நிதி நிலையை வலிமைபடுத்த இந்த கட்டுகதைகளை நம்பாதீர்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்த 21-ம் நூற்றாண்டில் பணம் இருந்தால் தான் எந்த விஷயமும் நடக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி பவர்ஃபுல்லாக இருக்கும் பணத்தைப் பற்றிச் சொல்லப்படும் சில கட்டுக்கதைகள் உள்ளது அதை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 

இத்தகைய கட்டுக்கதைகளை தினசரி வாழ்க்கையில் மக்கள் பின்பற்றி வருகின்றனர். 'ஒரு ரூபாயை சேமிப்பது, ஒரு ரூபாயை சம்பாதிப்பதற்குச் சமம்', 'வீடு என்பது மிகச்சிறந்த முதலீடு' மற்றும் 'பணம் மரத்தில் காய்ப்பதில்லை' என இவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த கட்டுக்கதைகள் தீங்கு செய்யாதவை என்றாலும், இவற்றாலும் கூடச் சில நேரங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்த முடியும். இவை பணத்தை சேமிப்பதிலும், முதலீடு செய்வதிலும் தொடங்கி பல பிரச்னைகளைத் தவறான கோணங்களில் நம்மை வழிநடத்துகிறது.

இது போன்ற கட்டுக்கதைகளை நம்பிக் கொண்டு தங்களுடைய பாக்கெட்டுகளை காரணமே இல்லாமல் காலி செய்பவர்கள் இன்றளவில் அதிகரித்து வருகிறார்கள். இது போன்று நம்மை அபாயத்தில் தள்ளக்கூடிய பணம் தொடர்பான கட்டுக்கதைகளைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

வரவு-செலவில் ஏன் வீண் ஆராய்ச்சி?

வரவு-செலவில் ஏன் வீண் ஆராய்ச்சி?

பெரும்பாலான இளைஞர்கள் வரவு-செலவு பற்றிய கணக்குகளில் தங்களுக்கென்று பொறுப்புகள் இருப்பதை மறந்து விட்டு இருக்கிறார்கள். இந்த எண்ணம் மிகவும் தவறானது. உங்களுடைய வரவு-செலவு விவகாரங்கள் எளிமையானவை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், உடனடியாக அவற்றை ஆராயத் தொடங்கிடுங்கள். காலம் செல்லச் செல்ல அது மிகவும் சிக்கலான விஷயமாக மாறிவிடும். உதாரணமாக உங்களுடைய வீட்டுக்கு கொடுக்க முன்பணம் தேவைப்படலாம்; திடீரென மருத்துவ செலவுகளோ அல்லது குழந்தை தொடர்பான செலவுகளோ வரலாம்.

விற்பனை கண்காட்சியில் சேமிப்பு!!

விற்பனை கண்காட்சியில் சேமிப்பு!!

விற்பனை கண்காட்சிகளில் பொருட்களை வாங்கினால் சேமிக்க முடியும் என்ற கட்டுக்கதையை பெரும்பாலனவர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் கடைபிடித்து வருவதைக் கண்டிருப்பீர்கள். உண்மையில், விற்பனை கண்காட்சிகளில் பொருட்களை வாங்குவதால் நீங்கள் எதையும் சேமிக்கப் போவதில்லை. எனவே, உங்களுக்குத் தேவையான பொருட்களை ரெகுலர் விலைகளிலேயே வாங்கத் தொடங்குங்கள். பொருள்களை தள்ளுபடி செய்து விற்பனை செய்வது ஒரு வியாபார தந்திரமேயொழிய வேறொன்றும் இல்லை. பெரும்பாலான கடைகள் இந்த தள்ளுபடி விலைகளில் தான் அதிகப்படியான லாபத்தை பார்க்கின்றனர்.

நீண்ட நாட்களுக்கு ஸ்டாக் வைப்பது நல்லது
 

நீண்ட நாட்களுக்கு ஸ்டாக் வைப்பது நல்லது

இந்த கட்டுக்கதையை நீங்கள் நம்புகிறீர்களா? அப்படி நம்பினால், எதிர்காலத்தில் பெரிய அளவில் இலாபம் தரக் கூடிய சொத்து என்று எதுவும் இல்லை என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்ள வேண்டும்; ஏனெனில் சந்தையின் நிலையை யாராலும் கணிக்க முடியாது. ஒரு முதலீட்டின் நீண்ட நாள் வளர்ச்சியானது, அது எவ்வளவு பிரபலமாக உள்ளது என்பதைப் பொறுத்து தான் அமையும்.

அன்பை வெளிப்படுத்த ஒரே வழி பரிசு தான்

அன்பை வெளிப்படுத்த ஒரே வழி பரிசு தான்

பெரும்பாலானவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு விலைமதிப்பு மிக்க பொருட்களை பரிசாக வழங்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உண்மையில் அந்த பரிசு அவர்களுக்குத் தேவையா என்பதை இவர்கள் உணர்ந்திருப்பதில்லை. பரிசுகளை வாங்கிக் கொள்ள யாராக இருந்தாலும் விரும்புவர்கள், ஆனால் ஒரு நிலைக்கு மேலே செல்லும் போது, அது அவர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசின் மீதுள்ள மரியாதை குறைந்து விடும்.

நீங்கள் சம்பாதித்தை செலவு செய்யுங்கள்

நீங்கள் சம்பாதித்தை செலவு செய்யுங்கள்

ஆம் செய்யலாம்! இது உங்கள் உழைப்பினால் கிடைத்த வருமானம், இதை செலவு செய்வதைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. எனினும், நீங்கள் திடீரென வேலையை இழந்து விடுவீர்கள் அல்லது காருக்கு பெரிய அளவில் செலவு வந்து விடும் என்று எப்பொழுதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? இது போன்ற காலங்களைக் கடந்து செல்ல பணம் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவை. வாழ்க்கையை யாராலும் உறுதியிட்டுக் கணித்திட முடியாது, உங்களுக்கு பணம் தேவைப்படும் சூழல் எப்பொழுது ஏற்படும் என்று யாராலும் சொல்ல முடியாது. எனவே, சிறிது சிறிதாக பணத்தை சேமிக்கத் தொடங்குங்கள்.

முதலீடுகளை பன்முகப்படுத்துவது அவசியம்

முதலீடுகளை பன்முகப்படுத்துவது அவசியம்

இந்த கட்டுக்கதையை நம்பாதவர்கள் யாரும் இல்லை. முதலீடுகளை பன்முகப்படுத்துவது பணம் தொடர்பான சேதங்களிலிருந்து நம்மைக் காக்கும் என்பது உண்மைதான். ஆனால், பன்முகப்படுத்துவதன் மூலம் பணம் தொடர்பான அபாயங்கள் குறைவதாகத் தோன்றினாலும், அது உண்மையாகவும் இருப்பதில்லை. உங்களுடைய துறைகளை சரியாக பன்முகப்படுத்த வேண்டுமென்றால், வேறு வேறு பங்கு துறைகளிடம் முதலீடு செய்யப் போதுமான அளவு பணம் உங்களிடம் இருக்க வேண்டும். பணம் மட்டுமல்லாமல், இந்த பன்முகப்படுத்தப்பட்ட பங்குகளைப் பராமரித்து வர போதுமான நேரமும், பொறுமையும் இருக்க வேண்டும். அதே நேரம், இவ்வாறு பன்முகப்படுத்துவதன் மூலம் உங்களுடைய வரியிலும் சிக்கல்கள் வரக்கூடும்.

வருமானத்தில் 10 சதவீதம் சேமிப்பு

வருமானத்தில் 10 சதவீதம் சேமிப்பு

இந்த கட்டுக்கதையில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. ஏனெனில், சேமிப்பின் பொருட்டாக நம்மால் யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது. நாம் அனைவரும் மனிதர்கள் மற்றும் நம்மிடையே வேறு வேறான பழக்கங்களும், குறிக்கோள்களும் இருக்கும். பணம் தொடர்பான விஷயங்களிலும் இந்த கருத்து பொருந்தும். உதாரணமாக, சில மனிதர்கள் எதையும் சேமிக்க மாட்டார்கள் அல்லது கடன் கூட வாங்குவர்கள், அதே நேரம் வேறு சிலர் தங்களுடைய வருமானத்தில் வரி போக மீதமாக 80 சதவீதம் வரையிலும் சேமித்து வருவார்கள். இதிலிருந்து யாராலும் குறிப்பிட்டு சொல்லும்படியாக 10 சதவீத வருமானத்தை சேமிக்க முடியாது என்பது தெளிவாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Most Dangerous Financial Myths

There are many money myths that people follow in their day-to-day life—“A penny saved is a penny earned”, “A home is a great investment” and “Money doesn't grow on trees.” Myths are harmless but sometimes they can turn dangerous.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X