கார் வாங்கப் போறீங்களா? இத படிச்சிட்டு போங்க பாஸ்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கார் என்பது இன்றைய காலகட்டத்தில் ஆடம்பரமான பகட்டுக்கு மட்டுமல்ல; நமக்கு மிகவும் அவசியமான வசதியும் தான். குடும்பத்தோடு டூர் போவதற்கும் சரி, மால்களுக்குப் போய் பெரிய அளவில் ஷாப்பிங் செய்வதற்கும் சரி, கார்தான் பெஸ்ட் சாய்ஸ்!

 

நாம் புதிய கார்களை வாங்குவதற்குப் பிளான் வைத்திருந்தாலும், அதே தரத்தில் மிக சீப்பான விலையில் தரமான பழைய கார்களும் கிடைக்கும் என்பதை மனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நம்முடைய பேங்க் பேலன்ஸ் பாதிக்காத அளவுக்கு சீப்பாகவும் நல்ல தரமாகவும் கார்கள் வாங்க வேண்டுமா? இதோ உங்களுக்கான 10 சூப்பர் டிப்ஸ்:

சரியான காரைத் தேர்ந்தெடுங்கள்

சரியான காரைத் தேர்ந்தெடுங்கள்

கார் வாங்குவதற்கு முன் எது உங்களுக்குப் பிடிக்கும், எந்த பிராண்ட் பெஸ்ட், எது நல்ல மைலேஜ் கொடுக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வாங்கிய பிறகு, 'ஏண்டா இதை வாங்கினோம்' என்று புலம்பக் கூடாது.

பழசா, புதுசா, எது பெஸ்ட்?

பழசா, புதுசா, எது பெஸ்ட்?

தற்போது புதுப்புது டெக்னாலஜியில் நிறைய கார்கள் வந்து இறங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. உங்கள் மனதுக்குப் பிடித்து, உங்களுடைய பேங்க் பேலன்ஸும் ஓ.கே.ன்னா புதுக் காரே வாங்கலாம். அல்லது, நல்ல தரத்தில் சீப்பான விலையில் பழைய கார்களையும் செலக்ட் செய்ய முடியும்.

உங்கள் பழைய காரின் மதிப்பு தெரியுமா?
 

உங்கள் பழைய காரின் மதிப்பு தெரியுமா?

நீங்கள் உங்கள் பழைய காரை விற்றுவிட்டு, புதிய கார் வாங்கப் போறீங்களா? சமயம் பார்த்து அதை நல்ல விலைக்கு விற்கப் பாருங்கள். அப்பத்தான் புதிய காருக்கான பட்ஜெட் இடிக்காது. பழைய கார்களை விற்க உங்களுக்கு நிறைய வெப்சைட்டுகளும் நாளிதழ்களும் உதவும்.

லீஸில் கார் வாங்குவது நல்லதா?

லீஸில் கார் வாங்குவது நல்லதா?

லோன் மூலம் கார் வாங்கத் திட்டமா? லோன் பேமண்ட்டுக்கே திண்டாட்டமா இருக்கா? அந்தத் திட்டத்தையே கிடப்பில் போடுங்கள். நீங்கள் லீஸில் கார் வாங்குவதுதான் பெஸ்ட். மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தைக் கட்டி விடலாம்.

பட்ஜெட்

பட்ஜெட்

கார் வாங்கும்போது உங்கள் பட்ஜெட் ரொம்ப ரொம்ப முக்கியம். வெப்சைட்டுகளில் நிறைய கம்பானிகளின் கொட்டேசன்கள் கிடைக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற காரைத் தேர்ந்தெடுங்கள்.

லோனா? வட்டி முக்கியம் அமைச்சரே!

லோனா? வட்டி முக்கியம் அமைச்சரே!

நீங்கள் லோன் மூலம் கார் வாங்குகிறீர்களா? எத்தனை வருடங்களுக்கு, எவ்வளவு வட்டி கொடுக்க வேண்டும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். ப்ரீ-அப்ரூவ்டு லோன் என்றால் நீங்கள் பேரம் பேசி வட்டியைக் குறைக்க வாய்ப்புள்ளது.

லீஸிலும் பேரம் பேசலாம்

லீஸிலும் பேரம் பேசலாம்

நீங்கள் லீஸுக்குக் கார் வாங்கினாலும், தாராளமாகப் பேரம் பேசலாம். இன்றைய போட்டி உலகில் நிச்சயம் இறங்கி வருவார்கள். சீப்பான லீஸுக்கே பேசி முடிக்கலாம்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்

ஒரே பிராண்ட் காருக்கு ஒரு ஊரில் 9 டீலர்கள் இருப்பார்கள். மவுசைத் தட்டினால் கொட்டேசன் கிடைக்கும். அனைவரிடமும் கொட்டேசன்களை வாங்குங்கள். நிச்சயம் விலை வேறுபாடு இருக்கும். அவற்றில் பெஸ்ட்தான் உங்களுக்கு!

தள்ளுபடி கிளப்புகள்

தள்ளுபடி கிளப்புகள்

கார் வாங்குபவர்களுக்கென்றே உதவ பல வெப்சைட்டுகள் நெட்டில் உலவுகின்றன. அவற்றில் சிலர் தள்ளுபடியும் செய்து கொடுப்பார்கள். உங்களுக்குப் பக்கத்தில் உள்ள சீப்பான பெஸ்ட் டீலரையே தேர்ந்தெடுங்கள்.

உங்கள் சேமிப்பு முக்கியம்

உங்கள் சேமிப்பு முக்கியம்

உங்கள் கார் டீலர் அதிக விலைக்குக் காரை உங்கள் தலையில் கட்டி விட முயற்சி செய்வார். அவருடைய தகாலக்கடி பேச்சுக்களில் மயங்கி விடாதீர்கள். கஷ்டப்பட்டு நீங்கள் சேமித்த பணத்தை அநியாயமாக அவரிடம் இழந்து விடாதீர்கள். குட்லக்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tips for buying a car

The top things you need to know to buy the car of your choice. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X