முதல் முறையாக ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யப் போறீங்களா? இத படிச்சிட்டு போங்க பாஸ்

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இப்போதெல்லாம் மக்கள் தங்கள் சேமிப்புகளை பெரும்பாலும் வீடு அல்லது மனை வாங்குவதில்தான் முதலீடு செய்கிறார்கள். மற்ற எல்லாவற்றையும் விட ரியல் எஸ்டேட் மார்க்கெட் மட்டுமே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே போகிறது.

 

'வீடு வாங்குங்கோ, மனை வாங்குங்கோ' என்று ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரும் தற்போது நிறையவே கூவிக் கூவி விற்பனை செய்து வருகின்றனர். டி.வி.க்களில் பெருகி வரும் விளம்பரங்களே இதற்கு சாட்சி.

பல லட்சம் அல்லது கோடிகளை கொட்டி முதலீடு செய்யும் நாம், இதில் உள்ள பிரச்சனை மற்றும் அபத்துகளை பற்றிய தெரிந்துக்கொள்ள வேண்டும். சரி ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் முன் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமானவை சில உண்டு, இதை பற்றி தொடர்ந்து ஸ்லைடரில் பார்க்கலாம்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இடம் வாங்கும்போது மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். கொஞ்சம் ஏமாந்தாலும் போதும், உங்கள் பணத்தில் வாங்கிய வீடு அல்லது மனை வேறொருவரின் பெயருக்குக் கைமாறி விடும் வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. இதுபோல், வேறு பல ரிஸ்க்குகளும் இதில் உள்ளன.

புதிதாக இடம் வாங்கச் செல்பவர்களுக்கான சில டிப்ஸ்களை இங்கே வழங்குகிறோம். ஹேப்பி பையிங் ஹோம் ஸ்வீட் ஹோம்!!

முக்கியமான முடிவுகள்

முக்கியமான முடிவுகள்

பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை ஒரு பெரிய விஷயத்தில் முதலீடு செய்யப் போகிறீர்கள். எனவே வாழ்க்கையில் நீங்கள் எடுத்திருக்கும் முக்கிய முடிவு இது. வீடு அல்லது மனை வாங்குவதற்கு முன் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து முடிவெடுக்க வேண்டும். சின்ன சந்தேகம் வந்தாலும், படு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

சரியான இடம், விலை
 

சரியான இடம், விலை

எந்த இடத்தில் வீடு அல்லது மனை வாங்குகிறீர்கள், அதன் விலை எவ்வளவு என்பவை உள்ளிட்ட விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

முதலீடு

முதலீடு

இடம் வாங்குவது என்பது பொதுவாகவே ஒரு நீண்ட கால முதலீடாகவே கருதப்படுகிறது. எனவே உங்களால் எவ்வளவு முதலீடு செய்ய முடியும் என்பதைத் தெளிவாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை, உங்கள் முதலீட்டில் ஒரு பகுதி வங்கிக் கடனாக இருந்தால், அதை நீங்கள் மாதந்தோறும் சமாளித்துக் கட்ட முடியுமா என்பதையும் ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

லாப நோக்கத்துடன் செயல்பட வேண்டும்

லாப நோக்கத்துடன் செயல்பட வேண்டும்

வாங்கிய இடத்தை குறுகிய காலத்தில் விற்க நேர்ந்தாலும், அதில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டுமே தவிர, எள்ளளவும் நஷ்டமாகி விடக் கூடாது.

ஒரு நல்ல உதவியாளர்

ஒரு நல்ல உதவியாளர்

இடம் வாங்குவதற்கென்று ஒரு நல்ல மேனேஜர் அல்லது உதவியாளரை நியமித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், இடம் வாங்குவதற்காக நிறைய நேரம் செலவாவதால், உங்களுடைய ரெகுலர் வேலை அல்லது பிசினஸ் பாதித்து விடக் கூடாது. இடம் வாங்குவதில் மற்றும் விற்பதில் அவர் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அதில் உள்ள அனைத்து விஷயங்களும் அவருக்கு அத்துப்படியாக இருக்க வேண்டியது அவசியம்.

மார்க்கெட் நிலவரம்

மார்க்கெட் நிலவரம்

ரியல் எஸ்டேட் மார்க்கெட்டின் அன்றாட நிலவரம் முழுவதையும் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். எந்த இடம், அதன் விலை, எவ்வளவு பேரம் பேசலாம், இடத்தின் மதிப்பு அடுத்த சில மாதங்களில் அல்லது வருடங்களில் எவ்வளவு உயரும், வரிகளெல்லாம் எவ்வளவு, இன்சூரன்ஸ் விஷயங்கள் என்று அனைத்து விவரங்களும் உங்கள் விரல் நுனியில் இருக்க வேண்டும்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

இடம் வாங்குவதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடனாக வாங்குகிறீர்களா? அந்த லோன் தொடர்பான அனைத்து விவரங்களையும் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த வகை லோனை எடுக்கலாம், கடனுக்கான வட்டித் தொகை எவ்வளவு, வரி விலக்கு உள்ளதா என்று பல அம்சங்களையும் அறிந்து, மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

ரீஃபைனான்ஸ்

ரீஃபைனான்ஸ்

நீங்கள் ஏற்கனவே ஒரு வீட்டுக்குச் சொந்தக்காரராக இருந்தால், அதைக் காட்டியே ரீஃபைனான்ஸ் செய்து ஒரு புதிய இடத்தை எளிதாக வாங்க முடியும். எந்தவிதமான இழுபறியும் இருக்காது. வரி விலக்கும் அதிகம் பெற முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investment Tips For First Time Home Buyers

Now a day, affordability housing and low interest rates are attracting investors to buy their first investment property. Many of them are feeling this as a good time to purchase, the verdict remained is to buy home or an investment property.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X