைக்கப்படும் மற்றும் அதன் மூலம் உங்களுடைய கிரெடிட் புள்ளிகள் பாதிக்கப்படும்.

வேலை தருபவர்கள் கிரெடிட் பற்றி சோதிக்கக் கூடாது

வேலை தருபவர்கள் கிரெடிட் பற்றி சோதிக்கக் கூடாது

இந்த கூற்று உண்மையில் தவறானது, வேலை கொடுப்பவர் தன்னுடைய விண்ணப்பதாரரை வேலைக்கு சேர்க்கும் முன்னர் சட்டப்படியாகவே அவருடைய கிரெடிட் அறிக்கையை பரிசோதிக்கும் உரிமையை பெற்றுள்ளார். ஆனால், வேலை கொடுப்பவர் இவ்வாறு பரிசோதிப்பதற்கு விண்ணப்பதாரரின் அனுமதியை பெற வேண்டும். நிதி, அரசுப் பணி மற்றும் வங்கி நிறுவனங்கள் போன்றவை எவரொருவரை வேலைக்கு சேர்க்கும் முன்னரும், அவர்களுடைய கிரெடிட் அறிக்கைகளை அல்லது இரகசிய தகவல்களை சோதிப்பார்கள். ஆனால், அவர்கள் நிதி தொடர்பான பழக்கங்கள் அல்லது விண்ணப்பதாரரின் தவறுகளைப் பற்றி பரிசோதிக்கவே அறிவுறுத்தப்படுகிறார்கள், கடன் அறிக்கையை அல்ல.

பணமாக செலவு செய்தால் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்குமா??

பணமாக செலவு செய்தால் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்குமா??

ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டுகளுக்குப் பதிலாக பணத்தை நேரடியாக செலவிடுவது உங்களுக்கு உதவப் போவதில்லை. மாறாக கிரெடிட் கணக்குகள் உங்களுடைய கணக்கையும் உருவாக்குவதில் மிகச்சிறந்த பங்கை அளித்து வருகின்றன. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இரண்டுமே சாதாரணமாக எலக்ட்ரானிக் பயன்பாடுகளாக இருந்தாலும், சிறந்த வழிகளாக இருப்பதில்லை.

நீங்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை சிறந்த அளவிற்கு உயர்த்திக் கொண்டு வீட்டுக் கடன் அல்லது கல்வி கடன் பெற விரும்பனால், உங்களால் கடன்களை பொறுப்பான முறையில் நிர்வகித்து முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நீங்கள் வாங்கும் கடன் மற்றும் வாடகைகளை சரியான நேரத்தில் கொடுப்பதன் மூலமும் கிரெடிட் ஸ்கோரை உயர்த்திக் கொள்ளவும், புதிய சேவைகளைப் பெறவும் முடியும்.

 

வங்கி கணக்குகளை ரத்து செய்வது சரியா..

வங்கி கணக்குகளை ரத்து செய்வது சரியா..

நீங்கள் பெரியளவில் வியாபாரம் செய்ய விரும்பினாலோ அல்லது கடன் விண்ணப்பம் போட்டிருந்தாலோ, உதாரணத்திற்கு அடமானம் செய்ய திட்டமிட்டிருந்தாலோ உங்களுடைய கிரெடிட் கார்டு ஸ்கோரை உயர்த்தும் பொருட்டாக, உங்களுடைய கிரெடிட் கார்டு கணக்குகளில் சிலவற்றை முடிக்க சொல்லியிருப்பார்கள். ஆனால், உங்களுடைய பழைய கிரெடிட் கார்டு கணக்கை முடிக்கும் போது உங்களுடைய கிரெடிட் மதிப்பு குறையும் என்பது தான் உண்மை.

கல்வி பின்னணி கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா??

கல்வி பின்னணி கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா??

கல்வித் தகுதி அல்லது அதன் பின்னணி ஆகியவை உங்களுடைய கிரெடிட் அறிக்கையின் ஒரு பகுதியாக என்றும் இருப்பதில்லை. அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிப்பதில்லை. உங்களுடைய கடன் தொடர்பான தகவல்கள் தான் கடன் அறிக்கைகளில் இருக்கும். எனவே, கடன்கள் பற்றிய தகவல்கள், கிரெடிட் கார்டுகள் செலவுகளை திரும்ப செலுத்திய தகவல்களுடன், மோசடிகள், வரி உரிமைகள் மற்றும் குடிமை தீர்ப்புகள் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

வருமானம், முதலீடுகள், பங்குகள், சேமிப்பு கணக்கு..

வருமானம், முதலீடுகள், பங்குகள், சேமிப்பு கணக்கு..

இது மட்டுமல்லாமல் வருமானம், முதலீடுகள் அல்லது பங்குகள் அல்லது பத்திரங்கள் போன்ற சொத்துக்கள் போன்றவையும் கடன் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டிருக்கும். மேலும், அதில் சேமிப்பு கணக்குகள் பற்றிய தகவல்களோ, கணக்குகளை பரிசோதிப்பதுவோ, வைப்புகள் பற்றி சான்றிதழ்களோ அல்லது கடன்-அல்லாத வங்கி தொடர்புகள் பற்றியோ எந்த தவகல்களும் இருப்பதில்லை. சம கடன் வாய்ப்பு சட்டத்தின் படி, இனம், பாலினம், திருமண நிலை, பிறந்த நாடு அல்லது மதம் போன்ற தகவல்களும் கூட கிரெடிட் அறிக்கைகளில் சேர்க்கப்படுவதில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Biggest Misconceptions About Credit Score Debunked

Nowadays to apply for a loan or credits it has become mandatory that you should have a high credit score. But often it is seen that like many other important things in life, even the credit scores are often misunderstood. There are many myths about the credit card scores.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X