வீடு, ஆபீஸ் மட்டும் இல்ல... இதுவும் பெண்களுக்கு முக்கியம்...

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: அவனின்றி அணுவும் அசையாது என்பது போய், அவளின்றி அணுவும் அசையாது என்ற நிலை தான் இந்த 21-ம் நூற்றாண்டு கண்ட சாதனையாக உள்ளது. ஆணுக்கு பெண் சமமாக, அனைத்து துறைகளிலும் வளர்ந்து வரும் பெண்களுக்கான ஒரு கட்டுரை இது.

 

எதிர்காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் என்று வரும் போது ஆண்களும், பெண்களும் ஒரே விஷயங்களைக் கருத்தில் கொள்வதில்லை. பொதுவாகவே ஆண்களை விடக் குறைவான காலமே வேலை செய்யும் பெண்கள், குறைவாகவே வருமானமும் பெறுகிறார்கள். இதன் காரணமாக அவர்களால் பணத்தை முறையாக மேலாண்மை செய்யும் திறனை முழுமையாக கற்றறிய முடிவதில்லை.

எனவே தான் பெண்கள் பணத்தைப் பற்றியும், அதை செலவிடுவதைப் பற்றியும் மிகுந்த கவனம் எடுக்க வேண்டியுள்ளது. இந்த கட்டுரையில் ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய பண மேலாண்மை பற்றிய 10 தகவல்களை கொடுத்துள்ளோம்.

காது கொடுத்து கேளுங்கள்

காது கொடுத்து கேளுங்கள்

பணம் நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான மற்றும் முதன்மையான விஷயமாகும். நீங்கள் இதுவரையிலும் பணத்தை சேமிக்கவில்லையெனில், இப்பொழுது அதற்கான நேரம் வந்து விட்டது. இப்பொழுது கையிலிருக்கும் பணத்தை எப்படிப் பெருக்குவது என்று பார்ப்போம். உங்களுடைய தேவைகளை அறியச் செய்யவும் மற்றும் பணத்தை பெருக்குவதற்கான சரியான அறிவுரைகளை வழங்கவும் கூடிய ஒரு நிதி ஆலோசகரின் உதவியைப் பெற்றிடுங்கள்.

இருவரும் சமம்!!

இருவரும் சமம்!!

21-ம் நூற்றாண்டு பெண்களெல்லாம் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார வைத்த நூற்றாண்டாகும். வீட்டைக் கவனித்துக் கொள்ளும் அதே வேளையில், தங்களுடைய தொழிலிலும் பெண்களால் சாதிக்க முடிந்தது. வீட்டை மட்டுமே நிர்வகிக்க வேண்டும், கணவர் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற பழமையான எண்ணங்களுடன் வாழும் பெண்கள் அந்த எண்ணங்களிலிருந்து விடுபட வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களை கற்றுக் கொண்டு தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் முக்கியத்துவத்தை பெண்கள் உணர வேண்டும்.

தேவையான பொழுது சிறிய கடன்..
 

தேவையான பொழுது சிறிய கடன்..

உங்களுடைய நிதி அறிக்கைகளை அதள பாதாளத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கிரெடிட் கார்டு கடன்களோ அல்லது வேறு ஏதாவது கடன்களோ அழுத்தும் போது அதற்காக பயப்படாதீர்கள். நம்பிக்கையானவர்களிடம் தயங்காமல் ஆலோசனை கேட்கவும். முறையான நிதி திட்டத்தை வகுத்து, அந்த கடன்களை விரைவில் உதறித் தள்ளுங்கள்.

சில அறிவுரைகளை தவிர்க்கவும்

சில அறிவுரைகளை தவிர்க்கவும்

உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் வாழ விரும்பினால், பணத்தை என்ன செய்வது என்று நீங்களே முடிவெடுங்கள். தேவையில்லாமல் அனைவரின் ஆலோசனைகளைப் பெற்று, உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் வழி நடத்திச் செல்ல அனுமதிக்க வேண்டாம் - அதுவும் உங்களுடைய முதலீட்டை எங்கு முதலீடு செய்யலாம் மற்றும் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை நீங்கள் மட்டுமே முடிவு செய்தல் நலம்.

பண மேலாண்மை

பண மேலாண்மை

பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவிற்கு அதனை மேலாண்மை செய்வதும் முக்கியமாகும். வாழ்க்கையில் பல்வேறு காரியங்களுக்காக, பல்வேறு நிலைகளிலும் தேவைப்படும் விஷயமாக பணம் உள்ளது. அதிலும் வரவு-செலவை பட்ஜெட் போடுவது நம்மை பயறுத்துவதும் மற்றும் கடினமான பணியாகும். மிகவும் சரியாக திட்டமிடப்பட்ட நித தயாரிப்புகளும் மற்றும் தனியான நிதியியல் கருவிகளையும் பயன்படுத்தி இந்த பணிகளை சிறப்பாக செய்திட முடியும்.

தயக்கம் எதற்கு???

தயக்கம் எதற்கு???

வேலையில் நீங்கள் மிகத்திறமையான பணியை செய்து கொண்டிருப்பதாக நினைத்தால், உங்களுடைய அலுவலகத்தில் ஊதியத்தை உயர்த்திக் கேட்க தயங்க வேண்டாம். தங்களுடைய ஊதியத்தை உயர்த்திக் கேட்பதைப் பொறுத்த வரையில் பல பெண்களும் அதற்கு தயக்கம் காட்டுவார்கள். "இப்பொதைய சந்தை நிலவரம் சரியில்லை" மற்றும் "இது சரியான நேரமல்ல" என்று தாங்களே பதில் சொல்லிக் கொண்டு அமைதியாகி விடுவார்கள்.

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும்

தினசரி வீட்டு வேலைகளிலும், அலுவலகப் பணிகளிலும் மூழ்கியுள்ள பெண்கள், தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை உணரக்கூட மாட்டார்கள். எனவே உங்களுக்காக சில மணி நேரங்களை முதலீடு செய்யுங்கள் ஸ்பா-விற்கோ, ஷாப்பிங்கோ அல்லது நீண்ட விடுமுறை நாட்களுக்கோ சென்று வாருங்கள். உங்களுக்காக பணத்தை செலவிடுவதில் குற்ற உணர்வு வேண்டாம்.

தவறுகளுக்காக வருந்த வேண்டாம்

தவறுகளுக்காக வருந்த வேண்டாம்

நீங்கள் பணத்தை மேலாண்மை செய்யத் துவங்கும் வேளைகளில் சில விஷயங்களை சரியாகவும், வேறு சில விஷயங்களைத் தவறாகவும் செய்யும் வாய்ப்புகள் உண்டு. ஒவ்வொருவரும் தங்களுடைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, அவற்றையே வெற்றியின் திறவுகோலாக உணருகிறார்கள். இந்த பாஸிட்டிவ் எண்ணத்தை மனதில் கொண்டு, தவறுக்காக வருந்துவதை நிறுத்தி விடுங்கள். உறுதியாக நின்று, உங்களுடைய பிரச்னைகளை நேருக்கு நேராக சந்தியுங்கள்.

பெண்கள் குழு

பெண்கள் குழு

தனக்கான எந்தவொரு விஷயத்தையும் செய்து தரக்கூடிய நெருக்கமான பெண் நண்பிகளை ஒவ்வொரு பெண்ணும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் தான் உங்களுக்கு நெருக்கமான நண்பர்களாக இருப்பார்கள். நிதி நிர்வாகம் தொடர்பான வெற்றிகள் மற்றும் சவால்களை நீங்கள் இவர்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய ஆதரவையும் மற்றும் வழிகாட்டுதலையும் பெற முடியும்.

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

முதலாவது மற்றும் முதன்மையான விஷயமாக இருக்க வேண்டியது பெண்களை தங்கள் மேல் நம்பிக்கை வைத்தால் சமுதாயத்தில் புரட்சியை கொண்டு வர முடியும் என்பதே ஆகும். உலகிற்கு பெரும் பங்குகளை தரக்கூடிய மிகவும் உயர்ந்த திறன் கொண்ட பல பெண்கள் இன்றைய நாட்களில் உள்ளார்கள். ஒருவேளை நீங்கள் தோல்விகளை சந்தித்தால், அவற்றை படிக்கட்டுகளாக நினைத்துக் கொண்டு, உங்களுடைய குறிக்கோள்களை அடைய தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Managing Your Money: 10 Tips Every Woman Must Know

Men and women may not be on equal terms, when it comes to investing for the future. Generally, women work fewer years and earn lesser than men.. Mastering money is a challenge for a number of reasons.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X