அட, வீட்டுக் கடன்களில் இத்தனை வகை உள்ளதா..!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: தனக்கென்று ஒரு வீடு வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்தியனின் முக்கியக் கனவாக உள்ளது. கடனை உடனை வாங்கியாவது ஒரு வீட்டைக் கட்டி விட வேண்டும் என்றே அனைவரும் நினைக்கிறோம்.

 

வீடு கட்ட அல்லது மனை வாங்கக் கடன் வாங்குவது இந்தக் காலத்தில் மிகவும் எளிது. வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் என்று அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு வீட்டுக் கடன்களை வழங்கிக் கொண்டுள்ளன.

வீட்டுக் கடன்களிலேயே பல வகையான திட்டங்களை வங்கிகள் அளித்து வருகின்றன.

வீடு கட்டுவதற்கான கடன்

வீடு கட்டுவதற்கான கடன்

நம் வீட்டைக் கட்டுவதற்காக வங்கிகளில் வீட்டின் மதிப்பு, வீட்டுப் பத்திரம், வீடு கட்டுவதற்கான ப்ளான் உள்ளிட்ட ஆவணங்களைப் பக்காவாக சமர்ப்பித்தால் போதும். இதன் உடன் வீட்டைக் கட்ட தோராயமாக எவ்வளவு செலவாகும் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்.

வீடு விரிவாக்கக் கடன்

வீடு விரிவாக்கக் கடன்

ஏற்கனவே நமக்குச் சொந்தமாக இருக்கும் வீட்டில், கூடுதலாக சில அறைகளைக் கட்டுவதற்கோ அல்லது மாடி வீடு எழுப்புவதற்கோ வங்கிகள் தரும் கடன்தான் இது. கட்டிய வீட்டில் சில மாறுதல்களைச் செய்வதற்கும் இந்த வகைக் கடன்தான் அளிக்கப்படுகிறது.

மாற்று வீட்டுக் கடன்
 

மாற்று வீட்டுக் கடன்

ஏற்கனவே வீட்டுக் கடன் மூலம் ஒரு வீட்டை வாங்கியிருக்கும் நாம், சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழித்து வேறு வீட்டை வாங்கி அங்கே குடியேறும்போது, இந்த வகைக் கடனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பழைய வீட்டுக் கடன் முழுவதும் இந்தப் புதிய வீட்டுக் கடனுக்கு மாற்றப்படும்.

பிரிட்ஜ் லோன்

பிரிட்ஜ் லோன்

ஏற்கனவே இருக்கும் வீட்டை விற்று விட்டு, புதிய வீடு வாங்க விரும்புபவர்கள் இந்தக் கடனை உபயோகித்துக் கொள்ளலாம். இதற்காக, பழைய வீட்டை யாராவது வாங்கும் வரை புதிய வீட்டை நீங்கள் வாங்குவதற்குக் காத்திருக்க வேண்டியதில்லை. பழைய வீட்டை வாங்குவது வரை, உங்கள் புதிய வீடு வாங்குவதற்கான செலவுகளை இந்தக் கடனே கவனித்துக் கொள்ளும்.

வீட்டு மனைக் கடன்

வீட்டு மனைக் கடன்

ஒரு வீட்டு மனையை வாங்கி, அதில் நீங்கள் பின்னாளில் வீடு கட்டப் போகிறீர்கள் என்றால், அதற்காக வழங்கப்படும் கடன்தான் இது. இந்தக் கடன் திட்டத்தின் மூலம் 85% வரை கடன் கிடைக்கும்.

வெளிநாட்டு இந்தியருக்கான வீட்டுக் கடன்

வெளிநாட்டு இந்தியருக்கான வீட்டுக் கடன்

வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்கள், இந்தியாவில் வீடு மற்றும் மனை வாங்க அல்லது வீடு கட்டுவதற்காக இந்தக் கடன் வழங்கப்படுகிறது.

வீட்டு வளர்ச்சிக் கடன்

வீட்டு வளர்ச்சிக் கடன்

ஏற்கனவே வைத்துள்ள சொந்த வீட்டில் நாம் மேற்கொள்ளவிருக்கும் சிறுசிறு ரிப்பேர்களுக்காக வழங்கப்படும் கடன் இது. வீட்டின் தரையை மாற்றி வேறு டைல்களைப் போடுவது, பெயிண்ட் அடிப்பது, குழாய் இணைப்புகளைச் சரி செய்வது, வயரிங் மாற்றுவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are Different Types of Home Loans in India?

Owning a home is dream for many Indians for others it may be renovating or reconstructing. Getting a home loan is a lot easier work these days. Before applying one needs to know their own requirement and apply for the suitable type of loan. Banks do offer different types of home loans for different needs.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X