இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவில் முதலீடு செய்ய பல திட்டங்கள் இருக்கும் பொழுது நாம் அதிகளவில் தேர்ந்தெடுப்பது அதிகம் லாபம் தரும் திட்டங்கள் மட்டுமே, இத்தேர்வில் பாதுகாப்பு என்பது இரண்டாம் இடத்திலேயே உள்ளது. லாபம் குறைவாக இருந்தாலும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஒன்று தான் மியூச்சுவல் திட்டம்.

 

இந்திய சந்தையில் மியூச்சுவல் ஃபண்ட்கள் திட்டங்கள் பல பரிமானங்களில் உள்ளது. இதன் பற்றி தெளிவாக புரிந்துக்கொள்ள இக்கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும்.

ஈக்விட்டி ஃபண்ட்

ஈக்விட்டி ஃபண்ட்

இந்த வகை பண்டுகள் முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் பணத்தில் பெரும் பகுதியை பங்குகளில் முதலீடு செய்கின்றன. இவற்றில் சந்தை அபாயங்கள் அதிகமிருப்பதொடு பெரும் பங்கு பணம் பங்குகளில் இருப்பதால் முதலீட்டளர்களும் நட்டத்தை சந்திக்க நேரிடும். அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கு இது உகந்தது.

கடன் தலீடுகள்

கடன் தலீடுகள்

டெப்ட் ஃபண்ட் எனப்படும் இவற்றில் பெரும்பாலான முதலீட்டுப் பணம் நிறுவனக்கடன், வங்கிகள் வழங்கும் கடன், பரிசுப் பொருட்கள் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் உள்ளிட்ட கடன் திட்டங்களில் இத்திட்டத்தின் மூலம் முதலீடு செய்யப்படும். சந்தை அபாயங்களை தவிர்க்க நினைப்பவர்களுக்கு உகந்த முதலீடு இது. இதில் வருமானமானது பெருமளவு நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

சமநிலை முதலீடுகள் (பேலன்ஸ்டு ஃபண்ட்)
 

சமநிலை முதலீடுகள் (பேலன்ஸ்டு ஃபண்ட்)

இந்த வகை திட்டங்களில் முதலீட்டுப் பணமானது பங்குகள் மற்றும் கடன்கள் ஆகிய இரண்டிலும் முதலீடு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் முதலீட்டை முதலில் பங்குகளிலும் பின்னர் கடன்களிலும் செய்கின்றனர். முடிவில் இதன் நோக்கம் நல்ல வருவாயை பெறுவதுதான். சந்தை நிலைகளுக்கேற்ப அவ்வப்போது முதலீட்டு உக்திகளை மாற்றுவது இதில் பொதுவான விஷயம். இது குறித்து மேலும் விவரமறிய பேலன்ஸுடு ஃபண்ட் குறித்த தகவல்களைப் படியுங்கள்.

பணச்சந்தை முதலீடுகள்

பணச்சந்தை முதலீடுகள்

பணச்சந்தை முதலீடுகள் எளிதில் மாற்றத்தக்க முதலீடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஒரு பெரும் தொகையை பாதுகாப்பான குறுகிய கால வைப்புப் பத்திரங்கள், கருவூல மற்றும் வணிகப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இவை பெரும்பாலும் குறுகிய காலம் கொண்டவையாக இருக்கும்.

அன்பளிப்புப் பத்திரங்கள் அல்லது முதலீடுகள்

அன்பளிப்புப் பத்திரங்கள் அல்லது முதலீடுகள்

இவை மிகவும் பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்று. பெரும்பாலும் இவை அரசு கடன் பத்திர முதலீடுகளாக இருக்கும். அரசு உத்திரவாதமாக இருப்பதால் மிகவும் பாதுகாப்பான முதலீடாக இவை கருதப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Types of mutual funds in India

we are trying to make it as simple as possible in explaining to you the different types of mutual funds.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X